வாட்ஸ்அப்

நடுச்சாமம். "த அதர்ஸ்" படத்தின் எதிர்பாராத முடிவை சிலாகித்தபடி டிவியை நிறுத்த மனமில்லாமல் பெயர் ஓடிக் கொண்டிருந்ததை பார்த்தபடியிருந்தான். அதில் ஏதேட்சையாக "ஜென்சி" என்ற அவளின் பெயரை காண நேர்ந்தது. என்ன கருமமிது? நினைவின் சரடுகளிலிருந்து முழுதாக அகற்ற நினைக்கும் ஒருத்தியை ஞாபக படுத்தும் விதமாக சமீபத்தில் இப்படி ஏதாவதொன்று நடந்தபடியிருந்தது. 'பெற்றன் ஸீக்கிங்' மனநிலை. படுக்கைக்கு சென்று நீண்ட நேரம் தூக்கமில்லாமல் கட்டிலில் புரண்டு படுத்தபடியிருந்தான். நேரம் இரவு பனிரெண்டை நெருங்கி கொண்டிருந்தது. காதலும் காமமும் கட்டுடைப்பு செய்யும் நேரமது. நெடும் யோசனைக்குப் பிறகு மொபைலை கையிலெடுத்து " மிஸ் யூ" என்று அவளுக்கு வாட்சப்பில் ஒரு குறுஞ்செய்தியை தட்டி விட்டான். அது கிராமம், நகரம் காடு, மலை, பாலைவனம், ஏழு கடல் எல்லாம் ஓர் நொடியில் தாண்டி உலக வரைபடத்தில் எங்கோ ஓர் மூலையில் இருக்கும் அவளிடம் போய்ச்சேர்ந்தது. சென்று அடைந்ததிற்கு அடையாளமாய் தொடுதிரையில் அடுத்தடுத்து இரண்டு ரைட் மார்க் விழுந்தது. இன்னும் ச...