Posts

Showing posts with the label போகன் சங்கர்

போக புத்தகம்

Image
ஆசிரியர்: போகன் சங்கர்  நான் படித்து சுவைத்து எழுத தவறிய புத்தகம். வாசிக்கும் புத்தகங்களை பற்றியெல்லாம் எழுத எனக்கும் ஆசைதான். அது இலகுவான காரியமில்லை. நேரம், மனநிலை எல்லாம் கூடி வரவேண்டும்.  "சில நேரம் என்னடா வாழ்கை இதுனு" சோர்ந்து போகும் தருணங்கள் எல்லாவற்றையும் மழுங்கடித்து விடுகிறது. இந்த புத்தகத்தை படித்து நாட்கள் கடந்த பின்பும் இதை பற்றி சிறு பாராகூட  எழுதாமல் இருப்பது மனதை உறுத்திக்கொண்டே இருந்தது. எல்லோரித்திலும் போய்ச் சேரவேண்டிய சிறந்த படைப்பு. வாசிப்பை மறந்த நம்  இளம் தலைமுறையைகூட இழுத்து மூழ்கடித்துவிடும் லாவகமான மொழிநடை போகனுக்கு. இப்பொழுது எனக்கு பிரியமான எழுத்தாளர்களில் ஒருவராகிவிட்டார். அவரின் படைப்பில் சுவாரஸ்யத்திற்கு எப்பொழுதுமே குறைவில்லை. எழுத்தில் நகைச்சுவையை புனைவதில் மனிதரை அடித்துக் கொள்ளமுடியாது.  "போக புத்தகத்தை" வாசிக்கும் போது சில இடங்களில் சிரிப்பை அடக்க முடியாமல் போகும். அதே போல சில இடங்களில் மனம் கனத்து, கண்கள் குளமாகும். இதுவரை நீங்கள் படித்திராத வித்தியாசமான புத்தகமிது. சிறுகதை, நாவல் என்ற வரையறைக்கு...

கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள்

Image
சிறுகதைகள் / போகன் சங்கர்  நான் முழுமையாக வாசித்து முடித்த சிறுகதை தொகுப்பு. அருமையான புத்தகத்தை அறிமுகம் செய்தமைக்கு நண்பர் Govinda Raj க்கு நன்றி! எவராவது சொன்னால் தான் சில நல்ல படைப்புகளை கண்டடைய முடிகின்றது. நம்மை பாதித்துவிட்ட படைப்பை பற்றி எதுவும் பேசாமலிருப்பது மாகாபாவமென  உணருகிறேன். முதலில் இந்த புத்தகத்தின் தலைப்பை பார்த்ததும் எதோ புராணக் கட்டுரை தொகுப்பாகயிருக்க கூடுமென நினைத்து கொண்டேன். இந்த கணம் வரை உங்களில் பலருக்கும் அப்படித்தான் தோன்றியிருக்கும். இது முற்றிலும் வேறு மாதிரியான அனுபவம். போகன் சங்கர் தன்னை பாதித்த ஜெ மோவிற்கு நன்றி சொல்லித்தான் கதைகளை சொல்லத் துவங்குகிறார்.  " பூ ",  " படுதா ",   " யாமினி அம்மா ", " நடிகன் "  போன்ற கதைகளில் அவரின் தாக்கத்தை உணரமுடிந்தது.  போகனுக்கு நன்றாக கதை சொல்ல வருகின்றது. எங்கோ ஒரு புள்ளியில் ஆரம்பிக்கும் கதை பிறகு கதைக்குள் இன்னோரு கதை. பிறகு இரண்டும் சந்திக்கும் தளம். அபாரம்! சிறந்த வாசிப்பனுபவம். இதையெல்லாம் படிக்கும் போது எனக்கு சிறுகதை எழுதும் ஆசையே போய்விடுகிறது. இன்னும் ...