மஜ்னூன் குறுங்கதைகள் விமர்சனம்

நண்பர் நரேஷ் அவர்கள் எழுதி kindle தளத்தில் வந்துள்ள மஜ்னூன் நூல் பற்றிய ஒரு குறிப்பு: நரேஷ் அவரின் சில கதைகளை ஏற்கனவே அவரின் ப்ளாக்கில் படித்துள்ளேன், எனவே அவரின் மொழி ஆளுமை மற்றும் சிந்தனை திறன் பற்றியெல்லாம் ஏற்கனவே ஒரு மதிப்பீடு உண்டு. இந்த நூல் மஜ்னூன் பல குறுங்கதைகள் அடங்கிய ஒரு தொகுப்பு. இது அவரின் முதற்புத்தகம் தான் என்றாலும் சீரான எழுத்தினால் பல வருட அனுபவம் உள்ள எழுத்தாளரை போல் நேர்த்தியாக எழுதியுள்ளார். இதில் தவிப்பு, மஜ்னூன் போன்ற கதைகள் ஏற்கனவே கனலி போன்ற இலக்கிய பத்திரிக்கையில் வந்திருப்பதே அவரின் திறமைக்கு ஒரு சான்று. எனக்கு இதில் பல கதைகள் பிடித்திருந்தாலும் பிணந்தன்னிகள் கொடுத்த அதிர்வு அதிகம். மூன்று பைத்தியங்கள் கதையும் கொஞ்சம் என்னை பார்ப்பது போலிருந்தது. காதல் கதைகளை தனக்குள்ள அனுபவத்தால் பல விதங்களிலும் எழுதியுள்ளார், அதில் காமெடியும் இருக்கு. குறிப்பாக முன்னாள் காதலியை பார்க்கசெல்லும் இடத்தில் ஒலிக்கும் பாடல் சம்பந்தப்பட்ட கதை 😁. அறிவியல் கதையும் உண்டு அதிலும் காதல் ஒளிந்திருக்கிறது. சில திகில் கதைகளும் இருக்கிறது. மொத்தத்தில் கலவையான கதைக...