புது எழுத்தாளரும் புத்தம் புது எழுத்தாளரும்

குறுங்கதை 
 Autofiction 

ஒரு புது எழுத்தாளரிடம் நான் எழுதிய சில கதைளை கொடுத்து  "இந்த பாணியில் ஒரு புத்தகம் எழுதினால் நல்லாயிருக்குமா? வாசித்து உங்கள் கருத்தை சொல்லுங்கனு" கேட்டேன். பல நினைவூட்டலுக்கு பிறகு அவர் வாசித்துவிட்டு கூப்பிட்டிருந்தார். நானும் ஆவலுடன் போயிருந்தேன்.

பு.எழுத்தாளர்: 
என்ன தோழர் மயிரு மாதிரி எழுதி வச்சிருக்கிங்க? இதெல்லாம் தூக்கி குப்பையிலே போட்டுட்டு புதுசா எழுதுங்க என்பதை ரொம்ப நாசூக்கா நாகரிகமா சொன்னார். பிறகு " இன்னும் இந்த காதல் கேசத்தை விட்டால் வேற எதும் இல்லையா? எத்தனையோ பேர் இதை எழுதி, எழுதி கிழிச்சு தொங்க போட்டுட்டாங்க தோழர்? 
எனக்கு தெரியும் உங்களுக்கு திறமை இருக்கு இதை அப்பிடியே உங்க தளவாணிக்கு கீழே வச்சிட்டு வேற 
எதாச்சும் புதுசா ப்ரஷ் கன்டென்ட் தேடி எழுதுங்க, என்ன சொல்லுறது  புரியுதா? 

நான்: 
இல்லை...., சார் புதுசா எழுதினாலும் இப்படிதான் எழுதவரும்.

பு.எழுத்தாளர்: 
தோழர் உங்களால முடியும், எனக்கு தெரியும் யோசிங்க, நல்லா யோசிங்க ஒன்னும் அவசரமில்லை 

நான்: 
என் வயசுக்கு அனுபவத்திற்கும் எது 
வருதோ அதை தானே எழுத முடியும். என்கிட்ட போய்ட்டு சாரு, ஜெமோ, ஏஸ் ரா, மாதிரி எழுத சொன்ன எப்படி சார், மெதுவா தானே வரமுடியும். உலகமே கொண்டாடிய ஷேக்ஸ்பியறின் கற்பனாவாத 
படைப்புகளை யதார்த்தவாதத்தை முதன்மைபடுத்திய டால்ஸ்டாய் முற்று முழுசா மறுதலிச்சாரே அப்போ 
ஷேக்ஸ்பியர் எழுதினது எல்லாம் ஒன்னுமில்லாம போயிடுமா சார் ?

பு.எழுத்தாளர்: 
இப்போ நீங்க ஷேக்ஸ்பியர்னு சொல்ல வாரீங்கலா தோழர் ? 
(எழுத்தாளர் மேலும் கடுப்பாகி)
 நான் சொல்லுறது உங்களுக்கு புரியுதில்லை தோழர், கேசம் மாதிரியேன் யோசிக்கிறீங்க? இதை எடுத்துக்கிட்டு பப்ளிஷர்கிட்ட போனால் தூக்கி மூச்சிலேயே அடிப்பாங்க தோழர் உங்களுக்கு ஏன் அது புரிய மாட்டேங்குது.

நான்: 
(இன்னும் விறைப்பாக) 
"புதியதாக எழுத வரும் எழுத்தாளருக்கு நான் முதலில் சொல்ல விரும்புவது முதலில் உங்களுக்காக எழுதுங்கள் மற்றவர்களுக்கு பின்பு பார்த்துக் கொள்ளலாம்." இப்படி 
டி.எஸ்.எலியட் சொன்னதெல்லாம் அப்போ பொய்யா சார் !? 

பு.எழுத்தாளர்: 
யாரு தோழர் எலியட் உங்க அப்பாவ ? அவர் சொல்லுவாரு  ரியாலிட்டில இதெல்லாம் எடுப்படாது தோழர்....!

நான்: 
சரி சார் நீங்க சொல்லுற மாதிரி எழுத நான் இன்னும் அஞ்சு, பத்து  வருஷம் பயிற்சி பண்ணிட்டுவாரேன். இப்போ என்னை விட்ருங்க சார்! தெரியாம உங்ககிட்ட கேட்டுட்டேன். நா போகட்டுமா சார் இனிமே இந்த பக்கம்கூட தலைவச்சி 
படுக்கமாட்டேன் சார்.

பு.எழுத்தளார்: 
தோழர் ஏன் மனசை தளர விடுறிங்க? 
நான் உங்களே டிமொட்டிவேட் 
பண்ணிட்டேனா? எனக்கு தெரியும் உங்களால முடியும்…. 'கம் ஒன்,
டோன்ட் கிவ் அப்' !

நான்: 
(ஆள விடுடா சாமி, திரும்ப முதலே இருந்து ஆரம்பிக்காத) ஐயோ அப்படி இல்லை சார்! என் அறிவு கண்ணை திறந்துடிங்க, ப்ளஸ் என் எழுத்தை படிச்சிட்டு சூசைட் பண்ணிக்க இருந்த பல உயிர்களையும் காப்பாத்திடிங்க
நான் புத்தகமே எழுதமாட்டேன். இது உங்க ஓடி போன பொண்டாட்டி மேல சத்தியம். 

சார் உங்க அடுத்த புத்தகத்தை எப்ப வெளியீடுவிங்க, உங்க முதல் ரெண்டு புத்தகத்துக்கு எழுதுன மாதிரி சில்லறையை சிதறவிட்டு இதுக்கும் ரீவியூ போடுறேன் 
சார், ரொம்பபபபபப வெறியோட இருக்கேன் சார்ர்ர்ர் ! (தமிழ் பட ஹீரோவுக்கு மாதிரி எனக்கு  கண்கள் சிவந்து, நரம்புகள் புடைத்து, உடம்பு நடுங்க ஆரம்பித்ததை கண்ட எழுத்தாளர் டீ கிளாஸ்சை தூங்கி தலையில் எதும் அடிச்சுருவானோவென்று பீதியடைந்ததை உணரமுடிந்தது)

பு.எழுத்தளார்: 
அது வரும் போது கட்டாயம் உங்களுக்கு ஒரு பிரதி தாரேன். முதல்ல தண்ணி குடிங்க தோழர், பாருங்க எப்படி உடம்பெல்லாம்  வேர்த்து இருக்கு, நாமே இதை பத்தி இன்னொரு நேரம் பேசுவமே. 

(மை மைன்ட் வாய்ஸ்) 
கொய்யால உன்கிட்ட கேட்டேன் பாரு எனக்கு தேவைடா! உன் அடுத்த புத்தகம் வரட்டும் கழுவி ஊத்துறேன். 

நரேஷ் 03-26-2020

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I