El CaminoA Breaking Bad Movie (2019)

No Spoliers 

Breaking Bad Tv சீரிஸ் ரசிகர்களுக்கு செம்மையான விருந்து "El camino" நீங்கள் இந்த படத்தை பார்த்து ரசிக்கனுமுன்னா BB சீரிஸ்ச முழுசா பார்த்து இருக்கனும். மொத்தமாக ஐந்து சீசன்ஸ், 62 எபிசொட் இருக்கு (2008 - 2013) எனென்றால் அப்போதான் கதை சுவாரஸ்யப்படும். படத்தில் வரும் 
ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் ஒரு பின்னணி கதையுண்டு. El Camino படத்தின் நாயகன் ஜெஸி பிங்க்மேன் (Jesse) கதாபாத்திரமெல்லாம் இயக்குனர் Vince Gilligan வருஷக்கணக்கா செதுக்குனது. 

BB கதையோட தொடர்ச்சியாக இந்த படம் நகரும். அதில் வரும் பிரதான கதாபாத்திரங்களில் ஒன்று தான் ஜெசி. இறுதி சீசன்ல கடைசி எபிசொட்ல 
ஜெஸிட பார்ட்னர் வால்டேர் (Walter) பழிக்கு பழிவாங்க செய்யும் படுபயங்கரமான சம்பவத்துல  வில்லன்களான டொட்டும் (Todd) அங்கிள் ஜாக்குவின் (Uncle Jack) கூட்டாளிகளும் சின்னாப்பின்னமாகிடுவானுக. புல்லரிக்கவைக்கும் காட்சியது! அவனுங்ககிட்ட பல மாசமா கைதியாக இருந்த ஜெஸி ஒருவாறு அந்த இடத்தை விட்டு கார்ல தப்பிச்சி போறான். போலீசும் அவனை  ஒருபக்கம் தீவிரமாக தேடிட்டு இருக்கு. பிறகு அவனுக்கு என்ன நடந்துச்சின்னு சீரிஸ்ல காட்டல்ல... தொடர் அத்துடன் முடியும். 

El camino அதன் தொடர்ச்சியாக ஜெசிக்கு அதற்கு பிறகு என்ன நடந்தது என்பதே படம். நான் முதலே சொன்னமாதிரி நீங்க சீரிஸ்ச முழுசா பார்த்தால் தான் படம் பிடிக்கும். இல்லனா சுமாராத்தான் இருக்கும்.

ஜெஸி யாருனு சொல்லிடுறேன்; வால்டேரும் ஜெஸியும் சேர்ந்து மிகப்பெரிய அளவில் போதைப்பொருள்  வலைப்பின்னலை உருவாக்குறாங்க. அமெரிக்க பாதுகாப்பு பிரிவினால்கூட கண்டுப்பிடிக்க முடியாதபடி மிகவலுவான ராஜ்ஜியமாக உருவாகுது. ஒரு நாள் எல்லா கெட்டதும் முடிவுக்கு வாரமாதிரி இதுவும் வருது. அந்த சூழ்நிலையில் ஜெஸிக்கு என்ன நடந்துச்சு என்பது தான் படம். 

கடைசி சீசன் 2013 ல வெளிவந்தது. அதற்கு பிறகு கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் கழித்து 2019ம் ஆண்டு படம் அதன் தொடர்ச்சியாக வெளிவந்து இருக்கு. சில கதாபாத்திரங்களுக்கு வயதானது தெரியுது. உருவத்திலும் தெளிவான மாற்றங்கள் இருந்த போதிலும். திரும்பவும் அந்த உலகத்துக்கு போய்ட்டு வருவது BBயின்  தீவிர ரசிகனா அலாதியான அனுபவம்தான். தலைவன் வால்டர்ர ரொம்ப மிஸ் பண்ணுறேன்! படத்துல ஒரு காட்சில நினைவுகளா வந்துட்டு போறாரு. 

நான் இதுவரைக்கும் பார்த்ததுலயே Game of Thrones பிறகு Breaking Bad  மிகஅற்புதமான படைப்புகள்!  இது இரண்டுல எதற்கு முதலிடம்  கொடுப்பது என்று என்னிடம் கேட்டால். ரொம்ப கஷ்டமான கேள்வி இரண்டுக்கும் முதல் இடத்தை கொடுப்பேன். ரெண்டு சீரிஸ்சும் ஒன்று  இன்னொன்றுக்கு  சளைத்தது கிடையாது. சரி இப்ப Game of Thrones விட்ருவோம். நம்ம கதைக்கு வருவோம். இதுவரைக்கும் நீங்க BB பார்த்து இல்லன்னா முதல் போய்ட்டு பாருங்க. நம்புங்கள்! ஒரு எபிசொட் பார்த்தால் போதும். பிறகு முழுசா பார்த்துட்டுதான் விடுவிங்க. வாழ்நாளில் தவறவிடக்கூடாத மிகச்சிறந்த படைப்பு. விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் போகும். 

நரேஷ்-36©

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I