புதுவகை எழுத்தின் முன் உள்ள சவால்கள்
சிங்கப்பூரை சேர்ந்த "மாயா இலக்கிய வட்டம்" இம்மாத ஆரம்பத்தில் ஏற்பாடு செய்திருந்த "புதுவகை எழுத்தின் முன் உள்ள சவால்கள்" என்ற தலைப்பில் கீழான சாருநிவேதிதாவின் கலந்துரையாடல் Zoom செயலியின் ஊடாக நடைபெற்றது. முதல் ஒரு மணிநேரம் சாரு பேசினார். பிறகு ஒரு மணிநேரம் கேள்வி பதில். குறிப்பிட்ட தினத்தில் விடுமுறை என்பதால் நானும் கலந்து கொண்டேன். சாருவின் "நே நோ" சிறுகதை தொகுப்பிலிருந்து சில கதைகளையும், The Beach என்ற Alain Robbe-Grillet இன் பிரெஞ்சு சிறுகதையும் படித்துவிட்டு, Bela Tarr இன் The Turin Horse என்ற ஹாங்கரிய படத்தையும், முடிந்தால் பார்த்துவிட்டும் வரும்படி கூறினார். காரணம் புதுவகையான எழுத்துக்கு மேற்குறிப்பிட்ட படைப்புகள் சிறந்த உதாரணங்கள். நான் சாருவின் சிறுகதைகள் ஆன " நே நோ " " The Joker was here " "நட்சத்திரங்களிடமிருந்து செய்தி கொண்டு வந்தவர்களும், பிணந்தின்னிகளும்" ஆகிய கதைகளை மீள்வாசிப்பு செய்துவிட்டும், The Beach என்ற சிறுகதையின் ஆங்கில மொழிபெயர்ப்பை ஒன்றுக்கு இரண்டு தடவை படித்து புரிந்த...