Posts

Showing posts from April 16, 2020

ஆதிமனிதனின் புணர்ச்சி

Image
ஆதியில் கற்கால மனிதர்கள் சிறு சிறு கூட்டமாக சேர்ந்து வாழ்ந்தார்கள்.  அக்கூட்டத்திலுள்ள ஒரு ஆண் விரும்பிய எந்த பெண்ணுடன் வேண்டுமென்றாலும் உறவுக் கொள்ளலாம். அதே போல  பெண்ணும் அக்கூட்டத்திலுள்ள எந்த ஆணுடனும் உறவுக் கொள்ளமுடியும். அதனால் எது தனக்கு பிறந்த பிள்ளையென்று ஒரு ஆணுக்கு சரியாக தெரியாது. அவன் எல்லா பிள்ளைகளையும் சமமாக பாவித்து உணவு, பாதுகாப்பு அளித்து பார்த்துக் கொண்டான்.  அச்சமூகத்தில் ஓர் ஆதிவாசி பெண் கருவுற்றிருக்கும் தருணத்தில் தான் தீவிரமாக, ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களுடனும் புணர்ச்சியில்  ஈடுபடுவாள். அதற்கு காரணம்  காமவேட்கையல்ல, பல ஆண்களின் கவனிப்பும் பாதுகாப்பும் தன் பிள்ளைக்கு கிடைக்கும் என்பதே. அக்காலத்தில்  பல ஆண்களின் விந்துக்கள் பெண்ணின் கருவறையில் உள்ள முட்டையுடன் சேரும் பொழுதுதான் குழந்தை உருவாகுவதாக நம்பினார்கள். அதனால் ஒரு சிறந்த வேட்டைக்காரன், புல்லாங்குழல் வாசிப்பவன், அறிவாளி, நற்குணங்களை உடையவன், பலசாலியேன தேர்ந்தெடுத்து உறவுக் கொள்வாள். தனக்கு பிறக்கப் போகும் குழந்தைக்கு இந்த திறன்கள் எல்லாம் வந்துவிடும் என்று உறுதியாக நம்பினாள்.  ந

வேளாண்மை புரட்சியும், வேட்டையாடி வாழ்கையும்

Image
 வேளாண்மை புரட்சிக்கு பிறகு  மனித இனம் பல்கி பெருகி சிறப்பாக வளர்ச்சியடைந்தது என்றாலும். வேளாண்மை புரட்சி என்பது உண்மையில் நமக்கு நாமே வைத்து கொண்ட ஒரு ஆப்புதான். காரணம் நாம் காட்டில் வேட்டையாடிகளாக வாழ்ந்த பொழுது அடுத்த நாளை பற்றிய கவலையில்லை. பல வகையான விலங்குகளை வேட்டையாடியும், காய் கனிகளை பறித்துண்டும் வாழ்ந்தோம். ஒரு வேலை அன்று எதுவும் கிடைக்காமல் பட்டினியாக இருந்தாலும் மறுநாள் எதோ ஒன்றை பெற முடிந்தது. வாழ்கை கடுமையா இருந்தாலும் சுகந்திரமாகவும் நிம்மதியாகவும்  உலாவ முடிந்தது.  மனிதன் வேட்டைச் சமூகத்திலிருந்து  விலகி வேளாண்மை செய்ய ஆரம்பித்த பிறகு நிலத்தை உழுது பண்படுத்தி,  பயிரை விதைத்து, தினமும் அதற்கு நீர் பாய்ச்சி, களையகற்றி, பிறவிலங்குகளிடம் இருந்து பாதுகாத்து என அறுவடை காலம் மட்டும் இரவு பகல் பாராது மிக கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது.  அத்துடன் முடியவில்லை. அறுவடைக்கு பிறகு தானிய களஞ்சியத்தை பிற  இனக்குழுக்களிடம் இருந்து பாதுகாக்க  கடும் பிரயத்தனபடவேண்டும்.  பலசாலியான ஒரு இனக்குழு திடீரென தாக்கும் போது எல்லாவற்றையும்  விட்டு பின்வாங்கவும் முடியாது. 

புது எழுத்தாளரும் புத்தம் புது எழுத்தாளரும்

குறுங்கதை   Autofiction  ஒரு புது எழுத்தாளரிடம் நான் எழுதிய சில கதைளை கொடுத்து  "இந்த பாணியில் ஒரு புத்தகம் எழுதினால் நல்லாயிருக்குமா? வாசித்து உங்கள் கருத்தை சொல்லுங்கனு" கேட்டேன். பல நினைவூட்டலுக்கு பிறகு அவர் வாசித்துவிட்டு கூப்பிட்டிருந்தார். நானும் ஆவலுடன் போயிருந்தேன். பு.எழுத்தாளர்:  என்ன தோழர் மயிரு மாதிரி எழுதி வச்சிருக்கிங்க? இதெல்லாம் தூக்கி குப்பையிலே போட்டுட்டு புதுசா எழுதுங்க என்பதை ரொம்ப நாசூக்கா நாகரிகமா சொன்னார். பிறகு " இன்னும் இந்த காதல் கேசத்தை விட்டால் வேற எதும் இல்லையா? எத்தனையோ பேர் இதை எழுதி, எழுதி கிழிச்சு தொங்க போட்டுட்டாங்க தோழர்?  எனக்கு தெரியும் உங்களுக்கு திறமை இருக்கு இதை அப்பிடியே உங்க தளவாணிக்கு கீழே வச்சிட்டு வேற  எதாச்சும் புதுசா ப்ரஷ் கன்டென்ட் தேடி எழுதுங்க, என்ன சொல்லுறது  புரியுதா?  நான்:  இல்லை...., சார் புதுசா எழுதினாலும் இப்படிதான் எழுதவரும். பு.எழுத்தாளர்:  தோழர் உங்களால முடியும், எனக்கு தெரியும் யோசிங்க, நல்லா யோசிங்க ஒன்னும் அவசரமில்லை  நான்:  என் வயசுக்கு அனுபவத்திற்கும் எது  வருதோ அதை தா

மோசமானவன் மனிதன்

Image
தப்பிப்பிழைத்தல் வரமா, சாபமா ? பரிணாமத்தில் ஒரு உயிரினத்தின் வெற்றி அதன் மரபஅலகின் எண்ணிக்கையை கொண்டு அளக்கபடுகிறது. அதாவது  அதிகப்படியான எண்ணிக்கையை  கொண்ட இனம் வெற்றியடைந்ததாக கருதப்படும். ஆனால் அந்த வெற்றி தனிப்பட்ட ரீதியாக ஒரு உயிரி அடைந்த துன்பத்தை பற்றி கணக்கில் கொள்ளாது.  டயனோசர்கள் இன்று பூமியிலிருந்து  முற்று முழுதாக அழித்து போய்விட்ட  ஓர் உயிரினம். அதன் உயிர்ப்பான மரபு அலகுகள் எதுவும் இப்பொழுது  மிச்சமில்லை. இயற்கையையுடன்  போராட திராணியற்று அழிந்து போய்விட்டது. ஆனால் வாழ்ந்த  வரைக்கும் சுகந்திரமாக காட்டில் சுற்றி திரிந்து தனக்கு பிடித்த இணையுடன்  சேர்ந்து வாழமுடிந்தது. அதே நேரம் இன்று பண்ணை விலங்காக உலகில் அதிகமா இருக்கும் மாட்டின் நிலைமையை பற்றி யோசித்து பாருங்கள். இன்றைய திகதியில் காட்டிலிருக்கும் எந்த ஒரு பாலுட்டியை விடவும் எண்ணிக்கையில் பலமடங்கு அதிகம். அதன் வாழ்வுதான் எத்தனை துன்பகரமாக மாறிவிட்டது.  ஆதியில் தன் இனத்துடன் சேர்ந்து பசுமையான காட்டில் சுற்றி திரிந்தது  போல அதனால் இப்பொழுது வாழமுடியாது.  வாழ்வும், சாவும் அந்த பண்ணையின் கூரையி

கோதுமையை நாம் வளர்க்கவில்லை அதுதான் நம்மை வளர்க்க வைத்தது.

Image
மரபு அலகுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் பார்த்தால். கோதுமை சிறப்பாக வெற்றியடையந்த ஒரு தாவர இனமாகும். இன்று பூமியின் மேற்பரப்பில் இதன் அளவுக்கு வேறு எந்த தாவரமும் பல்கிபெருகியதில்லை. மனிதனால் பல லட்சம் கிலோமீட்டர் தூரத்துக்கு பயிரிடபடுகிறது.  கரடுமுரடான நிலத்தை கோதுமையின் வளர்ச்சிக்கு உகந்தவாறு தயார்படுத்தும் போது அந்த நிலத்தில் பூர்விகமாகயிருந்த மற்றைய மரங்களையும், தாவரங்களையும் அழித்து. நிலத்தை உழுது பண்படுத்தி, விதைத்து, நீர்ப்பாய்ச்சி, களையகற்றி, மருந்து தெளித்து, பறவைகள், விலங்குகளிடமிருந்து பாதுகாத்து என  அறுவடைக்காலம் மட்டும் கடுமையாக உழைத்து கொண்டிருக்கிறோம்.  அதன் தேவையும் நாள்பட நாள்பட அதிகரித்துதான் செல்கிறது. நாம் கோதுமையிடம் இருந்து உணவை பெற்று கொள்கிறோம். அதேநேரம் கோதுமையும் நம்மை சிறப்பாக பயன்படுத்தி  பல்கிபெருகி கொண்டிருக்கிறது.  பூமியில் இன்றைய திகதியில் மிகவும் வெற்றியடைந்த தாவரம் கோதுமைதான். தன் வழியில் குறுக்கிட்ட எல்லா எதிரிகளையும், போட்டியாளர்களையும் மனிதனை கொண்டு அழித்து பெருகி கொண்டிருக்கிறது. நாம் அதற்கு சேவகம் செய்து கொண்டிருக்கிற

பிரேக் அப் குறுங்கதைகள்

Image
ஆசிரியர்: அராத்து அராத்து எனக்கு "நீயா நானாவின்"  மூலமாக தான் அறிமுகமானார். அவர் எழுத்தாளார் என்பதும் சாருவின்  நெருங்கிய நண்பர் என்பதும் சமீபத்தில் தான் தெரியவந்தது. அவரின் பேச்சு, சிந்தனை எனக்கு பிடிக்கும். சில  நேரங்களில் உளறுவது சுத்தமாக  பிடிக்காது. தொடர்ந்து தீவிர இலக்கியத்தை படித்தபடியால், கொஞ்சம் கணம் குறைந்ததாக ஏதாவது வாசிப்போம்  என்று தேடிய பொழுது இந்த புத்தகம் கண்ணில்பட்டது. அட்டைபடம் வேறு  அதை உறுதிப்படுத்திற்று. தலைப்பிலேயே எதை பற்றிய புத்தகம் என்பதை அனுமானித்துக் கொண்டேன். படிக்க ஆரம்பித்தால் சுவாரஸ்யத்திற்கு குறைவில்லை. அராத்தின் எழுத்தில் உள்ள டார்க் ஹியூமர் எனக்கு பிடிக்கும். அத்துடன் இதில் காமமும் கை கோர்த்துள்ளது ! விடலை பருவத்தில் மறைத்து வைத்து  படித்த "பிரியா"  பத்திரிகையின் நினைவு வந்து போனது.  ஆண், பெண் உறவுசிக்கல் பிறகு  பிரேக் அப் இதுதான் ஒவ்வொரு கதையும். சில உண்மை மாந்தர்களின் கதைகளை தான் புனைந்து உள்ளதாக முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். புத்தகம் முழுவதும்  வகை வகையான காதல் பிரிவுகளை பார்க்க

இயற்கையை துஷ்பிரயோகம் செய்த முன்னோர்கள்.

Image
நம் முன்னோர்கள் இயற்கையுடன் இசைந்து வாழ்ந்தார்கள். இன்று நாம் இயற்கையை சுரண்டி அழித்து கொண்டிருக்கிறோம்.  இதில் இரண்டாவதாக குறிப்பிட்ட விடயம் உண்மை. அது நமக்கே நன்கு தெரியும்  ஆனால் முன்னோர்கள் இயற்கையுடன் இசைந்து வாழ்ந்தார்கள் என்பது சுத்த பொய்! அதிர்ச்சியாக இருக்கிறதா? மனிதகுல வரலாற்றை திருப்பி பார்த்தால் நான் சொல்வது புரியும். செப்பியன்கள் ஆப்பிரிக்க கண்டத்திலிருந்து அவுஸ்திரேலியா, அமெரிக்க கண்டங்களை நோக்கி  பயணித்து,  நிரந்தரமா தங்கி வாழஆரம்பித்த பிறகு அதுவரை அங்கு பாரம்பரியமாக வாழ்ந்து வந்த தாவரங்களும், இராட்சத விலங்குகளும்  சில ஆண்டுகளுக்கு பிறகு பூண்டோடு அழிந்து போயின.  வரலாற்று ஆய்வாளர்கள் இயற்கை அனர்த்தங்களின் மேல் பழியை  போட்டாலும். நாம் ஒன்றும் அத்தனை நல்லவர்கள் கிடையாது. சில நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூமியில் பனியுகம் ஏற்படும். பல ஆண்டுகளுக்கு பூமியின் மேற்பரப்பு பனியினால் போர்த்தப்பட்டிருக்கும். அந்த நிகழ்வுதான் சில பூதாகரமான விலங்குகளின்/தாவரங்களின் அழிவிற்கு காரணமென  ஆராட்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள். ஆனால் அதே காலக்கட்டத்தில் கடலில் வாழ

Dia (தியா) / 2020

Image
கன்னடம் / 2020 தொடர்ச்சியாக இந்த படம் தொடர்பான  சில பதிவுகளை பார்க்க முடிந்தது.  அதில் சிலர் "ரொம்ப பீல் பண்ண வச்சிடுச்சினு" எல்லாம் பதிவிட்டிருந்தாங்க. படம் கைவசம் இருந்தும். அழுவாச்சி படம் என்பதாலேயே பார்ப்பதை தவிர்த்து கொண்டிருந்தேன். சில படங்கள் நிஜமாவே தூக்கத்தை கெடுத்துவிடும். எனக்கு அந்த மனநிலையில் மாட்டிக்கொள்ள விருப்பமில்லை. ஆனால் இப்படியே இருந்தால் அருமையான படங்களை எல்லா பார்க்கவே முடியாது. அதனால் நேற்று ஒருவாறு பார்த்துவிட்டேன். காதல் அழகான உணர்வு. அப்பொழுது எம் மனதில் நிகழும் ரசவாதத்தில்  சொர்க்கத்திற்கும் மேலான இன்பமயமான உலகில் சஞ்சரித்து கொண்டிருப்போம். இவையெல்லாம் சரியா போகும் மட்டும்தான். எதோ ஒரு காரணத்தால் அது உடையும் பொழுது  வாழ்கையே புரட்டிப் போற்றுவிடும். அதுவரை சொர்க்கமா தெரிந்த உலகம்  ஒரு நொடியில் நரகமாகிடும். அதிலிருந்து மீண்டு வருபவர்கள் ஒரு சிலரே.  சிலர் வாழ்கையே முடித்துக்கொள்வார்கள்.  வாழ்வை மிக பக்குவமாக அணுகுபவர்கள் கூட சுக்குநூறாக உடைந்து போய்விடுவார்கள். எப்பேர்ப்பட்டவனையும் கிறுக்கனாக்கிடும் சக்தி காதலுக்கு உண

Racing Extinction 2015 (Documentary)

Image
Racing Extinction என்னும் ஆவணப்படம் பார்த்தேன். அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்கள் பற்றியது. அதில் ஓர் காட்சியில் உயிரினங்களின் ஓசையை  பதிவுசெய்து சேகரித்து ஆய்வு செய்யும்  நிறுவனம்; திமிங்கிலம் முதற்கொண்டு, சிறுத்தை, பறவைகள், சீல்வண்டு, சுறா, திமிங்கலம் என எல்லாவற்றின் ஒலியையும் சேகரித்து ஆய்வு செய்கிறார்கள். அவர்கள் அந்த சங்கேதங்களை ஓசை என்று கூட விழிக்கவில்லை. சங்கீதம் என்கிறார்கள். உண்மைதான் சில நொடிகள் கண்களை மூடிக்கொண்டு கேட்டால் இனிமையான இசை கோர்வைதான். அதற்கு முன்னால்  மொசார்ட், பீத்தோவன் எல்லாம் தோற்றுவிடுவார்கள். இயற்கையே பாடிக்கொண்டிருக்கிறது. ஏனொ நமக்குதான் அதை ஒரு நிமிடம் காது கொடுத்து கேட்க பொறுமையில்லை.  அதில் Kauaʻi ʻōʻō என்னும் ஓர் அழிந்து  வரும் பறவை இனத்தை சேர்ந்த குருவியொன்றின் கிச்சலை ஒலிக்க செய்கிறார். அதுவோர் ஆண் பறவை,  ஓசை எழுப்பி பெண்துணையை தேடுகிறது. என்று விபரிக்கின்றார். இடைவெளி விட்டு, விட்டு இரண்டு தடவை பாடுகிறது. அதற்கு பதிலாக இசைப்பாட்டு கேட்கவில்லை.  சில பறவை இனங்கள் பாடித்தான் பெண் துணையை தேடும். பிறகு அந்த பறவை 

Tiny Giants 3D 2014 (Documentary)

Image
வேறும் 43 நிமிடங்களே ஓடக்கூடிய ஓர் ஆவணப்படம். ஆனால் ஹாலிவுட்  ஆக்க்ஷன், திரில்லர் படம் பார்த்த உணர்வு. இந்த கதையில் இரண்டு நாயகர்கள். அதே நேரம் பாம்பு, ஆந்தை, பருந்து, ராட்சத நச்சு சிலந்தி, ஒரே கடியில் வளர்ந்த மனிதனையே கொன்று விடக்கூடிய கடும் விஷம் கொண்ட வெள்ளை தேள், பூரான் என நிறைய வில்லன்கள்.  வேவ்வேறான இரண்டு சூழலில் கதை நிகழ்கின்றது. ஒன்று ஒர்க் மரங்கள் நிறைந்த பசுமையான அதேகணம் ஆபத்துகள் நிறைந்த காட்டில் வாழும்  ஓர் இளம் அணிலையும் மற்றையது  ஈவிரக்கமே இல்லாத பாலைவனத்தில் வாழும் ஓர் சிறிய வகை எலியினை சுற்றியும்.  மூன்று இன்ச் உயரமான ஹீரோவின் பார்வையில் உலகம் எவ்வளவு பிரமாண்டமாக தெரிகிறது. இதை  சிறப்பாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். தரையில் இருந்து எலியின் / அணிலின் கண்மட்டத்தில் படமாக்கபட்டவிதம் நமக்கு மினியேச்சர் உலகத்தை காண்பிக்கிறது. வண்ண குடைக்காலான்கள், விழுந்து கிடக்கும் ஒர்க் மரத்தின் சருகுகள், வித்துக்கள் என கண்கவர் அற்புத உலகத்திற்கே அழைத்து போகிறது. புலப்படும்  அத்தனையும் கொள்ளை அழகு. பின்னணி இசைக்கோர்வையும் சிறப்பு. அதே நேரம் ஆபத்திற

கானல் நீர் / 2019

Image
இந்த நிலம் யாருக்கு சொந்தம் ? உலக சினிமாவிற்கு கொடுக்கும் முக்கியதுவத்தை. சிறிய முதலீட்டில் நம் தமிழ் சினிமாவிலிருந்து வெளிவரும்  நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கும் வழங்க வேண்டும் என்பதை நான் மனதில் பதித்து கொண்டுள்ளேன். ஒரு சிறுபதிவை சரி எழுதி அதை பற்றிய அதிர்வை எல்லோரிடத்திலும் கொண்டு சேர்க்க வேண்டும். அந்த வகையில் சமீபத்தில்  நான் பார்த்த படம் "கானல் நீர்" , மலையாள மூலத்திலிருந்து தமிழாக்கம் செய்யபட்ட படைப்பு. மிக இயல்பான சாதாரண கதைதான்  ஓர் படம் தொடங்கியது முதல் முடிவு  மட்டும் உங்களை சோர்வடையவோ, சலிப்படையவோ செய்யாமல்  இருக்கையில் அமர்த்தி  வைத்திருந்தாலே பேரும் வெற்றிதான். அந்த கலை அத்தனை இலகுவாக எல்லோருக்கும் வசப்பட்டுவிடாது. உங்கள் பொறுமையை சோதித்த படுமோசமான ஓர் படத்தை  பார்த்த தருணத்தை மனதில் மீட்டு பாருங்கள் நான் சொல்வது புரியும்.  விளிம்புநிலை மனிதர்களை பற்றிய கதை. நிலம் இல்லாத எளியவர்களின் போராட்டம்தான் இந்த படம். சொந்தவீடு என்பது ஒவ்வொரு மனிதனினதும்  வாழ்நாள் கனவு. அதை கடந்து வாழமுடிந்துவிட்டால் அவர்கள் ஞானிதான்.  எந்த

Togo / 2019

Image
(The untold true story) No Spoilers 1925 ம் ஆண்டு அலெக்ஸாவில் உள்ள  நோம் என்ற சிறிய நகரத்தில் diphtheria என்னும் தோற்று நோய் தீவிரமாக பரவி நிறைய குழந்தைகள் பாதிக்கபடுகிறார்கள். அதற்கு தடுப்பு மருந்து கிட்டத்தட்ட 700 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள வேறு ஒரு இடத்தில் உள்ளது. மோசமான காலநிலை. பேரும்பனிபுயல் ஒன்று வரக்கூடும் என்றபடியால் விமானம் மூலமாகவோ, இரயில் மூலமாகவோ கொண்டு  வரமுடியாத நிலை. ஒரு பக்கம் நோயின் தாக்கமும் தீவிரமடைந்து கொண்டு வருகிறது. காலநிலை சரியாக மட்டும் பார்த்து கொண்டிருந்தால் குழந்தைகளை மொத்தமாக பறிகொடுக்க வேண்டியது தான். ஊரின் மேயர் தலைமையில், மருத்துவர், பிற முக்கிய பிரமுகர்கள், மக்களின் பிரதிநிகள், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் எல்லோரும் கூடி அவரச கூட்டம் நடத்துகிறார்கள்.   Dog Sled என்னும் நாய்களினால் இழுத்து செல்லப்படும் சறுக்கு வண்டியின் மூலமாக மட்டுமே பனிபாதையை கடந்து மருந்தை கொண்டு வந்து சேர்க்க முடியும். இந்த மாதிரியான மோசமான வானிலை இருக்கும் போது பயணம் செய்வது உயிரை காவுவாங்கிவிட கூடும். இருந்தாலும் Dog Sled செலு

The Intruder / 2019

Image
அழையா விருந்தாளி  இரண்டு மணிநேரத்தில் தரமான த்ரில்  படம் பார்க்க நினைத்தால் இந்த படத்தை பாருங்கள். மனம் அமைதியில்லாமல் குழப்பமான மனநிலையில் இருந்தால் தவிர்த்து விடுவது நல்லது. மனதை பதற்றத்திலேயே வைத்திருக்க கூடிய கதை என்பதால் சொல்கிறேன். பாண்டஸியாக கதை நகர்ந்தால், ஸ்லேசர் (Slasher) ரக படங்களை கூட இலகுவாக பார்த்து விடலாம். நிஜத்திற்கு அருகில் நகரும் இம்மாதிரியான கதைகள் ஏற்படுத்தும் தாக்கம் அதிகம். சாதாரண கதைதான். இயக்குனர் சொல்லிய விதத்தில் மிரட்டி விட்டார். படம் தொடக்கம் முதலே நம்மை எதோ ஒரு பதற்றத்திலேயே வைத்திருக்கும். ஸ்கோட்டும், எனியும் புதிதாய் திருமணம் செய்து கொண்ட இளம் தம்பதி. தங்கள் குடும்ப வாழ்க்கையை இனிதே ஆரம்பிக்க கிராமப்புறத்தில் உள்ள ஒரு அழகான பழைய வீட்டை விலைக்கு வாங்குகிறார்கள். அது ஊரின் ஒதுக்கு புறத்தில், காட்டிற்கு அருகாமையில் அமைத்துள்ள வீடு. நீரோடை, பசுமையான மரங்கள், பச்சைபசேலென இருக்கும் புல்வெளி, என இயற்கை எழில் கொஞ்சும் அற்புதமான இடம். பார்த்த எவருக்கும் உடனே பிடித்து போகும். என்ன ஒரு குறை, அக்கம் பக்கத்தில் யாரும் இல்லை. மற்றும்படி தரமான வீடு. இவர

சாமிக்கண்ணும் நானும் !

Image
பள்ளிகாலத்தில் ஒரு நண்பன் இருந்தான். சிறந்த பக்திமான், ஒழுக்க சீலன், அநியாயத்திற்கு நல்லவன். இப்படி பல சிறப்புகளை உடையவன்.  உதாரணத்திற்கு ஓர் சம்பவத்தை குறிப்பிடுகிறேன். அப்பொழுது நான் சொல்வது உங்களுக்கு புரியும். ஒரு நாள் ரஜனிகாந்தின் "சிவாஜி" படம் வெளியான புதிதில் பார்ப்பதற்கு நானும், அந்த  நல்லவனும், இன்னொரு நண்பனும் தியேட்டர் போயிருந்தோம்.  " பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல் புன்னகையோ மவ்வல் மவ்வல்" பாட்டிற்கு ஸ்ரேயா சிக்கனமாய் மறைக்கபட்ட மேலாடையில் கொங்கைகள் குலுங்க, குலுங்க ஆடிக்கொண்டிருந்ததை,  இந்திரியம் வெளியேறாத குறையாக  வாயை ஆ..! வேன பிளந்து ரசித்து கொண்டிருந்தோன். பிரமாண்ட திரையில் அந்த அழகியின் வளைவு நெளிவுகள், ஏற்ற இறக்கங்கள் பிஷ்டத்தின் மென் அசைவுகள் எல்லாம் சேர்ந்து என்னை கிறங்கடித்து கொண்டிருந்தது. நான் பாடல் காட்சியின் ஒரு பிரேமை கூட தவறவிடுவதாக இல்லை. இடைக்கிடையில் ரஜனி தனியே ஆடும் போதுமட்டும் கண்களை சிமிட்டி கொண்டோன். தற்செயலாக நான் திரும்பி என்பக்கத்தில் அமர்ந்திருந்த நல்லவனை பார்த்தேன். தலையை காணவில்லை. எங்கே என தேடிய பொழுது

வாயிலேயே வெட்டு

குறுங்கதை டேய் பொண்ணு போட்டோ வாட்ஸாப் பண்ணிருந்தேனே பாத்தியா?  பாத்தேன், நீ போட்டோவை மாத்தி அனுப்பிட்டமா 'சரவணன் மீனாட்சி'  கதையில வாரமாதிரி ஒரு பொண்ணுட போட்டோதான் வந்துருந்துச்சி  சிகப்பு சாரி கட்டுன போட்டோ தானே? ஆமா, பாதி செல்ஃபீ.  அதுதாண்டா பொண்ணு.... யம்மா... சரியாதான் சொல்லுறியா?  அது என்னமோ சேலிப்ரட்டி மாதிரிலே இருக்கு. என்னதான் மொபைல எடிட் பண்ணிருத்தாகூட ரொம்ப அழகா இருக்காளே! சந்தேகமேபடாதடா அதுதான் பொண்ணு.  அப்போ வேணாம். எனக்கு பிடிக்கலனு சொல்லிடு.  கிறுக்கு பயலே! என்னடா சொல்லுற? அந்த பொண்ணுக்கு என்ன குறை, தங்க சிலையாட்டம் இருக்காளே!? அதுதான் பிரச்சனையே, சுமாரான பிகரே வேணான்னுட்டு போய்டுறாளுங்க, இந்த பொண்ணு வேற ரொம்ப அழகா இருக்கா நிச்சயமா சொதப்பிடும் ஏன்டா இப்படி அபசகுனமா யோசிக்கிற?  இரு முதல்ல ஜோசியர் கிட்ட குடுத்து பொருத்தம் பார்ப்போம்.  எனக்கு அவனை நினச்சாதான் பயமே, நிச்சயமா ஏதாச்சும் சொல்லி கொழப்பிடுவான். பெரியவங்கள அப்பிடி சொல்ல கூடாதுடா, சரி நா எல்லாம் பேசிட்டு உனக்கு கோல் பண்ணுறேன்.  ** சில வா

வைல்ட் வேஸ்ட் தோட்டம்

Image
சவூதிக்கு வந்த பிறகு இரண்டு விடயத்தை இழந்தேன். ஒன்று மண்வாசம் மற்றையது பெண்வாசம். இதற்கு தவறாக அர்த்தம் கற்பித்து கொள்ளவேண்டாம். நம் நாட்டில் போல பெண்களையே இங்கு பார்க்க முடியாது. நம் ஊர் பஸ்சில் மூன்று கிலோமீட்டர் தூரம் பயணம் செய்தாலே அந்த குறை தீர்ந்து விடும். குமரி, முதல் கிழவி வரை சுற்றி இருக்கும். இங்கு ஒரே தாடியும் மீசையும் தான். சரி விடுங்கள். இதுவல்ல நான் சொல்லவந்த விடயம். மரம், செடி, கொடி, புல், பறவை இப்படி எதுவும் இலகுவில் கண்ணில்படாத பாலைவன தேசம் இது. பூங்காக்களுக்கு சென்றால் பார்க்கலாம். தினசரி வாழ்வில் அதுவும் சாத்தியப்படாது.   என் அறையிருக்கும் ஆறு மாடி கட்டிடத்தின் உச்சியில்  சப்பாத்தி கள்ளிச் செடியும், கற்றாழையும் வளர்க்கிறேன். அனல் அடிக்கும் வெயிலுக்கு இதுமட்டும்தான் தாக்குப் பிடிக்கும். தண்ணிரை ஒரு  கிளாசில் எடுத்து காட்டினால் போதும்.  ஊற்றக் கூட தேவையில்லை. ரொம்ப  நல்ல தாவரம்!  இன்று என்னுடைய இந்த வைல்ட் வேஸ்ட் தோட்டத்தில் சில ஒழுங்கு படுத்தல்கள் செய்தேன். இனி வருடம் முழுவதும் இதுதான் என் அமேசன் காடு!

போக புத்தகம்

Image
ஆசிரியர்: போகன் சங்கர்  நான் படித்து சுவைத்து எழுத தவறிய புத்தகம். வாசிக்கும் புத்தகங்களை பற்றியெல்லாம் எழுத எனக்கும் ஆசைதான். அது இலகுவான காரியமில்லை. நேரம், மனநிலை எல்லாம் கூடி வரவேண்டும்.  "சில நேரம் என்னடா வாழ்கை இதுனு" சோர்ந்து போகும் தருணங்கள் எல்லாவற்றையும் மழுங்கடித்து விடுகிறது. இந்த புத்தகத்தை படித்து நாட்கள் கடந்த பின்பும் இதை பற்றி சிறு பாராகூட  எழுதாமல் இருப்பது மனதை உறுத்திக்கொண்டே இருந்தது. எல்லோரித்திலும் போய்ச் சேரவேண்டிய சிறந்த படைப்பு. வாசிப்பை மறந்த நம்  இளம் தலைமுறையைகூட இழுத்து மூழ்கடித்துவிடும் லாவகமான மொழிநடை போகனுக்கு. இப்பொழுது எனக்கு பிரியமான எழுத்தாளர்களில் ஒருவராகிவிட்டார். அவரின் படைப்பில் சுவாரஸ்யத்திற்கு எப்பொழுதுமே குறைவில்லை. எழுத்தில் நகைச்சுவையை புனைவதில் மனிதரை அடித்துக் கொள்ளமுடியாது.  "போக புத்தகத்தை" வாசிக்கும் போது சில இடங்களில் சிரிப்பை அடக்க முடியாமல் போகும். அதே போல சில இடங்களில் மனம் கனத்து, கண்கள் குளமாகும். இதுவரை நீங்கள் படித்திராத வித்தியாசமான புத்தகமிது. சிறுகதை, நாவல் என்ற வரையறைக்குள் க