அன்புள்ள கண்ணம்மாவிற்கு
அன்புள்ள கண்ணம்மாவிற்கு
முகப்புத்தகத்தில் எதோச்சையாக உன் புகைப்படம் பார்த்தேன். உன்மேல் இருந்த கோபம் எல்லாம் மறந்து உடனே பேசவேண்டும் போலிருந்தது. புறக்கணிக்கபட்ட இடத்தில் உனக்கு என்ன வேலையேன்று மனம் எச்சரித்தும் நான் கேட்கவில்லை. மீண்டும் உன்னால் தூக்கியெறியபட்டேன். எல்லா தவறுகளையும் நீ செய்து விட்டு செய்யாத தவறுக்காக என்னை மோசமாக வஞ்சித்துவிட்டாய்.
காதலில் இறைஞ்சு கேட்கலாம், காதலை மட்டும் இறைஞ்சு கேட்டு பெறுவதில் எனக்கு உடன்பாடுயில்லை. நீயே சொல் அம்மாவிடம் என்னை நேசி, என்மீது அன்புக்காட்டு என்று பிச்சை கேட்க முடியுமா? அது இயற்கையாக நிகழும் ஒன்றல்லவா? அது போலதான் எனக்கு
நம் காதல் நீ என் நேசத்தை உதாசீனபடுத்தினால் என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது இல்லை தாங்கிகொள்ளவே முடியாது!
ஒரு விடியலின் ஆரம்பத்தில் உன் குறும்செய்தியில் வரும்
காலை வணக்கம், ஒரு நாள் தவறினாலும் நான் வாடிபோவதை ஏனோ நீ அறிய மறந்து போனாய்!
ஒரு கட்டத்தில் முன்னறிவிப்புயின்றி விலகி சென்றுவிட்டாய். நான் துடித்து போவேன் என்பது கூட உனக்கு எப்படி புரியாமல் போனது? மறுநாள் திரும்பி வருவாய் சரியான காரணங்களை என்னிடம் உரைப்பாய் என்று ஒவ்வொரு நாளும் கொஞ்சம் வீரியமில்லா கோபமும் மிகுந்த நப்பாசையுடன் காத்திருந்தேன். நாட்கள் பல கடந்தன,
நீ ஏனோ வரவில்லை. என்னை ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்பது என் மரமண்டைக்கு அக்கணம் வரை உறைக்கவில்லை. இன்னும் என் மனம் நம்பமறுக்கிறது அன்பே நீயா இப்படி மாறிபோனாயையேன்று!?
இதே போல முன்பு ஒரு தடவை நடந்து
நான் உன்னிடம் கோபம்முற்ற தருணத்தில் நீ குமரி, குமரி அழுது என்னை பேச்சற்றவனாக்கினாய் அக்கணம் உன் அன்பில் மெய்சிலிர்த்து போய்விட்டேன். உன்னை விடவேறு எவராலும் அந்த அளவுக்கு என்னை நேசித்து விடமுடியாது என அந்நொடிகளில் உணர்தேன். உன்னை இனி வாழ்நாளில் கண்ணீர் சிந்த விடக்கூடாது எனமனதில் சபதம் எடுத்தது உனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. குரைக்காத நாய்க்கு எஜமான் உணவளிக்க மறந்து போவானாம் அது போல் என் நேசத்தை உன்னிடம் நிரூபித்து கொண்டிருக்க தவறிவிட்டேனோ என்னவோ?
உன் பிரிவிற்கு பிறகு முகபுத்தகத்தில் நான் முகமுடியுடன் இருந்தபடியால்
என் வேதனையை நீ உணர்ந்திருக்க வாய்ப்பில்லை. ஆமாம் என் சோகம் என்னோடுதான் அதை விளம்பரப்படுத்த விரும்பவில்லை. உன்னை நான் நிஜமாகவே காதலித்தேனா? அல்லது கழிவிரக்கமா? என்ற ஐயம் உன்பிரிவில் நீர்த்து போனது. நீ நம்பமாட்டாய் என தெரியும். இன்று நான் உன்னை நினைத்து அழுதேன் பல வருடங்களுக்கு பிறகு ஒரு பெண்ணிற்காய் கண்ணீர் சிந்தினேன். இதை எல்லாம் அன்று நான் உன்னிடம் சொல்லவில்லை.
ஒரு வேலை நீ அறிந்திருந்தால் என்னிடம் பேசியிருக்ககூடும். இன்நிலைமாறியிருக்கலாம்.
என் கண்ணீர் துளிகளை சேகரம் செய்து உன்னிடம் சேர்ப்பித்தபின் அதை சுவைத்து பார்த்த பின்பு என் காதலை உறுதிபடுத்தியிருப்பாயோ என்னவோ. இப்படி எல்லாம் நிரூபித்துதான் நம் காதலை உயிர்ப்பிக்க வேண்டுமா? மீண்டும் சொல்கிறேன் காதலை மட்டும் கெஞ்சிகேட்டு பெறமாட்டேன்.
ம்ம்ம்ம்ம்.....,
ஒரு கட்டத்தில் என் கோட்பாடுகளை உடைத்தெரிந்து விட்டு உனக்கான நியாயங்களை நானே கற்பித்து கொண்டு தாயை தேடும் சேய் போல் மீண்டும், மீண்டும் நான் உன்னிடம் வந்து நிற்கவில்லையா? என் பிரியங்களை உன்னால் ஜீரணித்து கொள்ளமுடியாமல் போய்விட்டதா? இப்பொழுது எல்லாம் எனக்கு பயமாயிருக்கின்றது என் மனம் மறத்து போய்விடுமோயேன்று.
ஆம் காதலின் மீதும், பெண்களின் மீதும் பிடிப்பு அற்று போகிறேன்.
இனி என்பிரியங்கள் பிரசவிக்கபடாமலே சிதைந்து போய்விடும் வாய்ப்புகள் அதிகம்.
இங்கு ஆபீசில் ஹிட்லரும் தன் நாசி வேலையை காட்ட ஆரம்பித்துவிட்டான்.
ஒருபக்கம் அவன் மறுபக்கம் நீ வேறு மோசமாக தாக்க ஆரம்பித்து விட்டாய்! இருமுனை தாக்குதலை தாக்கு பிடிக்க என்னால் முடியவில்லை. மண்டை சுக்கு நூறாக வெடித்து சிதறும் முன்பு நானே சரணடைந்து விடுகிறேன்.
ஆம் நான் தோற்றுவிட்டேன் அன்பே!
நீ போ.... உன்னை இனி தடுக்க போவதுயில்லை. உன் விஷயத்தில் நான் கடந்தகால தவறுகளை செய்யவும்மில்லை. காதலிப்பதாக வார்த்தைகளால் மயக்கி பின்பு புணர்ந்து நகர்ந்து செல்லவும்மில்லை.
என் நேசம் பொய்யும்மில்லை.
எனக்கு எவ்வித குற்றஉணர்ச்சியும் இல்லை. இது நீயாக எடுத்த முடிவு,
நல்ல பெண் நீ உன்வாழ்வில் குறையிராது. என் பக்கங்கள் மட்டும் இத்தோடு முடிந்து விட்டதாக நினைத்துகொள், நான் போகிறேன்.
இப்படிக்கு உன்
பார்த்தி
அன்று ஒரு நாள் எனக்கான நியாயத்தை பெற தட்டச்சு செய்த இந்த கடிதத்தை முடிக்கும் தருவாயில் மனம் மாறிவிட்டேன். இதையும் உனக்கு அனுப்பி மறித்துபோன நம்காதலை மானபங்கப்படுத்த விரும்பவில்லை.
ஒரு நாள் இந்த டிஜிட்டல் கடிதத்தை
உன் கணவனே, உன் மகளோ உனக்கு வாசித்து காட்டலாம் அப்பொழுது இருவரும் வெகுதூரம் சென்றிருப்போம்.
அவளின் திருமண செய்தியை கேள்வியுற்ற பார்த்தி இந்த கடிதத்தை வரைந்த தருணத்தை மீட்டி பார்த்தபடி
விந்தையான உலகம். புரியாத காதல்.
புரிந்து கொள்ளவே முடியாத பெண் மனம். என சிகரெட்டை புகைத்தபடி
ஆழ்ந்த சிந்தனையில் பிதற்றி கொண்டிருந்தான். பக்கத்தில்லிருக்கும் ஸ்மார்ட் போன் மெல்லிய ஒளியில் பாடிக்கொண்டிருந்தது அதில் ஆண்ட்ரியா வேறு நேரகாலம் தெரியாமல் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுகொண்டிருந்தாள்.........!
🎶🎵🎶🎵🎶
மாலை நேரம் மழை தூறும் காலம்
என் ஜன்னல் ஓரம் நிற்கிறேன்
நீயும் நானும் ஓரு போர்வைகுள்ளே சிறு மேகம் போலே மிதக்கிறேன்.
ஓடும் காலங்கள்
உடன் ஓடும் நினைவுகள்
வழிமாறும் பயணங்கள்
தொடர்கிறதே......
இது தான் வாழ்கையா?
ஒரு துணைதான் தேவையா?
மனம் ஏனோ என்னையே கேட்கிறதே?
ஓ... காதல் இங்கே ஓய்ந்தது
கவிதை ஒன்று முடித்தது
தேடும் போதே தொலைத்தது அன்பே
இது சோகம்மானால் ஒரு சுகம்
நெஞ்சில் உள்ளேப்பரவிடும்
நாம் பழகிய காலம் பரவசம் அன்பே....
ஒரு காலையில் நீயில்லை
தேடவும் மனம் வரவில்லை
பிரிந்தும் புரிந்தது நான்
என்னை இழந்தேன் என...
🎶🎵🎶🎵🎶
(படம்: ஆயிரத்தில் ஒருவன்)
சிறுகதை
மனசிற்குள் அமர்ந்து மனம் விட்டு எழுதியிருக்கிறீர்கள்.
ReplyDeleteஎனக்கும் இப்படி நேர்ந்தது...
மிக்க நன்றி சகோ !
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteIs this your experience?
ReplyDeleteWhatever, when I read this I felt realistically.....
🙂
DeleteThank you...!
👀👍
ReplyDelete