ஊரின் மிக அழகான பெண்

ஃப்ரன்ஸ் காஃப்காவின் " உருமாற்றம் " நாவலை பற்றி சிறு பதிவு எழுதலாமென்று ஆரம்பித்தேன். எழுத முடியவில்லை இத்தனைக்கும் முன்கூட்டியே மனதில் எப்படி எழுத வேண்டும் என்ற சித்திரத்தை வரைந்தாயிற்று. சில சமயம் இப்படி நிகழ்வதுண்டு. அவ்வாறான சந்தர்ப்பங்களில் கொஞ்சம் முயற்சித்து பார்க்கலாம். முடியாவிட்டால் கட்டாயப்படுத்த கூடாது. எழுத்து அதுவாக நிகழவேண்டும். அதனால் அப்பிடியே அதை நிறுத்திவிட்டேன். இன்றைய விடுமுறை நாளில் எதையாவது எழுதாவிட்டால் எனக்கு இந்த நாள் முழுமை பெறாது. எதோ குறையாக மனதில் உறுத்திக் கொண்டேயிருக்கும். கடந்த ஆறு மாதங்களாக நான் ஏற்படுத்தி கொண்ட பழக்கம் மீது. சரி வேறு எதாவது உருப்படியாக செய்தாக வேண்டுமென்று நினைத்து கொண்டேன். உடனே சாருவின் " ஊரின் மிக அழகான பெண் " என்ற மொழிபெயர்ப்பு சிறுகதைகள் புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தேன். இங்கு இடைச்சொருகலாக ஒன்றை குறிப்பிடவேண்டும். புத்தகத்துக்கு தலைப்பிடுவதிலும். முன் அட்டையை தெரிவு செய்வதிலும் சாருவை அடித்துக்கொள்ள யாராலும் முடியாது! முதல் குழந்தைக்கு உண்டான பரிவிலும் நேசத்திலும் ப...