நம்பிக்கை, வாக்குறுதிகள், அலங்கார வார்த்தைகள். இவையெல்லாம் நீ எனக்கு தந்தவை. நீங்கி செல்லும் போது உன்னுடன் எடுத்துச்செல்ல மறந்துவிட்டாய். இந்த பெட்டி நிறைய அவற்றை தான் நிரப்பிவைத்திருக்கிறேன். வாங்கிக்கொள். வேறு யாருக்காவது கொடுக்க உனக்கு தேவைப்படலாம். உன் நினைவுகளை மட்டும் திருப்பி கேட்காதே! அவற்றை எனக்குள்ளேயே தொலைத்துவிட்டேன். கடைசியாக ஓர் உதவி.... நடைப்பிணம் என்பதை ஊரார் அறிந்து கொள்ளும் முன், என் உயிரை மட்டும் திருப்பி கொடுத்துவிடு!
Posts
Showing posts from June 19, 2020
பெண்குயின் (2020)
- Get link
- X
- Other Apps

Spoiler Alert படத்தை உருவாக்க நிறையவே கஷ்டப்பட்டுள்ளார்கள். நாங்களும் கஷ்டப்பட்டே பார்க்க வேண்டியுள்ளது. திரில்லர், சஸ்பென்ஸ் படத்திற்கு உண்டான திரிலை கடைசிமட்டும் உணரவே முடியவில்லை. நிறைமாத கர்ப்பிணியான கீர்த்திசுரேஷ் வயிற்றை தூக்கி கொண்டு அலைவதை பார்க்கும் போதுதான் நமக்கும் கஷ்டமாக உள்ளது. படத்தில் உள்ள பெரிய ஓட்டை நம்பக தன்மையில்லாத காட்சி அமைப்புதான். நடுச்சாமம் வரைக்கும் எங்கோ காட்டுக்குள் உள்ள ஒரு ஏரிக்கரையில் நிறைமாத கர்ப்பிணியான கீர்த்தி உற்காந்து கொண்டிருப்பது எல்லாம் கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எங்கோ கொரியாவில் அல்லது ஹாலிவுட் சினிமாவில் இப்படி ஒரு காட்சி வந்தால் நம்பலாம். காரணம் நமக்கு அவர்களின் வாழ்வு முறை, மண்ணின் கலாசாரம் பற்றியெல்லாம் ஒன்றும் பெரிதாக தெரியாதபடியால் சமரசம் செய்து கொள்ளலாம். நம் ஊரில் இப்படி ஒரு நிகழ்வை கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. அதேபோல இன்னொரு முக்கியமான இடத்தையும் குறிப்பிட வேண்டும். அந்த சைக்கோ கொலைகாரனின் வீட்ட...
Life is very short !
- Get link
- X
- Other Apps

ஒருவர் நம் அருகில் இருக்கும் போதோ, உயிருடன் நம் கண்முன்னே உலாவி திரியும் போதோ, அவர்களை கண்டுகொள்ளாமல் உதாசீனம் செய்துவிட்டு. அவர்கள் நம் தொடர்பு எல்லையை தாண்டி மீண்டு வரமுடியாதபடி வெகு தொலைவிற்கு சென்ற பிறகு நினைத்து உருகி கண்ணீர் வடிப்பதில் எதுவும் மாறிவிடப்போவதில்லை. அவர்கள் பக்கத்தில் இருக்கும் போதே ஆறுதலாக ஒரு வார்த்தை பேசிவிடுங்கள். நெருக்கமானவர் சிறு ஊடல். இப்பொழுது பேசுவது இல்லை என்றாலும். மனமுடைந்து போயுள்ளார்கள் என்றால் உங்கள் மேல் தவறே இல்லாவிடினும் வலிந்து பேசிவிடுங்கள். அந்த ஒரு கணம் நீங்கள் தான் கடவுள். உங்கள் வார்த்தையும் பரிவும் ஓர் உயிரை காப்பாற்றி விடுகிறது. மோசமாக எதுவும் நடக்காத வரைக்கும் இந்த உண்மை உங்களுக்கே தெரிவதில்லை!
பண்டைய எகிப்து
- Get link
- X
- Other Apps

பண்டைய எகிப்தில் ஆண்கள் வழுக்கை தலையுடன் இருப்பதை கவனித்து உள்ளீர்களா? "த மம்மி" என்ற பிரபலமான ஹாலிவுட் படத்தை பார்க்கும் பொழுது நான் யோசித்தது உண்டு. ஏன்? அரசன் தொடக்கம் பூசாரி, குடியானவர்கள் என எல்லோரும் நன்றாக மழித்த வழுக்கை தலையுடன் இருக்கிறார்கள் என? ஒருவேளை அவர்களின் மத நம்பிக்கை இல்லாவிட்டால் கலாசாரமாக இருக்க கூடும் என்று எண்ணிக்கொண்டேன். இன்னொரு விடயம் ஆண்கள் மட்டும் அல்ல பெண்களும் கூட மொட்டையடித்து கொள்வார்கள். அவர்கள் கைவசம் இருக்கும் செயற்கையான கூந்தலை அணிந்து கொள்வதால் நமக்கு அது வெளித்தெரிவதில்லை. சீஸரையே தன் அழகில் கிறங்கடித்த பேரழகி கிளியோபேட்ரா கூட இதற்கு விதிவிலக்கில்லை. சரி இப்பொழுது அதற்கு என்னவென்று? நீங்கள் கேட்பது புரிகிறது. இந்த பழக்கத்தின் பின்னணியில் சுவாரசியமான காரணமுண்டு. பண்டைய எகிப்தில் பேன் தொல்லை அதிகமாம். அதிலிருந்து தப்பித்து கொள்ளதான் கேசத்தை மழிக்கும் பழக்கம் வந்தது. உலகமே வியந்து அதிசயிக்கும் பிரமிட்டை கட்டிய மக்களுக்கு பேனுக்கு ஏதேனும் மருந்து கண்டு பிடிப்பது ஒன்றும் கடினம...
சொத்தும் கடனும்
- Get link
- X
- Other Apps

பணக்காரர்கள் மேலும் செல்வந்தர்களாக ஆவதற்கும். மத்திய வர்க்கமும், ஏழைகளும் அதேநிலையில் இருப்பதற்கும் மிகமுக்கிய காரணங்களில் ஒன்று பணத்தின் இயல்பை புரிந்துகொள்ளாமையே. பணக்காரர்கள் பணத்தை தங்களுக்கு வேலைசெய்ய வைக்கிறார்கள். மத்திய வர்க்கமும், ஏழைகளும் பணத்திற்காக வேலை செய்கிறார்கள். பணத்தை நமக்காக வேலை செய்யவைப்பதற்கு நாம் சரியான விதத்தில் முதலீடு செய்யவேண்டும். அதற்கு பிறகு அந்த பணம் நமக்காக வேலை செய்யும். உங்கள் சொத்துக்களின் பெறுமதியை அதிகரிக்கும். இப்பொழுது உங்கள் மனதில் ஒரு கேள்வி எழலாம். வரவும் சிலவும் சரியாக இருக்கு போது எப்படி முதலீடு செய்வதென்று? சவாலான விஷயம்தான். இங்கு தான் தேங்கி நின்று விடுகிறோம். இதை வெற்றிகரமாக தாண்டிவர நம் சுயதிறனை வளர்த்து கொள்ளவேண்டும். எப்படி வருமானத்தை அதிகரிப்பது? *நீங்கள் இப்பொழுது செய்யும் வேலையுடன் பகுதி நேரமாக இன்னொரு வேலையை சேர்த்து செய்யலாம். *உங்களிடம் விசேட திறமைகள் எதும் இருப்பின். அதன் மூலம் பகுதிநேர வருவாயை அதிகரித்து கொள்ளலாம். உதாரண...