கடந்து வந்த பாதை

கடந்து வந்த சிலநாட்களை அவ்வளவு சுலபமாக மறந்து விடமுடியாது. எல்லாம் நல்லப்படியா போய்ட்டுயிருக்கும் போது எதிர்பார்க்காத நேரத்துல வாழ்கை கல்லை தூக்கி மண்டையிலேயே ஒரே போடா போடும்! ஒரு கணம் உலகமே இருட்டி போயிட்டு தலைசுத்தி ஒன்னும் புரியாம கலங்கி நிற்போம் பாருங்க அப்போ புரிய ஆரம்பிக்கும் வாழ்கை..... நான் ஸ்ரீபாத கல்லுரிக்கு நேர்முக பரீட்சைக்கு போன அனுபவத்தை உங்ககிட்ட பகிர்ந்துக்கிறப்போறேன். என் வாழ்கையில ரொம்ப முக்கியமான நாள் அது. ஆசிரியருக்கான கற்கை நெறியில் சேர்த்து கொள்ள தகுதிகளாக அவர்கள் கேட்டது உயர்தரத்தில் விஞ்ஞான பிரிவில் இரண்டு பாடங்களில் சித்தி மட்டுமே என்னிடம் அந்த தகமை இருந்தது. முதலில் எனக்கு ஆர்வம் இருக்கவில்லை. காரணம் எனக்கு வாய்ப்புகள் குறைவாக இருப்பதாக தோன்றிமைதான். பள்ளி படிப்பு முடிச்சு வெளிஉலகத்துக்கு வந்து சரியான வேலை கிடைக்காம என்னடா பண்ணபோறோமுன்னு எதிர்காலத்தை நினைத்து பயந்தகொண்டிருந்த நாட்கள் அவை. ஏழுஆயிரம் ரூபாய் மாதசம்பளத்தில் நாக்கு வலித்து கொண்டிருந்த என்னை போன்ற லோவர் மிடில் கிளாஸ் பையனுக்கு ஆசிரியர் வேலைங்குறது தங்க புதையல் கிடைச்ச மாதிரி! அதற்கு...