Posts

Showing posts from March 11, 2021

Bad Guy - 2001(Kim ki-duk) கிம் கி டுக்

Image
Bad Guy - 2001 (Kim ki-duk) எனக்கு கிம் கி டுக் சினிமா வாரம் அதன் தொடர்ச்சியாக இன்று Bad Guy படத்தை பார்த்தேன். நீ எழுதித்தான் பாரேன்! என்பது போல் இருந்தது கதை. சிறு குறிப்பு மட்டும் கீழே இவர் படங்களை எல்லாம் பார்த்து முடித்த பின்பு என்னாவேனோ? தெரியவில்லை!  என்ன மனிதர் இவர், உலகத்தை கிம் பார்வையில் இருந்து பார்க்கும் போது புனிதங்கள் கட்டுடைகின்றன. படம் முடிவதற்கு சில நிமிடங்களுக்கு முன்புதான் கதாநாயகன் வாய் திறந்து பேசுகிறான். அதுவரை அவன் ஊமையாக இருக்க கூடும் என்றெண்ணிக் கொண்டிருந்தேன். கிம்மின் படத்தில் இது ஒன்றும் புதிதல்ல. முழு படத்திற்கும் இரண்டு பக்கத்திற்கு மட்டும்தான் ஸ்க்ரிப்ட் எழுதி வைத்திருப்பார் போல, இருப்பினும் 3 Iron, The Isle போன்ற படங்களை விட இதில் கொஞ்சம் அதிகமாகவே பேசுகிறார்கள். கிம் படத்தில் காட்சி மொழிதான் வார்த்தைக்கு அங்கு வேலையில்லை. *படத்தின் முதல் காட்சியும், இறுதி காட்சியும் என் மூக்கை உடைத்து விட்டது. சற்றும் எதிர்பார்க்கவில்லை. *பிறகு இதில் நாயகன், நீங்கள் வெறுக்கும் ஆனால் விரும்பும் ஒருவனாக இருப்பான். *பாவம் அந்த பெண் ஒரு பாவமும் செய்