சகினா கிழவி


நான் O/L படிக்கும் போது தமிழ் பாடத்தில் சகினானு ஓரு கிழவியை பற்றி சிறுகதையொன்று இருந்தது. இப்போ அநேகமாக அதை பாடதிட்டத்திலிருந்து தூக்கிருபாங்கனு நினைக்கிறேன். கிழவியின் பெயர் சில வேலை கொஞ்சம் வித்தியாசப்படலாம். 2005 படிச்சது பல வருடங்களாகிருச்சி ஆனால் கதையின் நாதத்தை இன்னும் மறக்கல.., வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத அற்புதமான கதை! ஒருவேளை இதை சினிமாவாக எடுத்தால் கேன்ஸ் திரைப்படவிழாவுக்கே அனுப்பலாம். மனதில் தாக்கத்தை உண்டாக்கிடுச்சி கிழவியின் வாழ்கை. எனக்கு ரொம்ப பிடித்த ஓரு கதாபாத்திரம் சகினா. வகுப்பில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் வாசித்து கொண்டிருப்பேன். வாழ்நாள் முழுவதும் தன் முகத்தை கண்ணாடியில் பார்த்திறாது முதுமை எய்தி மடிந்து போகும் ஓரு அபலையின் கதை. கதைப்படி அவள் சார்ந்த சமூகத்தின் நம்பிக்கைகளின் பிரகாரம் பெண்கள் முகத்தை கண்ணாடியில் பார்ப்பது பாவமான செயல். அதனாலேயே தன் முகம் எப்படி இருக்கும் என்பது அவளுக்கு கடைசி மட்டும் தெரியாமலே போனது. ஓரு நாள் கிழவியின் மகன் அவளுடன் வாய்த்தர்க்கம் புரியும் போது "முதலில் உன் முகத்தை நீ பார்த்துறிக்கியானு" கடுந்தொனியில் கேட்பான். அந்த வார்த்தைகள் அவள் நெஞ்சை கிழிச்சு போட்டுரும், உடைஞ்சு போய்டுவா!

இப்போ ஏன் இந்த கதையை இங்கே சொல்லுறேனா? முகப்புத்தகத்தில் பல சகினாக்களை பார்க்க முடியுது. அவளின் திருமண புகைப்படத்தில் அவள் முகத்தை மறைத்து இமொஜி ஒன்னு இருக்கும். பக்கத்துல மாப்பிளை சிரிச்சப்படி போஸ் குடுத்துட்டு இருப்பாரு. சில படங்களில் முகத்தை மறைத்து முதுகை காட்டியப்படி எதிர்பக்கம் பார்த்துட்டு இருப்பாங்க. இந்த மாதிரி இன்னும் விதவிதமா இருக்கு. இதையெல்லாம் பார்க்கும் போது பரிதாபமாக இருக்கும். அவள் முகத்தை காட்டும் உரிமை கூட அவளுக்கு இல்லை.

ஓரு பெண் ஆண்கிட்ட எதிர்பார்க்குறது அன்பு, பாதுகாப்பு, சுகந்திரம் இதற்கான நம்பிக்கையை தராமல்.  என்னதான் தங்கத்தால் கூடு செய்து பெரிய பூட்டை போட்டு வைத்தாலும் நேரம் வரும் போது கிளி பறந்து விடும்.

பின்குறிப்பு:
உங்க யாருகிட்டயாவது சகினா கிழவியின் கதையிருந்தால் அனுப்புங்க திரும்ப படிக்க ஆசையாயிருக்கு.

நரேஷ் 22-09-2019

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I