96 ராமும் சுமார் மூஞ்சி குமாரும்

பள்ளி காலத்து முதல் காதலை மிக அழகா காட்டிய படம் 96. அந்த வயசுல வருவது காதல் இல்லை அது எதிர்பால் மேல் ஏற்படும் ஈர்ப்புனு சொல்லுவாங்க எனக்கு என்னமோ அது சந்தேகமாதான் இருக்கு அந்த காதலின் அழகும், ஆழமும் வளர்த்த பிறகு வரும் பக்குவப்பட்ட காதலில் இருப்பதில்லை இங்கு சில எதிர்பார்ப்புகள், தேவைகள் இருக்கும் ஆனால் பள்ளி காதல் அப்பிடி இல்ல கடைக்கண் பார்வை போதும் பட்டாம்பூச்சி மனசுல பறக்க, அவள் சுண்டு விரல் ஸ்பரிஸம் போதும் ஆயிரம் பேரழகிகளுடன் காமுற்றாலும் அந்த இன்பத்துக்கு இணையாகாது. கண்டால் பேச்சு வராது. காணவிட்டால் தூக்கம் வராது. காதலை உணரும் தருணங்கள் சுகமாவும். ரணமாகவும் மொத்தத்தில் வாழ்வின் மிக அற்புதமான நாட்கள் ! தேவதை என்ற வெறும் வார்த்தைக்கு உயிர் கொடுப்பாள். ஒரு ஆண், பெண்னை கொண்டாடும் காலம் வார்த்தை கொண்டு உயிர்ப்பிக்க முடியாது. அவள் மட்டும் யாதும்மாகி நிற்பாள். பிரியாமல் கூடவே இருந்தா போதும் அது மட்டுமே தேவையாக இருக்கும். காமத்திற்கு அங்கு வேலை இருக்காது காதல் மட்டுமே.96 அந்த உணர்வ மென்மையா, அழகா பதிவு செஞ்சு இருக்கு. இந்த படத்தை ஆண்கள் கொண்டாடியதின் காரணம...