பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் The Richest Man in Babylon நீண்ட நாட்களாக மனதில் கேட்கப்பட்டுக்கொண்டிருந்த கேள்விக்கு தெளிவான பதிலை தந்த புத்தகமிது. பொதுவாக நான் வாசிக்கும் எல்லா நூல்களை பற்றியும் சிறுகுறிப்பு எழுதவேண்டுமென்று நினைப்பேன். பிறகு நேரப்பற்றாக்குறை காரணமாக எழுத முடிவதில்லை. (கொஞ்சம் சோம்பேறித்தனமும்) ஆனால் இதை பற்றி எழுதியே ஆகவேண்டும். நிதி நிர்வாகம் பற்றிய அடிப்படை அறிவை பெறுவதற்கு எளிய மொழியில் புனையப்பட்ட மிக சிறப்பான நூல். பணத்தை எப்படி சிறப்பாக நிர்வாகம் செய்வது? எவ்வாறு லாபமிட்டும் முறையில் முதலீடுவது? என்னும் கேள்விகளுக்கு பதில் சொல்வதற்கு இன்றைய உலகில் யூ டுயூப் சேனல்கள், புத்தகங்கள், இணையதளங்கள் என ஆயிரம் வழிகள் உண்டு. அவை அனைத்தும் லட்சங்களை மில்லியனாக மாற்றுவது எப்படியென்று கற்றுத்தரும். ஆனால் இங்கு நம் நிலைமையோ வேறு, சில ஆயிரங்களே மாதவருவாய். வரவும் சிலவும் சமமாகயிருக்கும். இதில் எப்படி சேமிப்பது? பிறகு எப்படி முதலீடு செய்வது? எந்த காலத்தில் செல்வந்தன் ஆவது? இவை எல்லாவற்றுக்கும் தெளிவான ...
என் நிர்வாண உடலை ஊரே கூடி வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது. நான் எங்கே இருக்கிறேன்? எனக்கு என்ன நடந்தது? எதுவும் விளங்கவில்லை. எழுந்திருக்க முயற்சித்து கொண்டிருக்கின்றேன் ஆனால் முடியவில்லை. என் உடல் நிலத்தில் கிடையாக வானம் பார்த்தப்படி கிடக்கிறது. கைகளும் கால்களும் நான்கு திசையிலிருந்த மரத்துடன் சேர்த்திழுத்து அசைக்க முடியதாப்படி இறுக்கமாக கட்டப்பட்டிருந்தது. அவர்கள் ஒரு பக்கம் கயிராக எனது மார்புக்கச்சையை பயன்படுத்தியிருக்கிறார்கள். யோனியிலிருந்து வடிந்த குருதி நிலத்தில் படிந்து சிகப்புத்திட்டுகளாக காய்ந்து போயிருந்தது. அதில் எறும்புகளும், ஈக்களும் தங்களுக்கான ஆகாரத்தை தேடிக்கொண்டிருந்தன, இத்தனை நடந்தும் நான் எவ்வித வலியையும் உணரவில்லை. ஒரு நாளுக்கு மேலாக இங்கே கிடக்கிறேன். உடல் உப்பி, அழுக தொடங்கிவிட்டது போல? கூடியிருந்த சனம் மூக்கை மூடிக்கொண்டதை கவனித்தேன். கடுமையான துர்நாற்றம் காற்றில் கலந்திருக்க கூடும். எனக்கு இப்பொழுது எழுந்திருக்க வேண்டும். ஆனால் என் கட்டுக்களை அவிழ்த்துவிடயாரும் முயற்சிக்ககூட இல்லை. வெறுமனே வேட...
விளக்கிலிருந்த கடைசி சொட்டு மண்ணெண்ணையும் எரிந்து தீர்ந்து கொண்டிருந்தது. காற்றின் போக்கில் ஆடியப்படியிருந்த விளக்கின் சுவாலை மெதுமெதுவாக சிறுத்து ஒளியிழந்து கடைசியில் முழுதாக அணைந்து போனது. அந்த கணம் திரியின் செந்தணலில் இருந்து நீண்டு எழுந்த கரும்புகை ஓர் நேர்க் கோடாக மேல் நோக்கி சென்று மறைந்தவுடன் திரியின் தணலும் அணைந்து வெளிச்சம் முழுதாக நீங்கி, வீடு முழுவதும் கும்மிருட்டானது. அணைந்து போன குப்பி விளக்கை வெறித்து பார்த்தபடி வீட்டுத் திண்ணையிலிருந்த மண்திட்டில் அவள் அமர்ந்திருந்தாள். அவளின் இருபுறமும் பிள்ளைகளும் இருந்தார்கள். கூடவே பல நாட்கள் அடிப்பட்டு நெளிந்து போயிருந்த வடுவுடன், அவர்களின் துயர வாழ்க்கையின் அடையாளமாக ஒரு பழைய அலுமினிய சோற்றுப் பானையும் இருந்தது. அன்றிரவு நேரம் கடந்து போயிருந்தும் மூவரும் சாப்பிட்டிருக்கவில்லை. மிச்சமிகுதியிருந்த அரிசியும் பகலுடன் தீர்ந்து போயிருந்தபடியால் இரவுணவு சமைக்கவென எதுவும் மீந்திருக்கவில்லை. பிள்ளைகள் அன்று வீட்டில் நிகழ்ந்த அசம்பாவிதத்தில் உண்டான அத...
(குறுங்கதை 12) ஆளரவமே இல்லாத மலைக்காடு. பாதையின் இருபுறமும் செழித்து உயர்ந்த பைன் மரங்கள். பனிமூட்டம், குளிர்க் காற்று, நிலவொளி என ரம்மியமான இயற்கை அழகு ஆனால் நடுச்சாமம் பன்னிரண்டு மணிக்கு ஒற்றையாகப் பயணிக்கும் போது இவையெல்லாம் பூரிப்படைய செய்வதற்கு பதிலாக பீதியைக் கிளப்பும்படியிருந்தன. தனியாகக் காரை வேகமாக செலுத்திக் கொண்டிருந்தான். முடிந்த மட்டும் விரைவாக இந்த காட்டைக் கடந்து சென்று விடவேண்டும் என்பதே அவனின் முதல் நோக்கமாக இருந்தது. அமானுஷ்யம், ஆவிகள், இவற்றில் கொஞ்சம் நம்பிக்கையுண்டு. இந்த பாதையில் ஆவிகளின் நடமாட்டம் தொடர்பான கட்டுக் கதைகள் உலாவுவதால் மனதில் எழுந்த பயத்தை அடக்க முடியவில்லை. இம் மாதிரியான நேரங் கெட்ட நேரத்தில் தான் துர்ஆத்மாக்களின் இருப்பை பற்றிய ஆராய்ச்சியில் மனது ஈடுபட ஆரம்பித்தது. இடையிடையே சடசடத்து தாழ்வாகப் பறந்துச் சென்ற வெளவால்கள் வேறு அதற்கு ஒத்து ஓதின! இந்த எண்ணத்தை உடனே திசைத் திருப்பி மனதை வேறு சிந்தனைகளில் மாற்ற எண்ணியப்படி காரிலிருந்த மியூசிக் பிளேயரை ஒலிக்க விட்டான்...
நடுச்சாமம். "த அதர்ஸ்" படத்தின் எதிர்பாராத முடிவை சிலாகித்தபடி டிவியை நிறுத்த மனமில்லாமல் பெயர் ஓடிக் கொண்டிருந்ததை பார்த்தபடியிருந்தான். அதில் ஏதேட்சையாக "ஜென்சி" என்ற அவளின் பெயரை காண நேர்ந்தது. என்ன கருமமிது? நினைவின் சரடுகளிலிருந்து முழுதாக அகற்ற நினைக்கும் ஒருத்தியை ஞாபக படுத்தும் விதமாக சமீபத்தில் இப்படி ஏதாவதொன்று நடந்தபடியிருந்தது. 'பெற்றன் ஸீக்கிங்' மனநிலை. படுக்கைக்கு சென்று நீண்ட நேரம் தூக்கமில்லாமல் கட்டிலில் புரண்டு படுத்தபடியிருந்தான். நேரம் இரவு பனிரெண்டை நெருங்கி கொண்டிருந்தது. காதலும் காமமும் கட்டுடைப்பு செய்யும் நேரமது. நெடும் யோசனைக்குப் பிறகு மொபைலை கையிலெடுத்து " மிஸ் யூ" என்று அவளுக்கு வாட்சப்பில் ஒரு குறுஞ்செய்தியை தட்டி விட்டான். அது கிராமம், நகரம் காடு, மலை, பாலைவனம், ஏழு கடல் எல்லாம் ஓர் நொடியில் தாண்டி உலக வரைபடத்தில் எங்கோ ஓர் மூலையில் இருக்கும் அவளிடம் போய்ச்சேர்ந்தது. சென்று அடைந்ததிற்கு அடையாளமாய் தொடுதிரையில் அடுத்தடுத்து இரண்டு ரைட் மார்க் விழுந்தது. இன்னும் ச...
அன்புள்ள கண்ணம்மாவிற்கு முகப்புத்தகத்தில் எதோச்சையாக உன் புகைப்படம் பார்த்தேன். உன்மேல் இருந்த கோபம் எல்லாம் மறந்து உடனே பேசவேண்டும் போலிருந்தது. புறக்கணிக்கபட்ட இடத்தில் உனக்கு என்ன வேலையேன்று மனம் எச்சரித்தும் நான் கேட்கவில்லை. மீண்டும் உன்னால் தூக்கியெறியபட்டேன். எல்லா தவறுகளையும் நீ செய்து விட்டு செய்யாத தவறுக்காக என்னை மோசமாக வஞ்சித்துவிட்டாய். காதலில் இறைஞ்சு கேட்கலாம், காதலை மட்டும் இறைஞ்சு கேட்டு பெறுவதில் எனக்கு உடன்பாடுயில்லை. நீயே சொல் அம்மாவிடம் என்னை நேசி, என்மீது அன்புக்காட்டு என்று பிச்சை கேட்க முடியுமா? அது இயற்கையாக நிகழும் ஒன்றல்லவா? அது போலதான் எனக்கு நம் காதல் நீ என் நேசத்தை உதாசீனபடுத்தினால் என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது இல்லை தாங்கிகொள்ளவே முடியாது! ஒரு விடியலின் ஆரம்பத்தில் உன் குறும்செய்தியில் வரும் காலை வணக்கம், ஒரு நாள் தவறினாலும் நான் வாடிபோவதை ஏனோ நீ அறிய மறந்து போனாய்! ஒரு கட்டத்தில் முன்னறிவிப்புயின்றி விலகி சென்றுவிட்டாய். நான் துடித்து போவேன் என்பது கூட உனக்கு எப்படி புரியாமல் போனது? மறுநாள் திரும்பி வருவாய் சரியான காரணங்களை என்னிடம் உரைப்பாய...
கடந்து வந்த சிலநாட்களை அவ்வளவு சுலபமாக மறந்து விடமுடியாது. எல்லாம் நல்லப்படியா போய்ட்டுயிருக்கும் போது எதிர்பார்க்காத நேரத்துல வாழ்கை கல்லை தூக்கி மண்டையிலேயே ஒரே போடா போடும்! ஒரு கணம் உலகமே இருட்டி போயிட்டு தலைசுத்தி ஒன்னும் புரியாம கலங்கி நிற்போம் பாருங்க அப்போ புரிய ஆரம்பிக்கும் வாழ்கை..... நான் ஸ்ரீபாத கல்லுரிக்கு நேர்முக பரீட்சைக்கு போன அனுபவத்தை உங்ககிட்ட பகிர்ந்துக்கிறப்போறேன். என் வாழ்கையில ரொம்ப முக்கியமான நாள் அது. ஆசிரியருக்கான கற்கை நெறியில் சேர்த்து கொள்ள தகுதிகளாக அவர்கள் கேட்டது உயர்தரத்தில் விஞ்ஞான பிரிவில் இரண்டு பாடங்களில் சித்தி மட்டுமே என்னிடம் அந்த தகமை இருந்தது. முதலில் எனக்கு ஆர்வம் இருக்கவில்லை. காரணம் எனக்கு வாய்ப்புகள் குறைவாக இருப்பதாக தோன்றிமைதான். பள்ளி படிப்பு முடிச்சு வெளிஉலகத்துக்கு வந்து சரியான வேலை கிடைக்காம என்னடா பண்ணபோறோமுன்னு எதிர்காலத்தை நினைத்து பயந்தகொண்டிருந்த நாட்கள் அவை. ஏழுஆயிரம் ரூபாய் மாதசம்பளத்தில் நாக்கு வலித்து கொண்டிருந்த என்னை போன்ற லோவர் மிடில் கிளாஸ் பையனுக்கு ஆசிரியர் வேலைங்குறது தங்க புதையல் கிடைச்ச மாதிரி! அதற்கு...
(குறுங்கதை) குளிர்காலத்தின் ரம்மியமான மாலைநேரம், வெளியில் சில்லென்ற வாடைக் காற்று வீசிக்கொண்டிருந்தது. விடுதியின் மேல் மாடி அறையின் ஆளுயர கண்ணாடி ஜன்னல்களின் விலக்கப்பட்ட திரைச்சீலை வழியே அறையினுள் புகுந்த நிலவொளி போதுமான மட்டும் வெளிச்சத்தை தந்து கொண்டிருந்தபடியால் அங்கு மின்விளக்குகளுக்கு தேவையிருக்கவில்லை. மேசையில் பாதி முடிக்கப்பட்ட ஒயின் போத்தலும் கரைந்து கொண்டிருந்த ஓர் மெழுகுவர்த்தியும் மட்டும் அவர்களுக்குப் புரியாத மொழியில் ஏதோ பேசிக்கொண்டிருந்தன... கட்டிலில் அவள் மேல் கிடந்து மார்பைத் தன் நெஞ்சால் அழுத்தி கொண்டிருந்தவனைத் தள்ளிவிட்டாள். விழுந்த வேகத்தில் மீண்டும் எழுந்து அவள் கழுத்திற்கும் மார்பிற்கும் இடையில் தன் முகத்தை புதைத்து ஸ்பரிசிக்கத் தொடங்கினான். மூச்சு திணறியபடி முழுதாய் எதிர்ப்பைக் காட்டாமல், அவனது முரட்டுத்தனத்தை விருப்பியவளாய் அதேநேரம் மேலும் கீழ்நோக்கி நகர ஒத்துழைக்க மறுத்தவளாகவும் இருந்தாள். அவள் கண்களை உற்றுப் பார்த்தான். "இப்ப என்ன விட போறியா இல்லையா? " என்று மிரட்டுவதைப் போலிருந்தத...
எனக்கென ஒரு கனவிருந்தது.. எனக்கென்றே ஒரு காதல் இருந்தது.. எனக்கென்றே ஒரு வாழ்விருந்தது.. எனக்கென்றே எல்லாமும் இருந்தது.. அப்படித்தான் நம்பிக்கொண்டிருந்தேன்.. எல்லாமும் யார்கையிலோ போகும் வரை. அவ்வளவு இலகுவாய் எனக்கென்று எதையும் அபகரிக்கத் தெரிந்திருக்கவே இல்லை எனக்கு. அன்பே ! நீ கூட எனக்கென்று இல்லாமல் போன பிறகு தான் உலகம் அத்தனை கொடூரமாய் எனக்குத் தெரிந்தது. ஆனாலும் முட்பாதைகளில் வலிச் சுமந்து நடக்கும்போது என் கால்களுக்கு பலம் கிடைத்தது. இப்போதெல்லாம் எனக்காக என்று ஒரு வாழ்விருக்கிறது. எனக்காக என்று ஒரு புன்னகை இருக்கிறது. என்னிடம் மொத்தமாய் ஒரு காதல் இருக்கிறது. என் அளவுக்கு மிஞ்சியதாய் பேரன்பும் இருக்கிறது. ஆனாலும்.. எங்கோ ஒரு இடத்தில் அவற்றை கொட்டிவிடப்பயத்தில் அப்படியே மூட்டைச் சுமந்து பயணிக்கிறேன். இப்போதெல்லாம சுமைகள் வலிகள் என ஏதுமிருப்பதில்லை. எதையும் தேடி எனக்கென ஏங்காத போது எல்லாமும் நிறைந்திருக்கிறது என்னிடம். அன்பென்ற பூட்டுக்கொண்டு பூட்டிவைத்திருக்கிறேன் மொத்தமாய். நான் வாழ்ந்து விடுகிறேன் இப்படியே.! எனக்காக ஒரு அன்பை பார்த்து காத்திருக்க இப்போதெல்லாம் முடியவே ...
(குறுங்கதை - 10) மிகைல் நா கார்த்திக்க வெடிங் பண்ணலான்னு நினைக்கிறேன். எட் த சேம் டைம்..., ராஜ் உம் என் மேல இன்ட்ரெஸ்டா இருக்கான். இவங்க ரெண்டு பேரும் எனக்கு பிடிச்ச மாதிரிதான் இருக்காங்க..., கார்த்தியோட செட்டில்லாகத்தான் மனசு சொல்லுது, பட் ராஜ்கிட்ட இருக்க கேரிங் எனக்கு பிடிக்கும். ஒரே கன்பியுஸ்ட்டாயிருக்கு, இந்த விசயத்துல எனக்கு உன் அட்வைஸ் வேணும் ப்ளீஸ் ஹெல்ப் மீ ! தாராளமாக ரியா...., என்னிடம் நீ அனுமதி கேட்கத் தேவையில்லை. சில தனிப்பட்ட தகவல்களை எல்லாம் ஆராய்ந்துப் பார்க்கவேண்டும் அதனால் கூடுதல் அதிகாரம் தேவை. டர்ம்ஸ் அன்ட் கண்டிஷன்ன ரீட் பண்ணிட்டு அக்செப்ட் பண்ணு. மிகுதியை நான் பார்த்து கொள்கிறேன். "ஓகே, இந்த விஷயம் ரகசியமா இருக்கட்டும்..., முக்கியமா கார்த்திக்கு தெரியக் கூடாது, அவனுக்கு எல்லாத்துக்கும் மெஷின்ச நம்பிட்டு இருக்கது பிடிக்காது" என்று சொல்லியப்படி ரியா தன் ஆர்ட்டிப்பிசல் இன்டலிஜெண்ட்டுக்கு தேடுவதற்கான முழு அதிகாரத்தையும் சுதந்திரத்தையும் வழங்கினாள். மிகைல் இணையவெளியில் தனக்கு தேவையான தகவல்களை அ...
Comments
Post a Comment