எழுத்தாளர் ஆவது சுலபம்

எழுத்தாளர் ஆவது சுலபம், ஆனால் நம் எழுத்தை மற்றவர்களை வாசிக்க செய்வதுதான் சவாலான காரியம். எழுதுவது எல்லாமே படைப்பாகிவிட முடியாது. அதனால் தான் சொல்கிறேன் எழுதுபவர்கள் எல்லாம் எழுத்தாளர்கள் அல்ல!. மலையின் உச்சியை அடையமுயலும் சிறு எறும்பென நான் முயற்சித்து கொண்டிருக்கிறேன். நான் சோம்பேறி, தற்போதைய வேகத்தை வைத்து கணித்து பார்க்கும் பொழுதும் ஏறி முடிப்பேனா என்பதே சந்தேகம் தான். நண்பர்கள் எழுத்தாளர் என்று கூப்பிடும் பொழுது என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இன்னும் ஒரு புத்தகம் கூட எழுதியது இல்லை பிறகு எப்படி எழுத்தாளன் ஆகமுடியும் என்று நானே என்னிடம் கேட்டுக் கொள்வேன். முதன் முதலாக #கனலி இலக்கிய இணைய தளத்தில் என் "தவிப்பு" என்ற குறுங்கதை வெளிவந்த பொழுது அதில் "எழுத்தாளர்: நரேஷ்" என்று குறிப்பிட்டிருந்தார்கள். அன்றிலிருந்து எழுத்தாளன் என்ற பட்டத்தை நான் முழுமையாக ஏற்றுக் கொண்டேன். "உனக்கு கதை எழுதவே தெரியவில்லை" என்பவர்களிடம், நான் எழுத்தாளன் அல்லவென்று தன்அடக்கத்துடன் நடந்து கொண்டால் சில அரைவேக்காடுகள் தலை மேல் ஏறி கக்கா போய்விடுகிறார்கள். அட...