Posts

Showing posts from May 11, 2021

அரை பிச்சைக்காரன்

ஊருக்கு சென்று வேலையில்லாமல் தெருத்தெருவாக சுற்றி அலைவது போல ஒரு கனவுக் கண்டேன். இதை எல்லாம் நினைத்து பார்க்கும் போதே பயமாக இருக்கிறது. ஊருக்கு சென்றால் நண்பர்களுடன் சேர்ந்து சோமபானம் அருந்தலாம். முகத்தை மறைக்காத  தேவதைகளை பார்க்கலாம். பிறகு கிரகஸ்தனாக மாறி லெளகிக வாழ்க்கையில் உழலலாம். இப்படி சில சந்தோசங்கள் இருந்தாலும் வெளிநாட்டில் இருக்கும் போதே அரை பிச்சைக்காரனாக வாழ்ந்து கொண்டிருக்கும் நான் ஊருக்கு சென்றதும் முழு பிச்சைக்காரனாக மாற வேண்டியிருப்பதை நினைத்து பார்த்தால் தான் கொஞ்சம் கலக்கமாக இருக்கிறது. நண்பன் வேறு "மச்சா புத்தகம் எதும் எழுதும் ஆசை இருந்தா, அங்க இருக்கும் போதே எழுதி விடு. இங்கு வந்த பிறகு லோல் படுவதற்கே நேரம் சரியாக இருக்கும்" என்று பயமுறுத்துகிறான். உண்மை தான்  எந்நேரமும் அரிசி வாங்குவதை பற்றிய யோசனை மண்டையில் இருக்கும் போது இலக்கியம் எப்படி வரும். எழுத்தாளனாக வாழ்வது கூட ஆடம்பரம் தான்.

Joji / 2021 மலையாளம்

Image
 Spoiler Alert  நேற்று ஜோஜி பார்த்தேன். எல்லோரும் அதிகம் புகழ்ந்து எதிர்பார்ப்பை எகிற விட்டபடியால், நானும் "என்னால் அதன் தாக்கத்தில் இருந்து இன்னும் மீளமுடியவில்லை" என்று அடித்து விட விருப்பம் இல்லை. ஆனால் தரமான படம் அதில் எந்த சந்தேகமும் இல்லை. என் ஏமாற்றத்திற்கு காரணம்  "ஒரு சாமானியன் குடும்ப சமூக, புறக்கணிப்பு காரணமாக இரண்டு கொலைகள் செய்கிறான்" என்று கதையின் அடிநாதத்தையே சொல்லி ஸ்பாய்லர் செய்து விட்டார்கள். இது தெரியாமல் படம் பார்க்கும் ஒருவனுக்கு ஜோஜி அற்புத திரை அனுபவத்தை தந்திருக்கும் என்பதை மறுக்க முடியாது. வளமை போலவே பகத் பாசில் தன் பங்கை நிறைவாக செய்து விட்டார். சேட்டன்கள் ஒரே வீட்டையே சுற்றி சுற்றி ஒளிப்பதிவு செய்து நிறைவான கதையை சொல்லி அசத்தி விட்டார்கள். தமிழ் சினிமா இவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று அதே பழைய புராணத்தை பாட மாட்டேன். எல்லோரும் இப்படியே எடுக்க தொடங்கிவிட்டால் நிச்சயம் வெறுத்து விடும். ஆனால் இது போன்று சில படங்களும் வருடத்திற்கு மூன்று, நான்கு சரி வரவேண்டும். நம்மவர்கள் இதை விட சிறப்பாக செய்ய கூடியவர்கள் தான்.

மண்டேலா

Image
எல்லோரும் மண்டேலா படத்தை பார்த்துவிட்டு நெஞ்சுருகி பதிவிட்டிருந்தார்கள். நானும் பார்த்தேன். முதல் நாள் ஒரு மணிநேரம், பிறகு தூக்கம் வந்து விட்டது. மறுநாள் மிகுதியை பார்த்து முடித்தேன். நல்ல படம் தான் சூரை மொக்கை கிடையாது. ஆனால் பொறுமையை சோதிக்கிறது. அரசியல் நையாண்டி கதையை சொல்ல முயற்சித்து இருக்கிறார்கள், ஆனால் முழுதாக கைகூடவில்லை. கதாபாத்திரங்கள் எல்லாம் பேசிய வசனங்களையே மீண்டும் பேசிக்கொண்டும், செய்தவற்றையே மீண்டும் செய்து கொண்டும் அயர்ச்சியை ஏற்படுத்துகிறார்கள். இரண்டு மணித்தியாலமும் இருபது நிமிடமும் ஓடுகிறது. அதில் இருபது நிமிடத்தை வெட்டி அகற்றி இன்னும் கொஞ்சம் திரைக்கதையை சீர்படுத்தி இருக்கலாம். படத்தில் வரும் பெரிய ஐயா கதாபாத்திரம் குழப்பமாக இருக்கிறது. அவருடைய நிலைபாடு என்ன என்பது அவருக்கே தெரியவில்லை. பிறகு அவரின் குடும்பம்; அம்மாவும், மகனும், அப்பாவும் கிட்ட தட்ட சமவயது உடையவர்களாக தெரிகிறார்கள். ஜோக்கர் படம் மாதிரி வந்திருக்க வேண்டியது. பலவீனமான திரைக்கதை முழு படத்தையும் மளுங்கச் செய்துவிட்டது. படத்தில் இருக்கும் ஒரே ஆசுவாசம் யோகி பாபு தான். அழகாக நடித்து இருக்கிற