பாலைவன குறிப்புகள்

இந்த பாலை நிலம் பலவிஷயங்களை கற்று தந்தது. அதில் ஒன்றுதான் மரங்களையும், புல்நிலங்களையும், பட்சிகளையும் நேசிப்பது. பாலைவன பசுந்தரையேன்ற ஒன்றை பற்றி கேள்விபட்டுருக்கீங்களா? கண்ணுக்கு எட்டிய தூரம் மட்டும் வெறும் மணல் குன்றுகளால் நிரம்பியிருக்கும் பாலைவனத்தில் கொடை காலத்தில் சுட்டெரிக்கும் வெயில். வேறும் வார்த்தை ஜாலம் அல்ல கற்பனை கூட செய்து பார்க்கமுடியாத அளவுக்கு மோசமான தட்ப வெப்பநிலை. (இதே பாலைநிலம் வருடத்தில் பாதிநாட்களில் குளிர்காலத்தையும் சந்திக்கும்) அப்படிபட்ட இடத்தில் இயற்கையாக நீரூற்று தோன்றி அதை சுற்றி மட்டும் மரங்களும், சிறு செடி கொடிகளும், புற்தரைகளும், பட்சிகளும் நிறைந்து பச்சைப்பசேலாக காட்சிதரும். வழித்தவறியவர்களுக்கும், பாலைநில ஜீவராசிகளுக்கும் அதுதான் பூலோகசொர்க்கம். அதன் எழிலை வார்த்தை கொண்டு விவரிக்க முடியாது. நிஜத்தில் நான் பார்த்தது இல்லை. ஆனால் ஹாலிவுட் படங்களில் பார்த்து ரசித்தது உண்டு. நான் வசிக்கும் அல்-கோபார் நகரத்தில் பிரமாண்டமான கட்டிடங்களும், நிலமே தெரியாதபடி எங்கும் தார் அல்லது கான்க்ரீட் கொண்டு அமைக்கபட்ட வீதிகளும். நொடிக்கு ஒரு தடவை நம்...