Togo / 2019
(The untold true story) No Spoilers 1925 ம் ஆண்டு அலெக்ஸாவில் உள்ள நோம் என்ற சிறிய நகரத்தில் diphtheria என்னும் தோற்று நோய் தீவிரமாக பரவி நிறைய குழந்தைகள் பாதிக்கபடுகிறார்கள். அதற்கு தடுப்பு மருந்து கிட்டத்தட்ட 700 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள வேறு ஒரு இடத்தில் உள்ளது. மோசமான காலநிலை. பேரும்பனிபுயல் ஒன்று வரக்கூடும் என்றபடியால் விமானம் மூலமாகவோ, இரயில் மூலமாகவோ கொண்டு வரமுடியாத நிலை. ஒரு பக்கம் நோயின் தாக்கமும் தீவிரமடைந்து கொண்டு வருகிறது. காலநிலை சரியாக மட்டும் பார்த்து கொண்டிருந்தால் குழந்தைகளை மொத்தமாக பறிகொடுக்க வேண்டியது தான். ஊரின் மேயர் தலைமையில், மருத்துவர், பிற முக்கிய பிரமுகர்கள், மக்களின் பிரதிநிகள், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் எல்லோரும் கூடி அவரச கூட்டம் நடத்துகிறார்கள். Dog Sled என்னும் நாய்களினால் இழுத்து செல்லப்படும் சறுக்கு வண்டியின் மூலமாக மட்டுமே பனிபாதையை கடந்து மருந்தை கொண்டு வந்து சேர்க்க முடியும். இந்த மாதிரியான மோசமான வானிலை இருக்கும் போது பயணம் செய்வது உயிரை காவுவாங்கிவிட கூடும். இருந்த...