Posts

Showing posts from July 19, 2020

நறுமுகை

Image
(குறுங்கதை) குளிர்காலத்தின் ரம்மியமான மாலைநேரம், வெளியில் சில்லென்ற வாடைக் காற்று வீசிக்கொண்டிருந்தது.  விடுதியின் மேல் மாடி அறையின் ஆளுயர கண்ணாடி ஜன்னல்களின்  விலக்கப்பட்ட திரைச்சீலை வழியே  அறையினுள் புகுந்த நிலவொளி போதுமான மட்டும் வெளிச்சத்தை தந்து கொண்டிருந்தபடியால்  அங்கு மின்விளக்குகளுக்கு  தேவையிருக்கவில்லை. மேசையில் பாதி முடிக்கப்பட்ட ஒயின் போத்தலும் கரைந்து கொண்டிருந்த ஓர் மெழுகுவர்த்தியும் மட்டும் அவர்களுக்குப் புரியாத மொழியில் ஏதோ பேசிக்கொண்டிருந்தன... கட்டிலில் அவள் மேல் கிடந்து  மார்பைத் தன் நெஞ்சால் அழுத்தி கொண்டிருந்தவனைத்  தள்ளிவிட்டாள். விழுந்த வேகத்தில் மீண்டும் எழுந்து அவள் கழுத்திற்கும் மார்பிற்கும் இடையில் தன் முகத்தை புதைத்து ஸ்பரிசிக்கத்  தொடங்கினான். மூச்சு திணறியபடி முழுதாய் எதிர்ப்பைக் காட்டாமல், அவனது முரட்டுத்தனத்தை விருப்பியவளாய் அதேநேரம் மேலும் கீழ்நோக்கி நகர ஒத்துழைக்க மறுத்தவளாகவும் இருந்தாள்.  அவள் கண்களை உற்றுப் பார்த்தான். "இப்ப என்ன விட போறியா இல்லையா? " என்று மிரட்டுவதைப்    போலிருந்தது. "மாட்டேன்" என  பார்வையாலேயே  பத