எனக்கென ஒரு கனவிருந்தது...
எனக்கென ஒரு கனவிருந்தது..
எனக்கென்றே ஒரு காதல் இருந்தது..
எனக்கென்றே ஒரு வாழ்விருந்தது..
எனக்கென்றே எல்லாமும் இருந்தது..
அப்படித்தான் நம்பிக்கொண்டிருந்தேன்..
எல்லாமும் யார்கையிலோ
போகும் வரை.
அவ்வளவு இலகுவாய் எனக்கென்று எதையும் அபகரிக்கத் தெரிந்திருக்கவே இல்லை எனக்கு.
அன்பே !
நீ கூட எனக்கென்று இல்லாமல் போன பிறகு தான்
உலகம் அத்தனை கொடூரமாய் எனக்குத் தெரிந்தது.
ஆனாலும் முட்பாதைகளில்
வலிச் சுமந்து நடக்கும்போது என் கால்களுக்கு பலம் கிடைத்தது.
இப்போதெல்லாம் எனக்காக என்று ஒரு வாழ்விருக்கிறது.
எனக்காக என்று ஒரு புன்னகை இருக்கிறது.
என்னிடம் மொத்தமாய் ஒரு காதல் இருக்கிறது.
என் அளவுக்கு மிஞ்சியதாய் பேரன்பும் இருக்கிறது.
ஆனாலும்..
எங்கோ ஒரு இடத்தில் அவற்றை
கொட்டிவிடப்பயத்தில் அப்படியே மூட்டைச் சுமந்து பயணிக்கிறேன்.
இப்போதெல்லாம சுமைகள் வலிகள் என ஏதுமிருப்பதில்லை.
எதையும் தேடி எனக்கென ஏங்காத போது எல்லாமும் நிறைந்திருக்கிறது என்னிடம்.
அன்பென்ற பூட்டுக்கொண்டு பூட்டிவைத்திருக்கிறேன் மொத்தமாய்.
நான் வாழ்ந்து விடுகிறேன் இப்படியே.!
எனக்காக ஒரு அன்பை பார்த்து காத்திருக்க இப்போதெல்லாம் முடியவே இ்ல்லை.
எனக்காக கோர்த்து நடக்க ஒரு கையை எதிர்பார்த்திருக்க
இப்போதெல்லாம் முடிவதே இல்லை.
ஆதலால்தான் என் முகத்தில் ஒரு புன்னகையோடு உங்களை
கடந்துக் கொண்டிருக்கிறேன்.
நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள் என்னைப் பற்றி
எது வேண்டுமானாலும்....
நான் இன்னமும் நானாகவே நிறைந்திருக்கிறேன்...🚶🏽♀️
பேனாதுளிகள் குபோதினி
Comments
Post a Comment