தேனீ

பூச்சி வகைகளில் தேனீ மட்டுமே மனிதனுக்கு பகுதியளவில் கட்டுப்பட்டது. ஆடு, மாடு போல அதனையும் நாம் தோட்டத்தில் வளர்க்க ஆரம்பித்து விட்டோம். கொத்து வாங்கிக் கொண்டும் வளர்க்க காரணம் தேனின் சுவைதான். தேன் என்றால் யாருக்கு தான் பிடிக்காது, இயற்கையான, சுவையான, ஆரோக்கியமான உணவு. தேனை சாப்பிடவும், உடலில் பூசிக் கொள்ளவும் முடியும். இரண்டு வழிகளிலும் உடலுக்கு நன்மை செய்யக் கூடியது. அதிலும் கருப்பு தேன் என்றால் மேலும் சிறப்பு. சுவையான தேனை நமக்கு தரும். இல்லை…., நாம் அவற்றிடம் இருந்து திருடிக் கொள்ளும், தேனீயின் வாழ்க்கை தேனை விட தித்திப்பானது. தனிப் புத்தகமாக எழுதும் அளவுக்கு விஷயம் இருக்கிறது. சில சுவாரஸ்யமான தகவல்களை மட்டும் உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன். அதற்கு முன்பு தேனீயிடம் வெறுப்பைக் காட்டாதீர்கள். பாவம், அவை விரும்பி தாக்குவதில்லை. நம்மை கொத்திய உடன் அதுவும் இறந்து விடும் மனிதர்களின் மூளையுடன் ஒப்பிட்டால் தேனீக்களுக்கு அளவில் மிகச் சிறிய மூளை தான் உள்ளது. அதன் அளவு 0.4 - 0.6 மில்லி மீட்டர் மட்டுமே, ஆனால் சூப்பர் கம்ப்யூட்டர் அளவுக்குத் திறன் வேகம் கொண்டது. தேனீக்கு பத்த...