பிக்பாஸ் 3

லாஸ்லியா கவினை காதலிச்சது ஒன்னும் மகாபாவம் கிடையாது பிக் பாஸ் ஷோவில் ஷெரின் தர்ஷன் நட்பு அளவுக்கு கூட லாஸ் கவின் காதல் ரசிக்க படாமல் போனதற்கு காரணம் கவின் ஆரம்பத்தில் விளையாட்டை செய்த பல காதல் குளறுபடிகள் தான். சாக்க்ஷி உடனான உறவில் விரிசல் விழுந்த மறுகணம் சிறு இடைவேளை விடாது லாஸ்லியாவுடன் காதல் வயப்பட்டது ஒப்பவில்லை. ஓரு வேலை ஆரம்பம் தொடக்கம் கவின் லாஸ்லியாவுடன் மட்டும் நேசத்தில் இருந்திருந்தால் இன்று நிலைமை வேறுமாதிரி இருந்திருக்கும். நம் கண்களுக்கு அந்த உறவு பேரழகாக தோன்றியிருக்கும். கவினும் மோசமானவன் இல்லை. நேர்மையானவன் தான் பாவம் அவன் நேரம் சரியில்லை. லாஸ்லியாவின் அப்பா அவளின் மேல் கோவப்பட்டது நியாயமே. மிடில் கிளாஸ் கலாச்சாரத்தில் பல கோடி மக்கள் பார்க்கும் ஓரு ரியாலிட்டி ஷோவில் தன்பிள்ளை காதல் வயப்படுவதையும், சமூகம் அதை மொசமாக வசைப்பாடுவதையும் அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என்னத்தான் பெண்ணியம், பெண்சுதந்திரம் பற்றி பேசினாலும் நம் பெண் பிள்ளைக்கு தகப்பனாகும் போது அதை அப்படியே பிரயோகிக்க இயலாது. ஊர் வாய்க்கு பயந்தே வாழவேண்டிய நிலைமை. பெண்களின் கால்களுக்கு இடையில்...