கொரோனாவிற்கு எப்பொழுதுமருந்து கண்டுப்பிடிக்கபடும் ?
வைரஸை மருந்தின் மூலம் அழிக்க முடியாது என்கிறார்கள் அப்படியென்றால் கொரோனாவிற்கு காரணமான கோவிட்-19 (COVID-19) வைரஸை எந்த மருந்தை கொண்டு குணப்படுத்தமுடியும்? என்ற ஐயம் உங்களுக்கும் தோன்றியிருக்கலாம். பொதுவாக வைரஸ் தனது மூலக்கூற்று கட்டமைப்பை மாற்றி அமைந்துக் கொள்ளக்கூடியது. உதாரணமாக வைரஸ் ஒன்றை நாம் அடையாளம் கண்டு அதனை அழிக்க ஒரு மருந்தை (என்டிபயொட்டிக்கை) உட்கொள்ளும் போது முதலில் அது தாக்கப்பட்டாலும் பிறகு அம்மருந்தினை அடையலாம் கண்டு தன்வடிவத்தை மாற்றி அமைத்து கொள்ளும். அடுத்த முறை நாம் அதே மருந்தை எடுத்து கொள்ளும் போது அதனால் குறிப்பிட்ட வைரஸை இனங்கண்டு அழிக்க முடியாமல் போய்விடும். ஆனால் நம் உடலில் இயற்கையாக அமைத்துள்ள நோய் எதிர்ப்பு சக்திக்கு காரணமான நிர்பீடன தொகுதிக்கு வைரஸ் உட்பட உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிர்களை இனங்கண்டு அழிக்கும் வல்லமையுண்டு. ஒரு தடவை தீங்கு விளைவிக்கும் கிருமிகளை அடையலாம் கண்டுக் கொண்டால் அந்த தகவலை பதிவு செய்து வைத்து கொண்டு அவை மீண்டும் நம் உடலில் புகும் சந்தர்ப்பங்களில் இரத்தத்தில் உள்ள வெண்குருதி சிறு துணிக்கைகளை...