Posts

Showing posts with the label கிறுக்கல்கள்

அரை பிச்சைக்காரன்

ஊருக்கு சென்று வேலையில்லாமல் தெருத்தெருவாக சுற்றி அலைவது போல ஒரு கனவுக் கண்டேன். இதை எல்லாம் நினைத்து பார்க்கும் போதே பயமாக இருக்கிறது. ஊருக்கு சென்றால் நண்பர்களுடன் சேர்ந்து சோமபானம் அருந்தலாம். முகத்தை மறைக்காத  தேவதைகளை பார்க்கலாம். பிறகு கிரகஸ்தனாக மாறி லெளகிக வாழ்க்கையில் உழலலாம். இப்படி சில சந்தோசங்கள் இருந்தாலும் வெளிநாட்டில் இருக்கும் போதே அரை பிச்சைக்காரனாக வாழ்ந்து கொண்டிருக்கும் நான் ஊருக்கு சென்றதும் முழு பிச்சைக்காரனாக மாற வேண்டியிருப்பதை நினைத்து பார்த்தால் தான் கொஞ்சம் கலக்கமாக இருக்கிறது. நண்பன் வேறு "மச்சா புத்தகம் எதும் எழுதும் ஆசை இருந்தா, அங்க இருக்கும் போதே எழுதி விடு. இங்கு வந்த பிறகு லோல் படுவதற்கே நேரம் சரியாக இருக்கும்" என்று பயமுறுத்துகிறான். உண்மை தான்  எந்நேரமும் அரிசி வாங்குவதை பற்றிய யோசனை மண்டையில் இருக்கும் போது இலக்கியம் எப்படி வரும். எழுத்தாளனாக வாழ்வது கூட ஆடம்பரம் தான்.

திசைகாட்டி

Image
மனிதன் திசைகாட்டியை கண்டு பிடிக்கும் வரைக்கும் நெடும் பயணங்கள் சென்று அதே இடத்துக்கு மீண்டும் திரும்பி வருவது சாத்தியமில்லாமல் இருந்தது. இருந்தாலும் மனிதன் புதிய உலகை தேடி பயணம் செய்து கொண்டே இருந்தான். அக்காலகட்டத்தில் நட்சத்திரங்களை அடையாளமாக வைத்து குறிப்பிட்ட திசையை நோக்கி பயணம் செய்தார்கள், ஆனால் வருடம் முழுவதும் அவை ஒரே இடத்தில் இருப்பதில்லை. புவி சுழற்சிக்கு ஏற்ப அவைகளின் நிலையும் மாறுபடும். மாற்று வழி தேவைப்பட்டது. பறவைகளை திசையை அறிந்து கொள்ளுவதற்கு பயன்படுத்த தொடங்கினார்கள். கடல் பயணம் செய்பவர்கள் தங்களுடன் காகங்களை கூண்டில் அடைத்து கொண்டுச் செல்வார்கள். நடு கடலில் தொலைந்து விட்டால், அவற்றை திறந்து பறக்க விட்டு அது சென்ற திசையை பின் தொடர்ந்து செல்வார்கள். அதன் மூலம் நிலத்தை கண்டடைய முடிந்தது. பறவைகளில் காகத்தை தேர்ந்தெடுக்க காரணம், அவற்றின் உயிர்காத்து வாழும் திறன் தான். எந்த உணவை கொடுத்தாலும்  உண்ணும், குளிர் சூடு என எவ்வித தட்பவெப்ப சூழலிலும் வாழும், இலகுவாக பிடிக்கவும் முடியும், மற்றும் மனிதனைக் கண்டு மிரண்டும் போகாது. தீவுகளில் வாழ்ந்த மக்கள் காகத்தை கண்டா...

கிண்டில் (Kindle) என்றால் என்ன?

Image
"மஜ்னூன் குறுங்கதைகள்" புத்தகத்தை எப்படி வாசிப்பது என்று சில நண்பர்கள் கேட்டார்கள். அவர்களுக்கு தான் இந்த பதிவு. இலங்கையில் கிண்டில் (Kindle) என்ற வார்த்தையே பெரும்பாலானவர்களுக்கு புதிதாக இருக்கும். அதைப் பற்றிய சுருக்கமான விளக்கம் Kindle என்பது ஒரு App. இதனை உங்கள் ஸ்மார்ட் போனில் இருக்கும் Google Store இல் இலவசமாக தரவிரக்கம் செய்து கொள்ளலாம். Kindle App மூலம் புத்தகங்களை அதற்குறிய விலையை கொடுத்து தரவிரக்கம் செய்து மின் புத்தகமாக வாசிக்க முடியும். அல்லது குறிப்பிட்ட தொகையை சில மாதங்களுக்கு செலுத்தி வேண்டிய புத்தகத்தை விலை கொடுத்து வாங்காமலே படிக்க முடியும். இம் முறையை Kindle unlimited என்பார்கள். (கவனிக்க; இச் சலுகை சில புத்தகங்களுக்கு மட்டுமே கிடைக்கும்) குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு அந்த புத்தகம் உங்கள் லைப்ரியில் இருந்து மறைந்து விடும். இது இல்லாமல் எழுத்தாளர் விரும்பினால் புத்தகத்தை இலவசமாக ஒரு சில நாட்களுக்கு வழங்குவார், அப்பொழுது தரவிரக்கம் செய்து கொள்ளலாம். நான் எனது புத்தகத்துக்கு ஆகக்குறைந்த விலையாக இந்திய ரூபாய் 49.00 நிர்ணயம் செய்துள்ளேன். Kindle unlim...

ராமர் கோயில் அரசியல்

ஹோமோ செபியன்ஸ் இருக்கும் மட்டும், மதம், நாடு, ஜாதி, சொர்க்கம், நரகம் போன்ற கற்பனை கதைகளும் இருக்கும். அவற்றால் மட்டும் தான் ஒருவருக்கு ஒருவர் அறிமுகமில்லாத பெரும் மனிதக் கூட்டத்தை ஒரு கொள்கையின் கீழ் ஒன்று சேர்க்க முடியும். எதிர்காலத்தில் கூர்ப்பின் மூலம் எம்மைவிடவும் மேம்பட்ட அதிமனிதர்கள் உருவாகும் போது இன் நிலைமை மாறிவிடும். அதற்கு பிறகு தோன்றும் புதிய மதத்தில் புராதான கிரேக்க கடவுள்களை போல இப்போதைய கடவுள்கள் சக்தியை இழந்து இருப்பார்கள்.  அங்கு வேறு ஒரு கடவுள் ஆட்சி செய்து கொண்டிருப்பார். அவருக்கு இப்போதைக்கு பெயர் வைப்பதும், வல்லமைகளை வரையறை செய்வதும் கடினம்.  காரணம் அப்பொழுது நாம் அழிந்து இருப்போம் அல்லது அழிந்து கொண்டிருப்போம்.  அதிமனிதர்களுக்கும் நமக்குமான வித்தியாசம் நியாண்டதால் மனிதர்களுக்கும் ஹோமோ செபியன்ஸ்க்கும் இருக்கும் வேற்றுமையை விட சிக்கலானது.

Life is very short !

Image
ஒருவர் நம் அருகில் இருக்கும் போதோ, உயிருடன்  நம் கண்முன்னே உலாவி திரியும் போதோ, அவர்களை கண்டுகொள்ளாமல் உதாசீனம் செய்துவிட்டு. அவர்கள் நம்  தொடர்பு எல்லையை தாண்டி  மீண்டு வரமுடியாதபடி வெகு தொலைவிற்கு சென்ற பிறகு நினைத்து உருகி கண்ணீர் வடிப்பதில் எதுவும் மாறிவிடப்போவதில்லை.  அவர்கள் பக்கத்தில் இருக்கும் போதே  ஆறுதலாக ஒரு வார்த்தை பேசிவிடுங்கள்.  நெருக்கமானவர் சிறு ஊடல்.  இப்பொழுது பேசுவது இல்லை என்றாலும். மனமுடைந்து போயுள்ளார்கள் என்றால் உங்கள் மேல் தவறே இல்லாவிடினும்  வலிந்து பேசிவிடுங்கள்.  அந்த ஒரு கணம் நீங்கள் தான் கடவுள். உங்கள் வார்த்தையும்  பரிவும் ஓர் உயிரை காப்பாற்றி விடுகிறது. மோசமாக எதுவும் நடக்காத வரைக்கும்  இந்த உண்மை உங்களுக்கே தெரிவதில்லை!

கார்த்தி டயல் செய்த எண்

கார்த்தி டயல் செய்த எண்    குறும்படத்தில் கார்த்தி ஜெஸியிடம்  "ஒரு ஆணா கேட்குறேன்   நீ எனக்கு வேணும் " என்ற வசனம் இங்கு பல கோவலன்களிடம் பெரும் எரிச்சலை உண்டாக்கியிருக்கிறது. உங்களிடம் ஒன்று கூறவேண்டும். இந்த உலகம் கார்த்தி மற்றும் ஜெஸிகளால் நிரம்பியது.  நம் தாத்தா, பாட்டி கூட இதில் அடக்கம். உங்கள் ஜெஸி அவள் கார்த்தியுடன் புணராமல் இருக்க வேண்டும் என்று நினைப்பதில் ஒன்றும் தவறு கிடையாது.  அதற்கு நீங்கள் கற்பு / பருப்பு  என்று வியாக்கினம் பேசி வேலைக்கு ஆகாது. உங்களிடமிருந்து கிடைக்க  வேண்டியது சரியாக கிடைத்துவிட்டால் இந்த படத்தில் வருவது போல கார்த்தியிடம்  எப்படி நைஸாக பேசி அந்த நிலைமை சாதுரியமாக கையாண்டலோ, அதை நிஜ ஜெஸிகள் இன்னும் சிறப்பாக செய்து விடுவார்கள். மேல உங்களிடம் அவளுக்கு வேண்டியதென்று நான்  குறிப்பிட்டது உங்கள் நீண்ட ஆண்குறியை அல்ல!  அன்பும், அரவணைப்பும்.  பிறகு தான் படுக்கை.  இல்லை. நான் எப்படி இருந்தாலும்  நீ கண்ணகியாக தான் வாழவேண்டும் என்று நினைத்தால். புணருதலையே பிறவி நோக்கமாக வைத்து வெறியுடன் அலைந்து...

கிறுக்கனின் கையேடு

Image
மனம் உடைந்து சோர்வாக இருக்கும்  ஒரு தருணத்தில் உங்களுக்கு வாழ்வின் மீதான பிடிப்பும் நம்பிக்கையும் அற்று போகும் இல்லையா? பசிக்காது,  ஓர் சிறந்த நகைச்சுவை காட்சியை  பார்த்து சிரிக்க இயலாது போகும் தருணத்தை கட்டாயம் வாழ்வின் ஏதோவொரு சந்தர்ப்பத்தில்  கடந்து வந்திருப்பீர்கள்.  இதே போல அடிக்குமேல்  அடிவிழும் ஒரு மோசமான  நாளில் இதயம் பாரமாகி, மண்டை வெடித்துவிடும் நிலையிலிருக்கும் நேரத்தில் அதிகமாக பசிக்கும். சாதாரண நகைச்சுவைக்கும் கிளர்ந்தெழுந்து சிரிப்பீர்கள். எதையோ கடந்து வரவும், மறந்து விடவும் தீவிரமாக முயற்சிப்பீர்கள். பாவம்! அதை உங்களிடம்  இருந்தே மறைத்து கொள்வீர்கள். அதற்கு வாய்ப்பில்லை என்று தெரிந்தும், முடியும் என்பதாக நம்புவீர்கள்.     ஜோக்கர் படத்தின் நாயகன் கடும் மனஉளைச்சலுக்கு உள்ளாகும்  போது வெடித்து கதறி அழுவதற்கு  பதிலாக உரக்ககத்தி சிரிக்க ஆரம்பித்து விடுவான். அது அவனை மீறி நிகழும் ஒன்று. ஒரு வேளை கண்ணீராக வெளிப்பட்டிருந்தால் அவன் மனப்பாரம் குறைந்து சரி போயிருக்கும். ஆனால் ஒவ்வொரு முறையும் புறக்கணிப்புக்...

எங்கே உன் கடவுள் ?

Image
நான் இந்து மதத்தை நேசிப்பவன்,  தமிழ் மொழியின் மீதும், கலாசாரத்தின் மீதும் மிகுந்த  பற்றும் மரியாதையும் உடையவன். கவனிக்க, ஆனால் இவை எதன் மீதும் வெறித்தனமான ஈடுபாடு கொண்டவன் அல்ல.,  என் நம்பிக்கையும், மரபையும், பண்பாட்டையும் சுயவிமர்சனம் செய்து கொள்வதற்கான சுகந்திரத்தை இந்து மதம் எனக்கு அளித்தது. அதனால் அறிவையும் புரிதலையும் வளர்த்து கொள்ள முடிந்தது. எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு ஆனால் என் கடவுளுக்கு மதமில்லை. மொழி பற்றுண்டு இனவெறியில்லை. "யாதும் ஊரே யாவரும் கேளிர்" எல்லா  ஊரும் என் ஊர், எல்லா  மொழியும் என் மொழி.  எல்லோரும் ஹோமோசெபியன்  என்ற கொள்கையில் வாழ்பவன்.  விடலை பருவத்தில் திடீர் என உதிக்கும் ஞானத்தில் இந்து மதத்தில் உள்ள புராணங்களையும், நம்பிக்கைகளையும் கேலிக்கு உள்ளாக்கி விமர்சிப்பவர்களை பார்க்கும் போது பாவமாக இருக்கும்.  நானும் " பிக் பேங்க் தியரியை " ,  "டார்வினின் கூர்ப்பு கொள்கையையும்" , அறிந்து கொண்ட புதிதில் திமிறியபடி பாட்டியுடன் "எங்கே உன் கடவுள்? காட்டுனு" விதண்டாவாதம் செய்தவன் தான். அவள் என்னை பார்த்து புன்னக...

புது எழுத்தாளரும் புத்தம் புது எழுத்தாளரும்

குறுங்கதை   Autofiction  ஒரு புது எழுத்தாளரிடம் நான் எழுதிய சில கதைளை கொடுத்து  "இந்த பாணியில் ஒரு புத்தகம் எழுதினால் நல்லாயிருக்குமா? வாசித்து உங்கள் கருத்தை சொல்லுங்கனு" கேட்டேன். பல நினைவூட்டலுக்கு பிறகு அவர் வாசித்துவிட்டு கூப்பிட்டிருந்தார். நானும் ஆவலுடன் போயிருந்தேன். பு.எழுத்தாளர்:  என்ன தோழர் மயிரு மாதிரி எழுதி வச்சிருக்கிங்க? இதெல்லாம் தூக்கி குப்பையிலே போட்டுட்டு புதுசா எழுதுங்க என்பதை ரொம்ப நாசூக்கா நாகரிகமா சொன்னார். பிறகு " இன்னும் இந்த காதல் கேசத்தை விட்டால் வேற எதும் இல்லையா? எத்தனையோ பேர் இதை எழுதி, எழுதி கிழிச்சு தொங்க போட்டுட்டாங்க தோழர்?  எனக்கு தெரியும் உங்களுக்கு திறமை இருக்கு இதை அப்பிடியே உங்க தளவாணிக்கு கீழே வச்சிட்டு வேற  எதாச்சும் புதுசா ப்ரஷ் கன்டென்ட் தேடி எழுதுங்க, என்ன சொல்லுறது  புரியுதா?  நான்:  இல்லை...., சார் புதுசா எழுதினாலும் இப்படிதான் எழுதவரும். பு.எழுத்தாளர்:  தோழர் உங்களால முடியும், எனக்கு தெரியும் யோசிங்க, நல்லா யோசிங்க ஒன்னும் அவசரமில்லை  நான்:  ...

சாமிக்கண்ணும் நானும் !

Image
பள்ளிகாலத்தில் ஒரு நண்பன் இருந்தான். சிறந்த பக்திமான், ஒழுக்க சீலன், அநியாயத்திற்கு நல்லவன். இப்படி பல சிறப்புகளை உடையவன்.  உதாரணத்திற்கு ஓர் சம்பவத்தை குறிப்பிடுகிறேன். அப்பொழுது நான் சொல்வது உங்களுக்கு புரியும். ஒரு நாள் ரஜனிகாந்தின் "சிவாஜி" படம் வெளியான புதிதில் பார்ப்பதற்கு நானும், அந்த  நல்லவனும், இன்னொரு நண்பனும் தியேட்டர் போயிருந்தோம்.  " பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல் புன்னகையோ மவ்வல் மவ்வல்" பாட்டிற்கு ஸ்ரேயா சிக்கனமாய் மறைக்கபட்ட மேலாடையில் கொங்கைகள் குலுங்க, குலுங்க ஆடிக்கொண்டிருந்ததை,  இந்திரியம் வெளியேறாத குறையாக  வாயை ஆ..! வேன பிளந்து ரசித்து கொண்டிருந்தோன். பிரமாண்ட திரையில் அந்த அழகியின் வளைவு நெளிவுகள், ஏற்ற இறக்கங்கள் பிஷ்டத்தின் மென் அசைவுகள் எல்லாம் சேர்ந்து என்னை கிறங்கடித்து கொண்டிருந்தது. நான் பாடல் காட்சியின் ஒரு பிரேமை கூட தவறவிடுவதாக இல்லை. இடைக்கிடையில் ரஜனி தனியே ஆடும் போதுமட்டும் கண்களை சிமிட்டி கொண்டோன். தற்செயலாக நான் திரும்பி என்பக்கத்தில் அமர்ந்திருந்த நல்லவனை பார்த்தேன். தலையை காணவில்லை. எங்கே என தேடிய பொழ...

வாயிலேயே வெட்டு

குறுங்கதை டேய் பொண்ணு போட்டோ வாட்ஸாப் பண்ணிருந்தேனே பாத்தியா?  பாத்தேன், நீ போட்டோவை மாத்தி அனுப்பிட்டமா 'சரவணன் மீனாட்சி'  கதையில வாரமாதிரி ஒரு பொண்ணுட போட்டோதான் வந்துருந்துச்சி  சிகப்பு சாரி கட்டுன போட்டோ தானே? ஆமா, பாதி செல்ஃபீ.  அதுதாண்டா பொண்ணு.... யம்மா... சரியாதான் சொல்லுறியா?  அது என்னமோ சேலிப்ரட்டி மாதிரிலே இருக்கு. என்னதான் மொபைல எடிட் பண்ணிருத்தாகூட ரொம்ப அழகா இருக்காளே! சந்தேகமேபடாதடா அதுதான் பொண்ணு.  அப்போ வேணாம். எனக்கு பிடிக்கலனு சொல்லிடு.  கிறுக்கு பயலே! என்னடா சொல்லுற? அந்த பொண்ணுக்கு என்ன குறை, தங்க சிலையாட்டம் இருக்காளே!? அதுதான் பிரச்சனையே, சுமாரான பிகரே வேணான்னுட்டு போய்டுறாளுங்க, இந்த பொண்ணு வேற ரொம்ப அழகா இருக்கா நிச்சயமா சொதப்பிடும் ஏன்டா இப்படி அபசகுனமா யோசிக்கிற?  இரு முதல்ல ஜோசியர் கிட்ட குடுத்து பொருத்தம் பார்ப்போம்.  எனக்கு அவனை நினச்சாதான் பயமே, நிச்சயமா ஏதாச்சும் சொல்லி கொழப்பிடுவான். பெரியவங்கள அப்பிடி சொல்ல கூடாதுடா, சரி நா எல்லாம் பேசிட்டு உனக...

வைல்ட் வேஸ்ட் தோட்டம்

Image
சவூதிக்கு வந்த பிறகு இரண்டு விடயத்தை இழந்தேன். ஒன்று மண்வாசம் மற்றையது பெண்வாசம். இதற்கு தவறாக அர்த்தம் கற்பித்து கொள்ளவேண்டாம். நம் நாட்டில் போல பெண்களையே இங்கு பார்க்க முடியாது. நம் ஊர் பஸ்சில் மூன்று கிலோமீட்டர் தூரம் பயணம் செய்தாலே அந்த குறை தீர்ந்து விடும். குமரி, முதல் கிழவி வரை சுற்றி இருக்கும். இங்கு ஒரே தாடியும் மீசையும் தான். சரி விடுங்கள். இதுவல்ல நான் சொல்லவந்த விடயம். மரம், செடி, கொடி, புல், பறவை இப்படி எதுவும் இலகுவில் கண்ணில்படாத பாலைவன தேசம் இது. பூங்காக்களுக்கு சென்றால் பார்க்கலாம். தினசரி வாழ்வில் அதுவும் சாத்தியப்படாது.   என் அறையிருக்கும் ஆறு மாடி கட்டிடத்தின் உச்சியில்  சப்பாத்தி கள்ளிச் செடியும், கற்றாழையும் வளர்க்கிறேன். அனல் அடிக்கும் வெயிலுக்கு இதுமட்டும்தான் தாக்குப் பிடிக்கும். தண்ணிரை ஒரு  கிளாசில் எடுத்து காட்டினால் போதும்.  ஊற்றக் கூட தேவையில்லை. ரொம்ப  நல்ல தாவரம்!  இன்று என்னுடைய இந்த வைல்ட் வேஸ்ட் தோட்டத்தில் சில ஒழுங்கு படுத்தல்கள் செய்தேன். இனி வருடம் முழுவதும் இதுதான்...

T-வைரஸ் vs கோவிட்-19

Image
Resident evil என்றொரு பிரபலமான அறிவியல் பாண்டஸி வகையை சார்ந்த ஹாலிவுட் திரைப்படதை பார்த்து உள்ளீர்களா ? அதில் அம்ரெல்லா கார்பொரேஷன் என்னும் நிறுவனம் T-வைரஸ் என்னும் படுஆபத்தான  உயிரியல் ஆயுதத்தை இரகசியமாக உருவாக்கும். ஒரு விபத்தில் அந்த வைரஸ் அடங்கிய பரிசோதனை குழாய் கீழே விழுந்து வெடித்து சிதற T-வைரஸ் பரவஆரம்பித்து ஒரு கட்டத்தில் கட்டுப்பாடின்றி அந்த நிறுவனம் அமைந்திருந்த ரக்கூன் நகரம் முழுவதும் பரவதொடங்கிவிடும். T-வைரஸால் பாதிக்கபட்ட மனிதர்கள், விலங்குகள் என எல்லோரும்  ஸோம்பியாக உருமாறி மனிதர்களை கடித்து இரத்ததை உறிஞ்சு குடிக்க ஆரம்பித்து விடுவார்கள். கடிப்படும் அனைவருக்கும் அந்த வைரஸ் தொற்றிக்கொள்ளும் பிறகு அவர்களும் ஸோம்பிதான். அம்ரெல்லா நிறுவனம் தங்கள் தவறு உலகத்துக்கு தெரியக் கூடாதென்று  அந்த நகரத்தை தனிமைப்படுத்தி கூண்டோடு எல்லோரையும் அழித்து விடமுயற்சிப்பார்கள். இப்படி கதை பாகம் ஆறு வரைக்கும் நீண்டு போகும். நல்ல சுவாரசியமான திரைப்படதொடர். கிட்டத்தட்ட அதற்கு ஒப்பான சம்பவங்கள் தான் இப்பொழுது உலகத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. என்ன ஒரு குறை? ஸோம்பிய...

'சிங்க' பெண்கள்

மகளிர் தினத்திற்கு ஒருவாரம் முன்பும், பிறகு முடிந்து சிலநாட்கள் கழித்தும்  'சிங்க' பெண்கள் பேரும் வெறியுடன் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.   வழியில் சிக்குபவர்களுக்கு எல்லாம் செமத்தியான அடி, புரட்டி எடுத்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் பதிவுகளில் பொத்தம்பொதுவாக எல்லா ஆண்களையும் வில்லன்களாக்கி போட்டுத் தாக்கி கொண்டிருக்கிறார்கள்.  அநேகமாக அவர்கள் படித்த சமீபத்திய அதிதீவிர பெண்ணியவாதிகளின் நூல்களும், சிந்தனைகளும் தான் இதற்கு காரணம். கற்றறிதல் நல்ல விஷயம்தான். ஆனால் அதை அப்படியே தங்களை சுற்றியுள்ள உண்மையாகவே பெண்களின் மீது அன்பும், அக்கறையும்,  நம்பிக்கையும், கொண்ட உறவுகளான அப்பா, அண்ணா, நண்பன், காதலன் மீது திடீர் என்று பிரயோகிக்கும் போது  " இந்த புள்ளைக்கு என்னாச்சு!, எதுக்கு எரிச்சு விழுறா!? "  வென்று, ஒரு மண்ணும் புரியாது தடுமாறி போகிறார்கள். இதில் மோசமாக தாக்கபடுவது நிஜமாகவே பெண்களை மதித்து அன்பு செய்யும்  ஆண்கள்தான். பாவம் வெறித்தனமான  தாக்குதல்!.  இப்பொழுதுதெல்லாம் பெண்கள் தினவாழ்த்து சொல்லவே பயமாக உள்ளது.  ...

ஒரு காலை பொழுதில்

Image
பதமாக பக்குவபடுத்திய நான்கு  ஏலக்காய்யை நன்றாக இடித்து துலாக்கி அடுப்பில் அரை கப்பிற்கும் குறைவான கொதிக்கும் நீரிலிட்டு பிறகு உயர்ரக தேயிலையில் ஒரு கரண்டியும் சேர்த்து நன்றாக சாயம் வரும்மட்டும்  கொதிக்கவிட்டு பின்பு சில நிமிடங்களில் ஒரு கப் பசும் பாலை சேர்த்து  சற்று நேரத்தில் சீனியும் ஒரு கரண்டி சேர்த்து. பால் பொங்கிவரும் தருணத்தில் அடுப்பின் நெருப்பின் அளவை குறைத்து மிதமான வெப்பத்தில் மீண்டும் சில நிமிடங்கள் கொதிக்கவிட்டு சாயமும் பாலும் சேர்ந்து மண்ணிறம் பொன்னிறமாக மாறும் கணத்தில் இறக்கியேடுத்து, நாக்கில் மேன்சூடுபட பருகினால் ஆஹா ஹா ! அந்த சுவையை எப்படி வார்த்தைகள் கொண்டு வர்ணிப்பேன். அமிர்தம் தோற்றுவிடும். நல்ல கலவியில் உச்சத்திலிருக்கும் பேரின்பத்திற்கு சமம்.

கரைந்த கைரேகை

ஆபீஸ்ல் அரேபிய நண்பனின் கம்ப்யூட்டரில் எதோ சின்ன பிரச்சனை ஜன்னல் திறக்கவில்லை அதுதான் 'விண்டோஸ் ஓபன்' ஆகல, நெடுநேரம் தடுமாறிக்கொண்டிருந்தான்.பிறகு என்னை கொஞ்சம் என்னவென்று பார்க்க சொன்னான். நான் பார்த்து சரி செய்து கொடுத்தேன். பயல் குதூகலமாகி   "சுக்ரான் ஹபீபி" சொல்லிவிட்டு ('நன்றி நண்பானு' தமிழில் அர்த்தப்படும்) "உனக்கு ஒன்னு தெரியுமா? சவூதி அரேபியால ஒருத்தர் உதவி பண்ணுனா, உன் கல்யாணத்துல உனக்கு நான் திருப்பி பண்ணிடுவேன்னு சொல்லுவோம், இது எங்களின் மரபு, நீ பண்ணுன உதவிக்கு, உன் கல்யாணத்துல நான் திருப்பி பண்ணுறேன்னு " சிரித்தபடி சொன்னான். நான் "கல்யாணத்துல உதவி பண்ணவேணாம், முதல் கல்யாணம் நடக்க எதாச்சும் உதவி பண்ணு  அப்படி ஒரு சம்பவம் நடக்குமானே சந்தேகமா இருக்குடானு "என் சோகபுராணத்தை பாட ஆரம்பிக்க   அவன்  " நானே எங்க அப்பன்கிட்ட கல்யாணம் பண்ணிவைக்க சொல்லி கெஞ்சிட்டு இருக்கேன் நீ வேறனு " புலம்பினான். உலகம் பூராவும் நைன்டி கிட்ஸ்சின் நிலைமை பரிதாபமாகி கிடக்குதேயேன்ற சமூக அக்கறையில்  நான் மேலும் துருவி கேட்கஆரம்பித்தேன்.  ...

காதலிக்கு சொல்லக்கூடாத கதை

நான் பத்தாம் அல்லது பதினோராம் வகுப்பு படிக்கும் போது இந்து சமயப்பாடத்தில் இளையான்குடிமாற நாயனாரின் கதையொன்று இருந்தது. எனக்கு ரொம்ப பிடிக்கும். முதலில் கதையை சொல்லிடுறேன். இளையான்குடிமாறநாயனார் மிகத்தீவிரமான சிவபக்தர். எம்பெருமான் மீது மிகுந்த அன்புடையவர். பசியென்றுவரும் சிவனடியார்களுக்கு இல்லன்னு சொல்லாம வயிறார சாப்பாடு போட்டு அனுப்புவார். எந்த சூழ்நிலையிலும் தவறாமல் அப்பணியினை மேற்கொண்டு வருகிறார். கடவுளின் அருளால் அவருக்கு மேலும், மேலும் செல்வமும் வளமும் பெருகுது. இப்படியெல்லாம் சுமூகமாக போய்ட்டு இருக்கும் போது சிவபெருமான் அவரின் பக்தியை சோதிச்சு பார்க்க முடிவுபண்ணுறாரு. சிவனுக்கு இதுதான் வேலையே! தன்னுடைய தீவிர பக்தர்களுக்கு தாங்க முடியாத அளவுக்கு கஷ்டத்தை கொடுத்து டார்ச்சர் பண்ணுவாரு.  இவர் கொடுக்குற கஷ்டத்தை தாங்க முடியாமல் அவர்கள் வேறு மதத்துக்கு மாறிப்போகாமல் இருந்தது பெரிய விஷயம். அந்த அளவுக்கு டார்ச்சர் லெவல் இருக்கும். ஆனால் இதையெல்லாம் காரணமாக சொல்லி நாயன்மார்கள் போகமாட்டாங்க. சிவன் மேல்  தீராக்காதல் அவர்களுக்கு. (ஆனால் குடியானவர்கள் யாரும் அப்படி போகவும் முடி...

தீராக்காதலி

Image
ஹாய்... எப்படி இருக்கீங்க?  நல்லா இருக்கீங்களா? சாப்பிட்டாச்சா? என் மேல கோவமா? பரவால்ல கோவிச்சிக்கிறுக்குங்க ஆனா சந்தோசமா இருங்க. ஹாய்... நா நல்லா இருக்கேன்.  நீ எப்படி இருக்க? ஓஹோ... தேங்க்யு சார் !  நா எதோ இருக்கேன். என் மேல நீங்க கோவமில்லையா? எந்த காரணமும் சொல்லாம  உங்களை விட்டு போனதுக்கு? பரவால்ல. பேசுனத்துக்கு தேங்க்ஸ் நீங்க நல்லாயிருந்தா எனக்கு அது போதும். போறது தான் போனே, ஒரேடியா விட்டு போக வேண்டியது தானேடி?  பிறந்த நாளைக்கு கேக்குக்கு பதிலா  என்னை வெட்டிட்டு போகலாமுன்னு வந்தியா? அது எப்படி டீ? நீயே கொன்னு போட்டுட்டு சாக துடிச்சிகிட்டுயிருக்கவன் கிட்ட வந்து நீ இன்னும் உயிரோடதான் இருக்கிறியான்னு கேக்குற மாதிரி கேசுவலா சார் போட்டு பேசுற? கொஞ்சம் கூடவா உனக்கு வலிக்கல? கல்நெஞ்சுகாரிடி நீ! நீ பண்ணுனது எப்படி இருக்கு தெரியுமா? ஒரு பாவமும் அறியாத அப்பாவியை தூக்கு மேடையில் ஏற்றிய உடன் கேட்டானாம். எதற்கு ஐயா எனக்கு இந்த  தண்டனை? என்ன தவறு செய்தேனு சரி சொல்லுங்க. காரணம் தெரியாமல் எனக்கு உயிரை விட ஆசையில்லை என்றத...

Chat with கிறுக்கி

Image
   என்னை பற்றியெல்லாம் எழுதமாட்டியா? எழுதலாம். அதுக்கு நீ என்னிடம் இன்னும் நெருங்கி வரணும் ஐயே.... தேவல்லயே  இல்லடி..., நான் அந்த அர்த்தத்தில் சொல்லவரல. தப்பா புரிஞ்சிக்காத. நாம இப்பே தானே பேச ஆரம்பிச்சு இருக்கோம். இன்னும் நெருக்கமா பழகணும். அப்போ தான் எழுத முடியுமுன்னு சொல்லவந்தேன். (இந்த உரையாடலின் இடையே சில நேனோ செக்கன்கள் குறுக்கிட்ட என் மனது "டேய் நீ அவளை வேணும்னா ஏமாத்தலாம் என்கிட்ட முடியாது. உண்மையை சொல்லு, நீ இரட்டை அர்த்தத்தில் தானே சொன்ன? " ஆமா சும்மா பேச்சின்  சுவாரசியக்காக சொன்னேன். அதுக்கு ஏன்டா என்னை வில்லனாக்க பாக்குற?)  இப்படி அரட்டையின் வழியே நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நட்பு வளர்த்து கொண்டிருந்தது. சில மாதங்களுக்கு பிறகு  நான்  குட் மோர்னிங் டியர்  பதில் இல்லை மறுநாளும் நான்  குட் மோர்னிங்  பதில் இல்லை   கிறுக்கி, லூசு, நாய்.. மூன்றாம் நாள் அவளிடம் இருந்து பதில் வந்தது. ஹாய்...  எதுக்கு இப்படி திட்டுற...? ஒரு மெசேஜ் இல்லை....

வெள்ளிக்கிழமை பிரியாணி

Image
என் அப்பார்ட்மெண்டுக்கு பக்கத்துல மலையாள பூப்பிய்யா ஒன்னு இருக்கு (சிறிய சாப்பாட்டு கடைகளை இங்கே  பூப்பியான்னு சொல்லுவாங்க. "பூப்" என்பதை "பூ" வுக்கு முன்பு "ப்" சேர்த்து அழுத்தம் கூட்டி வாசிங்க) அங்கு வெள்ளிக்கிழமை நாட்களில் மட்டும் ஸ்பேஷலா பிரியாணி கிடைக்கும். அது ஏன்னா?  வெள்ளிக்கிழமை தான் சவூதியின் வாரஇறுதி விடுமுறை நாள்.  நம்ப ஊருல ஞாயிறுமாதிரி. கோழி பிரியாணி, மட்டன் பிரியாணி, மீன் பிரியாணி, செம்மீனு பிரியாணி (இறாலுக்கு மலையாளத்தில் செம்மீனுன்னு பெயர்) வேறு எங்கும் கிடைக்காத இன்னொரு ஸ்பெஷல் ஐட்டமும் கிடைக்கும். அதுதான் ஒட்டக பிரியாணி பொதுவா எல்லா சாப்பாட்டு கடையிலும் கிடைக்காது. எனக்கு தெரிந்து இங்கு மட்டும் தான்.  ஆரம்பத்தில் எனக்கு பெரிதாக பிரியாணி மீது நாட்டமில்லை. காரணம் கோழி கறியில் சோற்றை போட்டு கிண்டி பிரியாணின்னு பேர் வைச்சு கொடுப்பானுக. இறைச்சி துண்டேயிருக்காது. ஆனால் இங்கு சாப்பிட்ட பிறகுதான் அசல் பிரியாணி எதுவென்று  தெரிந்துகொண்டேன். பாஸ்மதி அரிசியை நல்ல பதமா வேகவைத்து. வஞ்சகமே இல்லாம கஜூ, உலர் திராட்சை, ஏலக்காய், க...