அளவாய் குடித்து தெளிவாய் இருப்போர்

கடைசியாக ஆசிர்வதிக்கபட்ட சோம்பேறிகள் என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை பதிவிட்டேன். அதில் நான் மது அருந்துபவர்கள் எல்லோரையும் சாடவில்லை. குடிப்பவர்களுக்கு, அதிலேயே குளிப்பவர்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு.வாரத்திற்கு ஒரு முறை அல்லது விசேஷ தினங்களில், சிலர் தினம்தோறும் குடித்தாலும் அளவாக குடித்து பொண்டாட்டி, பிள்ளைகளுக்கு எந்தவித தொல்லையும் இல்லாமல். அவர்களின் தேவையும் பூர்த்தி செய்து தான் உண்டு, தன் குடியுண்டு இருப்பவர்கள் ஒரு வகை. அவர்களால் குடும்ப/சமூக அமைப்பிற்கு பாதிப்பு மிககுறைவு இன்னோரு ரகம் உண்டு கை, கால் எல்லாம் நல்லாதான் இருக்கும் ஆனால் சோம்பேறிதனத்துல வேலைக்கு போகாமல், தெருமுனை, பஸ் ஹோல்டு, கடைதெரு என சிலகுறிப்பிட்ட இடங்களில் மலம் கழிக்க போற மாடுலேஷன்ல குத்தவச்சு உக்காந்து ஒரு குரூப் வீண்கதை பேசிட்டு இருப்பானுக தெரியுமா? முற்று முழுதாக அந்த ஜந்துக்களை பற்றிய பதிவுதான். ஆசிர்வதிக்கபட்டசோம்பேறிகள் சமூக அக்கரையில் நேரம் ஒதுக்கி எழுதிய கட்டுரை. எனக்கு தெரியும்.சிலர் உங்களை சாடியதாக நினைத்து...