மாஸ்டர்

மூன்று மணிநேரப் படத்தை ஒருவாறு நான்கு மணிநேரத்தில் பார்த்து முடித்தேன். இடைக்கிடையில் கண்ணயர்ந்து விட்டேன். படம் மொக்கை இல்லை. ஆனால் லோகேஷ் கனகராஜ் என்பதால் அதிகமாக எதிர்பார்த்து விட்டதுதான் ஏமாற்றத்திற்கு காரணம். எதையோ எடுக்க வந்து வேறு எதோ எடுத்து தொலைத்து வைத்திருக்கிறார். இதற்கு இன்னும் இரண்டு டூயட் பாடல், கொஞ்சம் நகைச்சுவை எல்லாம் சேர்ந்து முழுமையான மசாலா படமாக சரி எடுத்து தொலைத்து இருக்கலாம். இது எதிலும் சேராமல் எதோ அரை அவியலாக வந்து சேர்ந்து இருக்கிறது. பாவம் அந்த ஹீரோயின்! நல்ல அழகி ஆனால் எதற்கு படத்தில் இருக்கிறார் என்றே தெரியவில்லை! இதில் அன்ரியா வேறு ஒரு பக்கம். விஜய்யும், விஜய் சேதுபதியும் அடிக்கடி காணாமல் போய்விடுகிறார்கள். இருவரும் படத்தில் இருப்பதே மறந்து போய் விடுகிறது. ஆனால் படம் மூன்று மணிநேரம். அரை மணிநேரம் ஓடும் அளவை சரி குறைத்து இருக்கலாம். கவலையாக இருக்கிறது. போகும் போக்கை பார்த்தால் இனி ஆசையாக ஒரு விஜய் படம் கூட பார்க்க கிடைக்காது போல!! மாஸ் ஹீரோக்களின் மசாலா படங்களில் லாஜிக் பார்க்க கூடாது தான் அதற்கு என்று இப்படி அநியாயம் செய்யக் கூடாது! ...