Scared Games (2018)
Season 1 No Spoilers இந்த வெப் சீரிஸ்ச பற்றி பெரிதாக எதுவும் ஆராயாமல் பார்க்க முடிவு பண்ணுனேன். அதற்கு ரெண்டு பேர் காரணம் ஒன்னு நவாஸுதீன் சித்திக்கி மற்றையது அனுரக் காசியப். அதுவும் கேங்ஸ்டர் சப்ஜெக்ட்ன்னா சொல்லவே வேணாம். Gangs of Wasseypur பார்த்த மிரட்டலே இன்னும் அப்படியே மனசுலயிருக்கு. மாஸ்டர் பீஸ்! கிட்ட தட்ட அதே அனுபவம் தான் Sacred Games. அதை விடக்கதையை உள்வாங்கி புரிந்துகொள்ள கொஞ்சம் இலகுவாயிருக்கு. கதை சுருக்கம் இதுதான்; கதை மும்பையில் நடக்குது Sartaj singh (Saif Ali Khan) நீதி நேர்மைன்னு வாழும் ஒரு போலீஸ் அதிகாரி. இதனாலேயே மேல் அதிகாரிக்கிட்ட சுமூகமான உறவுயில்லை. சில உறவு சிக்கல்களினால் மனைவியும் உடனில்லை. இவையெல்லாம் சேர்ந்து சர்தாஜ்யை மனஅழுத்தத்துக்கு உள்ளாக்குது. இறுக்கமான வாழ்க்கை வாழ்ந்துட்டு இருக்காரு. ஏதாச்சும் பெருசா பண்ணி தன்னை நிரூபிக்கவேண்டிய இக்கட்டான தருணம். இந்த மாதிரி சூழ்நிலையில் மர்ம ஆசாமிகிட்டயிருந்து போன் கோல் வருது. "இன்னும் எண்ணி 25 நாள்ல இந்த மும்பை நகரமே அழிய போகுது. எல்லோரும் சாக போறாங்க! " முடிஞ்சா காப்பாத்துன்ன...