ப்ரஷர் குக்கர்

(குறுங்கதை - 11) அந்த ப்ரஷர் குக்கரில் தான் அவர்கள் தினமும் அவிந்துக் கொண்டிருந்தார்கள். காலை எட்டுக்கு ஆரம்பித்தால் அன்றைய நாள் வேலை நேரம் முடியும் வரைக்கும், ஊசி நிலத்தில் விழும் ஒலியைக் கூட துல்லியமாகக் கேட்கலாம். அவ்வளவு நிசப்தம். காற்றில் அபிநயம் பிடித்துதான் பேசிக்கொள்வார்கள். வார்த்தைகள் கூட ஒலியின்றி வெறும் காற்றாய் தான் வெளிவரும். புதிதாய் அங்கு வந்து சேருபவர்கள் அதே வேகத்திலேயே காணாமல் போய்விடுவதுமுண்டு. சில சமயங்களில் மீறி சிக்கியவர்கள் அழுத்தம் தாங்காது இருக்கையிலேயே வெடித்து சிதறிக்கிடப்பார்கள். அவர்களை அப்படியே அள்ளி குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு வேலை சிறிதும் தடையுறாமல் கம்பனி நிர்வாகம் பார்த்துக்கொள்ளும். குடும்பத்திற்காகத் தங்களை நேந்துவிட்ட ஒரு சில பலிக்கடாக்கள் மட்டும் அங்கே மீந்திருக்கும். ரெஸ்ட் ரூமில் உள்ள முகம் பார்க்கும் கண்ணாடிதான் எச். ஆர். சில சமயங்களில் சைக்கார்டிஸ்ட் என எல்லாமே, மேனேஜரிடம் கடிப்பட்டவர்கள். மூத்திரம் முட்டுவதாகப் பாவனை செய்துக்கொண்டு அங்கு சென்று அதனிடம் முறையிட்...