கடந்து வந்த பாதை


கடந்து வந்த சிலநாட்களை அவ்வளவு சுலபமாக மறந்து விடமுடியாது. எல்லாம் நல்லப்படியா போய்ட்டுயிருக்கும் போது எதிர்பார்க்காத நேரத்துல வாழ்கை கல்லை தூக்கி மண்டையிலேயே ஒரே போடா போடும்! ஒரு கணம் உலகமே இருட்டி போயிட்டு தலைசுத்தி ஒன்னும் புரியாம கலங்கி நிற்போம் பாருங்க அப்போ புரிய ஆரம்பிக்கும் வாழ்கை.....

நான் ஸ்ரீபாத கல்லுரிக்கு நேர்முக பரீட்சைக்கு போன அனுபவத்தை உங்ககிட்ட பகிர்ந்துக்கிறப்போறேன். என் வாழ்கையில ரொம்ப முக்கியமான நாள் அது. ஆசிரியருக்கான கற்கை நெறியில் சேர்த்து கொள்ள தகுதிகளாக அவர்கள் கேட்டது உயர்தரத்தில் விஞ்ஞான பிரிவில் இரண்டு பாடங்களில் சித்தி மட்டுமே என்னிடம் அந்த தகமை இருந்தது. முதலில் எனக்கு ஆர்வம் இருக்கவில்லை. காரணம் எனக்கு வாய்ப்புகள் குறைவாக இருப்பதாக தோன்றிமைதான். பள்ளி படிப்பு முடிச்சு வெளிஉலகத்துக்கு வந்து சரியான வேலை கிடைக்காம என்னடா பண்ணபோறோமுன்னு  எதிர்காலத்தை நினைத்து பயந்தகொண்டிருந்த நாட்கள் அவை. ஏழுஆயிரம் ரூபாய் மாதசம்பளத்தில் நாக்கு வலித்து கொண்டிருந்த என்னை போன்ற லோவர் மிடில் கிளாஸ் பையனுக்கு ஆசிரியர்  வேலைங்குறது தங்க புதையல் கிடைச்ச மாதிரி! அதற்கு பிறகு ஏறுமுகம்தான். பெரும்பாலான எளிய மலையக தமிழ் மக்களின் வாழ்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போனதே ஆசிரியர் உத்தியோகம்தான்.

ஒரு வேலை நமக்கும் வாய்ப்பு கிடைச்சு படிச்சு ஆசிரியராகிட்டா?  வாழ்கையே மாறிபோயிடும். வீடுகட்டலாம், தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம், என்னவளின் வீட்டுக்கே போய்ட்டு அவங்க பெற்றோர்கிட்ட பேசி தைரியமா உங்க பொண்ண எனக்கு கட்டிதாங்கனு கேட்கலாம்.
இதைவிட என்ன வேணும்?
முயற்சி செய்து பார்த்துரலாமுன்னு விண்ணப்பிச்சிட்டேன். நேர்முக தேர்விற்கு குறிப்பிட்ட தேதியில் வரும்படி பதில்கடிதமும் வந்துருச்சு. விஞ்ஞான பிரிவிற்கு வாய்ப்பு அதிகம் நீ கட்டாயம் தேர்வாகிடுவனு நம்பிக்கையை என் வளர்ச்சியில் சந்தோசம் அடைய கூடிய உறவுகள் எல்லாம் தந்தாங்க. நானும் கனவு காணஆரம்பிச்சிட்டேன்.

பயண நாளும் நெருங்கிவர ஆரம்பிச்சிருச்சி..., கல்லுரி அமைந்து இருந்தது வேறு ஒரு பிரதேசத்தில்.  அங்கே சரியான நேரத்துக்கு நேர்முகபரீட்சைக்கு போய்ட்டு சேரணுமுனா முதல்னாலே அங்கு சென்று ஒரு இரவை கழித்து விட்டு காலையில் போனால் தான் முடியும். ஒருவாறு நண்பரின் வீட்டில் தங்கிபோக ஏற்பாடு செய்தாகிவிட்டது. இப்போ கையில பயணசிலவுக்கனா காசுமில்லை. மாதகடைசி வேறு அங்க, இங்கேனு கேட்டு கடனான அதையும்  தயார்பண்ணிட்டேன்.

எதிர்பார்த்திருந்த நாளும் வந்தது. நேர்முக பரிட்சை நடக்க போகும் அறைக்கு வெளியில இப்போ உட்காந்துயிருக்கேன். ஆண்களும், பெண்களுமாக இருபத்தைந்து தொடக்கம் முப்பது பேர் வரை இருந்த ஞாபகம். முதல் சில நிமிடங்கள் நிசப்தம். யாரையும் யாருக்கு தெரியாது இல்லையா? மெது மெதுவாக பக்கத்து பக்கத்துல இருக்க பசங்ககிட்ட பேச்சு ஆரம்பிச்சுது. எந்த ஊரு? உயர் தரத்துல என்ன பிரிவில் படிச்சீங்க? பேருபேறுகள் எப்பிடி? என பேச்சுக்கள் தொடர்ந்தன. என் பக்கத்துல இருந்து ஒரு பையனுக்கு கல்லூரியின் தேர்வுமுறை தொடர்பான விஷயங்கள் தெரிஞ்சுருந்தது. என்னுடைய ரிசல்ட்  இதுதான் நான் செலேக்ட் ஆயிடுவேனானு சந்தேகங்களையும் கேட்டுக்கொண்டேன்.
நேரம் போக, போக சில வால் பசங்க பொண்ணுகளையும் பேச்சுக்கு இழுத்து ஜோதில கலக்க வச்சிட்டாங்க. கிட்ட தட்ட திருப்ப ஸ்கூல்ளுக்கு போன பீலிங்! இந்த சம்பாஷணைகள் எல்லாம் காத்திருந்த அந்த ஒருமணிநேரத்திற்கும் குறைவான நிமிடங்களில் நடந்தவை.

நேர்முக பரீட்சை ஆரம்பிச்சிடுச்சு திரும்பவும் மயான அமைதி. என்ன கேள்வி கேக்க போறாங்களே, நாமே செலெக்ட்டாயிடுவோமா? இல்லையானு? பதட்டம் வேறு. ஒவ்வொருத்தரா உள்ளே போகும் போதும் என்னுடைய முறையை நினைச்சு இதயம் பயங்கரமா அடிச்சுக்க ஆரம்பிச்சுருச்சு... திக் திக் வினாடிகள்!. அப்போ கூட அந்த வால் பசங்க அடங்கவே இல்லை எதாச்சும் பேசி சிரிச்சு சாதாரணமா இருந்தாங்க.

என்னோட முறை வந்துச்சு உள்ளே போய்ட்டு உக்காந்தேன். ஆண், பெண் அடங்களா ஐந்து பேரை கொண்ட  நாற்பது தொடக்கம் ஐம்பது வயது மதிக்கதக்க பேராசிரியர் தெரிவுக்குலாம். அதுல ஒருத்தர் என் பைலை வாங்கி பார்த்தாரு சுமாரா முப்பது வினாடி கூட இருக்காது உடனே உன்னோட ரிசால்ட் காணாது நீ போகலாம்னு சொல்லி பைலை  திருப்பிகொடுக்க அந்த கணம் தலையில இடி விழுந்த மாதிரி இருந்துச்சி! கொஞ்சம் கூட எதிர்பார்க்கல. கட்டிவச்ச மனக்கோட்டை எல்லாம் சரிய ஆரம்பிக்க....., ஒரு வார்த்தை பேசல. குழப்பம் வேறு  அப்படியே எழும்பி வெளிய நடக்க ஆரம்பிச்சேன். சக நண்பர்கள் இருந்த பக்கம் திரும்பி கூட பார்கல வெட்கம். அவங்க கேட்டா என்னத்த சொல்லுவேன். ஆசுவாசபடுத்திக்ககூட நேரம் கிடைக்கலயே. தொடர்ந்து நடந்து கல்லூரியை விட்டு வெளிய வந்து ரோட்டுக்கு எதிர் பக்கம் இருந்த பஸ் ஸ்டாப்ல போய்ட்டு நின்னேன். அந்த நேரத்தில் என்னை தவிர யாருமே  அங்கு இல்லை. மனசெல்லாம் ஏமாந்த வலி, தோத்துட்டமேனு அவமானம், கண்ணுல இருந்து திடு திடுப்புன்னு கண்ணீர் கொட்ட ஆரம்பிச்சிடுச்சு......! சில நிமிடங்கள் நீடித்தது.
என் கவலை என்னன்னா? இவங்க கேட்ட தகுதி இருந்தனாலே தான் விண்ணப்பிச்சேன். என்னோட பெறுபேறுகளை பார்த்துதான் நேர்முக பரீட்சைக்கு கூப்பிட்டாங்க. இங்கே வந்து பைலை வாங்கி பார்த்த அடுத்த நொடி கொஞ்சம் கூட யோசிக்காம  நீ போகலாம் உன்னோட ரிசால்ட்  காணாதுனு சொல்ல அப்போ என்ன மயிறுக்கு  ............. (உங்களுக்கு தெரிஞ்ச மோசமான கெட்ட வார்த்தையை மயிரோடே சேர்த்து வாசிங்க) கூப்பிட்டிங்க? கஷ்டபட்ட குடும்பத்துலருந்து வரும் ஒருத்தன் எத்தனை கனவுகளோடும் ஆசைகளோடும் உங்க முன்னுக்கு உக்காந்து இருப்பான்னு என்னைக்காவது யோசிச்சு பார்த்திருபிங்களா? நேர்முக பரிட்சைக்கு கூப்பிட முன்பு தகுதியான ஆளதான் கூப்பிடுறோமான்னு சரி பார்க்க வேண்டாமா? அலைக்கழிச்சு விட்டு கடைசில இல்லனு சொல்லுறதுக்கா அவ்வளவு தூரம் கூப்பிடனும்?
எனக்கு தெரியும் இன்னைக்கு வரை இதே வேலைய தான் நிச்சயமா பண்ணிட்டு இருப்பானுக.
அவனுக மாறமாட்டானுக.
வேறு ஒரு சந்தர்ப்பத்தில், வேறு சில நபர்களுக்கு முன்னால் நீங்களும் இதேமாதிரியான சூழ்நிலையில் இருக்கவேண்டி வரலாம். அப்பிடிவரும் போது மனச மட்டும் தளரவிட்டுடாதீங்க.

இந்த சம்பவம் நடந்து இப்போ பத்துவருசத்துக்கு மேல இருக்கும். அதையெல்லாம் தாண்டி ரொம்ப தூரம் வந்தாச்சு. இப்போ ஒரு ஆசிரியர்க்கு கிடைக்கும் சம்பளத்தை விட அதிகமாவே சம்பாதிக்கிறேன்.
ரொம்ப எதிர்பார்த்து ஒரு விஷயம் நடக்காம போய்ட்டா மனசு உடைஞ்சு போய்ட்டு அங்கேயே விழுந்து கிடக்க கூடாது. நிச்சயமா கஷ்டமாயிருக்கும் தான் கொஞ்ச நேரம் எடுத்து மனச தேத்திகிட்டு அடுத்த கட்டத்துக்கு
தயார் ஆகிடனும்.

"பெரிதே உலகம், பேணுவோர் பலர்"

வெளில நமக்கு வாய்ப்புதர ஆயிரம்பேர் காத்துட்டு இருங்காங்க. உலகம் ரோம்ப பெருசு ஒரு வேலை இல்லாட்டி இன்றொரு வேலையிருக்கு. தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் மட்டும் இருந்தா போதும். வாழ்கை நம்ப மண்டையிலே கல்லு என்னா? கடப்பாரையே தூக்கி போட்டாலும்  தாங்கலாம்!

Comments

Post a Comment

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

நரகம்

அங்கு யாரும் புலப்படவில்லை

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I