சகினா கிழவி

நான் O/L படிக்கும் போது தமிழ் பாடத்தில் சகினானு ஓரு கிழவியை பற்றி சிறுகதையொன்று இருந்தது. இப்போ அநேகமாக அதை பாடதிட்டத்திலிருந்து தூக்கிருபாங்கனு நினைக்கிறேன். கிழவியின் பெயர் சில வேலை கொஞ்சம் வித்தியாசப்படலாம். 2005 படிச்சது பல வருடங்களாகிருச்சி ஆனால் கதையின் நாதத்தை இன்னும் மறக்கல.., வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத அற்புதமான கதை! ஒருவேளை இதை சினிமாவாக எடுத்தால் கேன்ஸ் திரைப்படவிழாவுக்கே அனுப்பலாம். மனதில் தாக்கத்தை உண்டாக்கிடுச்சி கிழவியின் வாழ்கை. எனக்கு ரொம்ப பிடித்த ஓரு கதாபாத்திரம் சகினா. வகுப்பில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் வாசித்து கொண்டிருப்பேன். வாழ்நாள் முழுவதும் தன் முகத்தை கண்ணாடியில் பார்த்திறாது முதுமை எய்தி மடிந்து போகும் ஓரு அபலையின் கதை. கதைப்படி அவள் சார்ந்த சமூகத்தின் நம்பிக்கைகளின் பிரகாரம் பெண்கள் முகத்தை கண்ணாடியில் பார்ப்பது பாவமான செயல். அதனாலேயே தன் முகம் எப்படி இருக்கும் என்பது அவளுக்கு கடைசி மட்டும் தெரியாமலே போனது. ஓரு நாள் கிழவியின் மகன் அவளுடன் வாய்த்தர்க்கம் புரியும் போது "முதலில் உன் முகத்தை நீ பார்த்துறிக்கியானு" கடுந்தொனியில் கேட்பான். ...