"மஜ்னூன் குறுங்கதைகள்" தீவிர இலக்கிய வாசகர் தஷ்ணாவின் வாசிப்பனுவம்

"மஜ்னூன் குறுங்கதைகள்" புத்தகத்தை பற்றிய நண்பர் மற்றும் தீவிர இலக்கிய வாசகர் தஷ்ணாவின் வாசிப்பனுவம் Dhashna Moorthy *** எழுத்தாளர் நரேஷ் அவர்களின் முதல் புத்தகம் "தவிப்பு" எனும் கதையைப் படித்தேன். எழுத்தாளனுக்கும் அவன் பிரதிக்குமான உறையாடல் தான் கதை (அராத்துவின் தற்கொலைக் குறுங்கதைகளில் சாந்தியும் எழுத்தாளனும் பேசுவார்களே ஞாபகம் உள்ளதா) கதையென்று சொல்லலாகாது, கதைகளையே கேட்டுக் கேட்டு போரடித்துப் போய் கடுப்பில் இருப்பவர்களுக்கான ஓர் குறுங்கதைகள் தொகுப்பு. Kindle Unlimited இல் வாசிக்கவும் கிடைக்கிறது. காசு கொடுத்து வாங்கும் புண்ணிவான்களுக்காக வெறும் 49 ரூபாவுக்கும் கிடைக்கிறது. படித்து விட்டு ரிவ்யூ எழுதுங்கள், பாராட்டுங்கள், திட்டுங்கள். இனி கதைகளை பற்றிய என் பார்வை. 4. கயா புவி மீது நாம் கொள்ளும் அக்கறையை புவியே கேலி செய்யும்படியான கதை. கயா கிரேக்க புவிக்கடவுளின் பெயரென்பது உப தகவல். 5. நரகத்தில் ஒரு நாள் பேஸ்புக் வாட்சப் ஷேரிங் குரூப்புகளை கலாய்த்து ஒரு கதை. 6. பழைய எழுத்தாளரும் புதிய எழுத்தாளரும். செம பகடியானதொரு கதை சிரித்துக் கொண்டே படித்தேன். பு...