Posts

Showing posts from August 13, 2020

ராமர் கோயில் அரசியல்

ஹோமோ செபியன்ஸ் இருக்கும் மட்டும், மதம், நாடு, ஜாதி, சொர்க்கம், நரகம் போன்ற கற்பனை கதைகளும் இருக்கும். அவற்றால் மட்டும் தான் ஒருவருக்கு ஒருவர் அறிமுகமில்லாத பெரும் மனிதக் கூட்டத்தை ஒரு கொள்கையின் கீழ் ஒன்று சேர்க்க முடியும். எதிர்காலத்தில் கூர்ப்பின் மூலம் எம்மைவிடவும் மேம்பட்ட அதிமனிதர்கள் உருவாகும் போது இன் நிலைமை மாறிவிடும். அதற்கு பிறகு தோன்றும் புதிய மதத்தில் புராதான கிரேக்க கடவுள்களை போல இப்போதைய கடவுள்கள் சக்தியை இழந்து இருப்பார்கள்.  அங்கு வேறு ஒரு கடவுள் ஆட்சி செய்து கொண்டிருப்பார். அவருக்கு இப்போதைக்கு பெயர் வைப்பதும், வல்லமைகளை வரையறை செய்வதும் கடினம்.  காரணம் அப்பொழுது நாம் அழிந்து இருப்போம் அல்லது அழிந்து கொண்டிருப்போம்.  அதிமனிதர்களுக்கும் நமக்குமான வித்தியாசம் நியாண்டதால் மனிதர்களுக்கும் ஹோமோ செபியன்ஸ்க்கும் இருக்கும் வேற்றுமையை விட சிக்கலானது.

The invisible man (2020)

Image
மிஸ்டரி, திரில்லர் வகையரா படம். படத்தின் தலைப்பை பார்த்தவுடனே கதையை அனுமானித்து விடலாம். கண்ணுக்கு புலப்படாத ஒரு மனிதன்  தான் வில்லன் அல்லது ஹீரோவாக இருக்கப் போகிறான் என்பது நிரூபணமாகிவிடும். இவ்வகை   சினிமாக்கள் திரைக்கு புதிதும் அல்ல Hollow Man படங்களில் எல்லாம் முன்பே நமக்கு காட்டி விட்டார்கள். இதையெல்லாம் தாண்டி நம்மை இருத்தி பார்க்கவைக்க  இயக்குனர் எதாவது மாயம்தான் செய்தாக வேண்டும். அதை தான் 'Leigh Whannell' இதில் நிகழ்த்தி காட்டிக்கிருக்கிறார். படம் தொடங்கிய முதல் நிமிடம் தொற்றிக் கொள்ளும் பரபரப்பு படம் முடியும் மட்டும் இருக்கும். அதுவும் இரண்டு மணிநேரதிற்கு ஒரு சொட்டும் குறையாது. ஆரம்பத்திலேயே முழுக் கதையையும் யூகிக்க முடிந்தாலும் அதிலும் சுவாரஸ்யத்திற்கு குறைவிருக்காது.  முடிவில் நம் யூகிப்பையும் பொய்யாக்கி அடுத்தடுத்து அதிர்ச்சிகளை இயக்குனர் தந்து கொண்டிருப்பார். பொதுவாக திரைக்கதையில் கதை ஆரம்பிக்கும் பொழுது Protagonist பாத்திரம் அறிமுகம் செய்யப்படும். பிறகு அவர் எதிர் நோக்கும் பிரச்சனை அல்லது சவால் எதுவென்று காட்டுவார்கள். பிறகு அவர் எதிர்கொள்ளும் பிரச்சனை