Posts

Showing posts from July 24, 2021

ஓருடல்

நேற்று இருவரும் வார்த்தைகளால் ஒருவரை ஒருவர் கடுமையாகத்  தாக்கிக்கொண்டோம். சோர்ந்து, காயத்துடன் வெறுத்து ஒதுங்கிச் சென்றோம். அவ்வளவு தான், முடித்துக்கொள்ளலாம் என்று தீர்மானித்துக் கொண்டேன். பிறகு மறந்து விட்டோம். நான் உன்னை இப்பொழுது முத்தமிட்டுக் கொண்டிருக்கிறேன். 07-24-2021

பசி

அன்று முழு நாள் பட்டினி நீரை மண்டி விட்டு படுத்திருந்தோம். சாமத்தில் அப்பா வந்தார், கையிலிருந்த கால் கிலோ  மாவை அம்மாவிடம் நீட்டினார். அவள் விறகடுப்பில் புகைந்து கொண்டே ரொட்டிச் சுட்டாள். சம்பல் செய்யத் தேங்காயில்லை. வெங்காயம், புளி, மீந்து போயிருந்த இரண்டு காய்ந்த மிளகாய் வைத்து ஏதோ அம்மியில் மாயம் செய்தாள். அதற்கு பிறகு, நான் அது போன்ற ஒரு சுவையான உணவை எங்குமே சாப்பிட்டதில்லை. 23-07-2021

சபிக்கப்பட்டவன்

காதலை நான் போகிக்க நினைக்கும் போதெல்லாம் என்னை வன்புணர்ந்து தூக்கியெறிந்து விடுகிறது. சபிக்கப்பட்ட காதலின் தொடர்ச்சியாக...., உன் முன்னால் நான் உருக்குலைந்துக் கொண்டிருக்கிறேன். 22-07-2021

சார்பட்டா (2021)

Image
  Rocky Series முதல் Cinderella Man வரைக்கும் புகழ் பெற்ற அத்தனை குத்துச் சண்டை படங்களையும் பார்த்து விட்டேன். ட்ரைலர் பார்த்து ஏமாந்து போன சமீபத்திய இந்தி படமான Toofaan (2021) முதற்கொண்டு. பாக்ஸிங்கில் செண்டிமெண்டை சேர்ப்பதற்கு பதில், செண்டிமெண்டில் பாக்ஸிங்கை மூழ்கடித்து, ஏமாற்றி விட்டார்கள். பொதுவாக குத்துச் சண்டைப் படங்களுக்கு ஒரு பாணி உண்டு. நாயகன் எப்படிப்பட்ட பலசாலியையும் அடித்து வீழ்த்தி விடும் அளவுக்கு திறமையானவனாக இருப்பான். ஆனால் மாஸ்டர் அவனை உடனே சேர்த்துக் கொள்ளாமல் அலைய விடுவார். பின்பு அவன் திறமையைக் கண்டு நம்பிக்கை கொண்டு, சேர்த்துக் கொள்வார். கடுமையாகப் பயிற்சி அளிப்பார். முடிவில் எப்படியும் ஹீரோ வில்லனை வீழ்த்தி விடுவான் என்று நமக்கு நன்றாகத் தெரியும். அந்த இடத்தில் ஒரு தடங்கல் அல்லது பெரும் பிரச்சனை ஹீரோவுக்கு வரும். அதை தாண்டி வரவே முடியாது. அப்படியே நாமும் நம்புவோம். அந்த இடரை எப்படி ஹீரோ எதிர்கொண்டு சமாளித்து வெற்றி பெறுகிறான் என்பது தான் படத்தின் உச்சக்கட்டம். இந்த இடத்தில் தான் இயக்குநரின் திறமை இருக்கிறது. இங்கு சறுக்கினால் மொத்த படமும்  'சப்