நீ தானே என் பொன்வசந்தம்

என் மனசுக்கு நெருக்கமான (நெருடலான) சில படங்களை மறுமுறை பார்க்ககூடாது என நினைத்து கொள்வேன் அந்த பட்டியலில் இருந்த ஒரு படம் தான் நீ தானே என் பொன்வசந்தம்.இந்த படத்தை பார்க்காமலிருக்க காரணம் , நித்தியா கதாபாத்திரம் எனக்குள் ஏற்படுத்திய குற்றஉணர்ச்சியை இன்று வரை என்னால் தாண்டி வரமுடிவில்லை. கடந்து வந்து பாதையின் சில கருப்பு பக்கங்களை எனக்கு ஞாபக படுத்திவிடும். சரியாக 7 வருடம் கழித்து இந்த படத்தை பார்க்கும் ஆசை வந்தது சில நேரங்களில் நாஸ்டால்ஜியாவும் பிடிக்கும். ஏக்கங்களும் , பரிதவிப்பும் இல்லாத வாழ்க்கையில் என்னத்தான் சுவையிருந்திடபோகுது. புதுவித அனுபவத்தை பெற இந்த படத்தில் நித்தியாவின் முகத்தை மட்டும் தொடக்கத்தில் இருந்து முடிவு வரை பாருங்கள் அதுதான் இந்த படமே அந்த கோபம் , புன்னகை , அன்பு , குறும்பு , ஏக்கம் , என தன் முகபாவங்களினுடாக வருணுக்காக பரிதவிக்கும் ஒவ்வொரு வினாடியையும் வார்த்தைகள் இன்றியே மிக அழகாக நம்மனதுக்குள் கடத்தி விடுவாள். கூடவே உங்களுக்கு பிரியமானவளை மனதில் நி...