Pink | 2016 | Hindi Movie




Pink
2016 / Hindi Movie

ஒரு நல்ல படம், சிறந்த ஆசான். இப்படி இருந்தா நல்ல பொண்ணு, இப்படி எல்லாம் இருந்தா ஒழுக்கம் கெட்டவள் என்று நம்ம சமூகத்தில் சில அளவீடுகள் உண்டு. இரவில் பெண்கள் தனியாக வெளியில் போகலாமா?,
கவர்ச்சியாக உடை அணியலாமா? , மது அருந்தலாமா? இது சரியா தவறா? என்பதையும் தாண்டி இந்த பெண்களின் பாலியல் சார்ந்த மனநிலை எப்படி? இவர்களை போன்ற  பெண்கள் இலகுவாக படுக்கைக்கு வர கூடியவர்களா? கவர்ச்சியாக உடை அணிந்து , சகஜமாக ஆண்களுடன் நெருங்கி பழகி மது அருந்தும் பழக்கமும் உள்ள ஒரு பெண்ணை, பொது புத்தி உள்ள ஆண் எப்படி பார்ப்பான்? இதை நம் சமூகம் எப்படி பார்க்கின்றது, அந்த பெண்ணின் மனநிலை என்ன?

ஒரு பெண் ஒரு ஆடவனுடன் உடலுறவு கொள்கின்றாள் என்றால் அது அவள்  முழுமனத்துடன் ஒத்துழைத்தாள் தான் உண்டு. மாறாக முடியாதுனா முடியாது தான்., அது மனைவியாக, காதலியாக  அல்லது விபச்சாரியாக இருந்தால் கூட இது பொருந்தும். சில விஷயங்கள் உணர்வுபூர்வமானவை அவற்றை  வார்த்தை கொண்டு விபரிக்க முடியாது. அதை அழகாக காட்சி படுத்தி உள்ளார் இயக்குனர் Aniruddha Roy Chowdhury,

இந்த படம் நவநாகரீக பெண்ணை ஆணாதிக்க மனநிலை எப்படி நோக்குகின்றது. பெண் மனநிலையில் பாலியல் சார்ந்த பார்வை, என பலபரிணாமங்கள். Tapsee Pannu நடிக்கவில்லை, மாறக அந்த பெண்ணாகவே வாழ்ந்து விட்டு போகிறார். Amitabh Bachchan நடிப்பு நேர்த்தி. நல்ல சினிமா விரும்பிகளும் வளர்ந்து வரும்  இயக்குனர்ளும்  பார்க்க வேண்டிய படம்.

நரேஷ்
16-Nov-2018

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I