அங்கு யாரும் புலப்படவில்லை

(குறுங்கதை 12) ஆளரவமே இல்லாத மலைக்காடு. பாதையின் இருபுறமும் செழித்து உயர்ந்த பைன் மரங்கள். பனிமூட்டம், குளிர்க் காற்று, நிலவொளி என ரம்மியமான இயற்கை அழகு ஆனால் நடுச்சாமம் பன்னிரண்டு மணிக்கு ஒற்றையாகப் பயணிக்கும் போது இவையெல்லாம் பூரிப்படைய செய்வதற்கு பதிலாக பீதியைக் கிளப்பும்படியிருந்தன. தனியாகக் காரை வேகமாக செலுத்திக் கொண்டிருந்தான். முடிந்த மட்டும் விரைவாக இந்த காட்டைக் கடந்து சென்று விடவேண்டும் என்பதே அவனின் முதல் நோக்கமாக இருந்தது. அமானுஷ்யம், ஆவிகள், இவற்றில் கொஞ்சம் நம்பிக்கையுண்டு. இந்த பாதையில் ஆவிகளின் நடமாட்டம் தொடர்பான கட்டுக் கதைகள் உலாவுவதால் மனதில் எழுந்த பயத்தை அடக்க முடியவில்லை. இம் மாதிரியான நேரங் கெட்ட நேரத்தில் தான் துர்ஆத்மாக்களின் இருப்பை பற்றிய ஆராய்ச்சியில் மனது ஈடுபட ஆரம்பித்தது. இடையிடையே சடசடத்து தாழ்வாகப் பறந்துச் சென்ற வெளவால்கள் வேறு அதற்கு ஒத்து ஓதின! இந்த எண்ணத்தை உடனே திசைத் திருப்பி மனதை வேறு சிந்தனைகளில் மாற்ற எண்ணியப்படி காரிலிருந்த மியூசிக் பிளேயரை ஒலிக்க விட்டான்...