சொல்லாததும் உண்மை



ஆசிரியர்: பிரகாஷ்ராஜ்

என் நண்பர்  "நரேஷ் எனக்கு ரொம்ப பிடிச்ச புத்தகம் இது, படிச்சிட்டு ரிவியூ போடுங்கனு" சொன்னதும் தமிழில் மட்டுமே படித்து முடிக்க எத்தனையோ இலக்கிய ஆளுமைகள் இருக்கும் பொழுது இதை இப்போ வாசிக்கணுமா? ஓரு நடிகன் பெருசா எண்ணத்தை எழுதிட முடியுமுன்னு? நினைச்சுக்கிட்டேன். சரி வாசித்து பார்ப்போம். காரணம் இதை பரிந்துரை செய்த நண்பர் என்னை விட இலக்கிய பரீட்சயம் உள்ளவர். எதோ விஷயம் இருக்குமுன்னு மனசுல தோணுச்சி வாசிக்க முடிவு பண்ணினேன்.

படிக்க ஆரம்பிச்சு ஒவ்வொரு பக்கமாக புரட்டும் போதும் என்னோட தவறான
முன் கணிப்பை நினைத்து வெட்கி தலை குனிந்தேன். இலகுவான மொழிநடையில் கருத்து செறிவு நிறைந்த முத்தான ஐம்பது கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுப்பு இன் நூல். எந்த ஓரு கட்டுரையும் சும்மா எழுதணும் என்பதற்காக சப்பை கட்டு கட்டியதாக தெரியவில்லை. மாறாக; உறவுகள், சினிமா, காதல், காமம், இயற்கை, ஹாடோனிசம், மொழி, கலாசாரம். என எல்லாம் அம்சங்களையும் அடக்கி லாவகமாகவும் சுவையாகவும்  சொல்ல வந்த விஷயத்தை தெள்ளத்தெளிவாக பதிவு செஞ்சிருக்காரு. கன்னடத்தை தாய் மொழியாக கொண்டாலும் இவரின் தமிழ் புலமையை பார்த்து வியந்து போனேன்! பாரதியார் கவிதைகள் தொடங்கி இதிகாசங்கள், பைபிள் என இவர் கட்டுரையுடன் தொடர்புப்படுத்தி விட்டுச்செல்லும் இடங்கள் செம்மை. சத்தியமா உங்ககிட்ட இருந்து இதை எதிர்பார்க்கல சார்!
   
பிரகாஷ்ராஜ் தனித்துவம் மிக்க நடிகர் எந்த பாத்திரமாயிருந்தாலும் பின்னி எடுத்துருவாரு என்பதை நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. இந்த புத்தகத்தை படித்த பின்பு அவரின் இன்னொரு பக்கத்தை பார்க்க முடிந்தது. ஒருவேளை முழுநேர எழுத்தாளராக இருந்திருந்தால் மிக சிறப்பான படைப்புகளை தந்து இருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந் நூலில் இவர் மேற்கோள் காட்டிய கதைகளையும், கவிதைகளையும் பார்க்கும் பொழுது  உலக இலக்கிய வாசிப்பு அனுபவம் நிறைந்தவர் என்பதை உணர முடிகிறது. உலக சினிமா ஆர்வலரும்  கூட
மாற்று சினிமாவை பற்றியும் நிறைய பேசிருக்காரு. அவரின் டூயட் நிறுவனம்  தயாரித்து வெளியிட்ட படங்கள் எல்லாம் அதன் வெளிப்பாடே   "அபியும் நானும்", "மொழி" போன்ற படங்கள் சிறந்த உதாரணங்கள். இயக்குனர் ராதாமோகன் இவரின் ஆஸ்தான இயக்குனர் இவர்கள் இணைந்து தயாரித்த படங்கள் எல்லாமே தனி ரகம்.

அடிமட்டத்திலிருந்து வந்து பல போராட்டங்களுக்கு பிறகு ஜெயித்த ஒருவன் தான் கடந்து வந்த பாதையில் கற்று கொண்டதை சொல்லும் போது அந்த அனுபவபாடம் நம்வாழ்கையே புரட்டி போட்டாலும் போடலாம். நல்லது, கெட்டது எல்லாத்தையும் பொது வெளியில் சொல்லுவதற்கு தனித்தைரியம் வேண்டும். அதற்கு பிறகு பல சிக்கல்களுக்கு முகம் கொடுக்க வேண்டிவரும். ஆனால் மனுஷன் தன்னை நல்லவனாக மட்டும் காட்டிக்க பிரயத்தனப்படாமல் வெளிப்படையாக நிறைய எழுதிருக்காரு. ஓரு உச்சநட்சத்திரம் தன்னுடைய அந்தரங்க பக்கங்களை உலகத்துக்கு முன்னால் திறந்து வைப்பது அரிதான செயல். இந்த விஷயத்தில் சாருவும், பிரகாஷ்ராஜும் ஒன்று படுகின்றார்கள்.கட்டாயம் வாசித்து விடுங்கள்.
நான் என் தோழிக்கு இந்த புத்தகத்தை பரிந்துரை செய்யப்போகிறேன்.

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I