அன்னா கரினினா

பேரழகியின் துயரக்கதை லியோ டால்ஸ்டாயின் (உலகபுகழ் பெற்ற நாவல்) என் வாழ்நாளில் இந்த நாவலை கண்டடைந்ததை பெரும்பாக்கியமாக கருதுகிறேன். அதிலும் "அன்னா " என்னும் பெண் கதாபாத்திரம் என்னுள் ஏற்படுத்திய தாக்கம் என்றென்றும் மனதை விட்டு நீங்காது! ஆண், பெண் உறவு சிக்கல்கள், தனிமனித மனப்போராட்டம், சுயதேடல் இதுதான் கதைக்களம். திருமணம் என்னும் பந்தத்தில் நுழைந்த பின்பு அதிலுள்ள பொறுப்புகளையும், கடமைகளையும் உதாசீனபடுத்தும் போது வாழ்வே சூனியமாகமாறி போகிறது. ஒவ்வொரு தனிமனிதனும் குறிப்பிட்ட காலத்தில் தனக்கெனவோர் துணையை தேர்வு செய்து அவனையோ / அவளையோ சார்ந்து வாழப்பழகிகொள்கிறார்கள். திருமண பந்தத்தின் ஊடாக அதை உறுதிப்படுத்தியும் கொள்கிறார்கள். அதன் பிறகு நினைத்த மூப்புக்கு அறுத்து எறிந்து விடவோ சேர்த்துக்கொள்ளவோ முடிவதில்லை. அதற்கான வழிமுறைகள் இருந்த போதும் அந்த கட்டத்துக்குள் நுழைந்த பிறகு மீண்டு வருவதென்பது இலகுவானகாரியமல்ல அதனால் தான் நம் கலாசாரத்தில் நடைமுறை ரீதியாக விவாகரத்துக்கள் அத்தனை சுலபமாக நிகழ்ந்து விடுவதில்லை. ஒரு காதல் தோல்வியிலிருந்து மீண்டு ...