கடந்து வந்த பாதை - 2

பொதுவாக ஆண்களின் பதினெட்டு வயது தொடக்கம் முப்பது வயது வரையான காலக்கட்டம் ரொம்ப போராட்டம் மிகுந்ததாகயிருக்கும். வாழ்க்கையே போராட்டம்தான் இருந்தாலும் இந்த குறிப்பிட்ட காலப்பகுதியில்தான் ஒரு ஆண் வெளி உலகத்தை தனியா எதிர்கொள்ள ஆரம்பிக்குறான். இவ் பனிரெண்டு வருடங்களே அவன் வாழப்போகும் மிகுதி நாட்களை தீர்மானிக்க போகுது. இக்காலப்பகுதியில் நல்ல வேலையை தேடி அலைஞ்சுட்டுயிருப்போம். கூடவே காதல் தோல்வி, குடும்ப சுமை. இப்படி ஒன்னு விட்டா ஒன்னுன்னு வந்து புரட்டி எடுத்துட்டுயிருக்கும். நானும் இதுக்கு விதிவிலக்கல்ல. கடந்து வந்த பாதை முதல் பகுதியில் ஸ்ரீ பாதகல்லுரிக்கு இன்டெர்வியூ போனது பற்றி சொல்லியிருந்தேன். அதற்கு பிறகு (நல்ல) வேலை தேடும் படலத்தை ரொம்ப தீவிரமா நடத்திட்டுயிருக்கும் போது நிகழ்ந்த ஒரு சுவாரசியமான சம்பவத்தை பற்றி சொல்ல போறேன். வாங்க கதைக்குள்ள போகலாம். சண்டே ஒப்சவேர், டெய்லி மிரர் மாதிரியான ஆங்கில பத்திரிகைகளில் நல்ல வேலை வாய்ப்புக்கு விளம்பரங்கள் வரும் தேடிப்பார்த்து விண்ணப்பிச்சுபாருன்னு நலன்விரும்பிகள் சொல்லக்கேட்டு நானும் என்தகைமைக்கு ஏற்றமாதிரி ஒரு வ...