Posts

Showing posts with the label கொரோனா

நோய்கிருமிகளுக்கு எதிரான யுத்தம்

Image
நாடுகள் எல்லைகளை மூடுவதும், நகரங்களை முடக்குவதும். சமூகங்கள், தனிநபர்கள் குவாரண்டைன் நிலைக்கு உட்படுத்தபடுவதும். கொரோனா போன்ற கொள்ளை நோய்கள் பரவலை தடுப்பதற்கு குறுகிய காலத்தில் பயனளிக்கலாம் ஆனால் நீண்ட நாட்களுக்கு இதை தொடர்ந்தால் உலக நாடுகளின் பொருளாதாரம் கடுமையா பாதிக்கப்படும். உலகமயமாக்களின் பின்பு ஒவ்வொரு நாடும் இன்னொரு நாட்டின் பொருளாதாரதோடு நேரடியாகவோ மறைமுகமாகவோ பிணைக்கபட்டுள்ளது. உலக நாடுகளை விடுங்கள் நாம் வாழும் நகரங்களையும், கிராமங்களிலும் இன்றைய நிலைமையை கவனித்து பாருங்கள். முதற்கட்டமாக தினக்கூலிகள் மோசமாக பாதிக்கப்படுவார்கள். ஒரு வேலை சாப்பாட்டிற்கே பேரும் திண்டாட்டமாய் போகும். மிடில் கிளாஸ் மக்களிடத்தில் பணமிருந்தாலும் பொருட்களும், சேவைகளும் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதால் அங்கும்  சிக்கலான நிலைமைதான். செல்வந்தர்கள் சில மாதங்கள் தாக்கு பிடிப்பார்கள். பிறகு அவர்களின் பாடும் திண்டாட்டம்தான்.  வரலாற்றில் உலகமயமாக்கலுக்கு முன்பு, 14ம் நூற்றாண்டில் கொள்ளை நோயான பிளாக் டெத் (Black death) மூலம், ஒரு தசாப்தத்திற்கும் குறைவான காலக்கட்டத்தில் மேற்கு ஐரோப்பாவிலும், கிழ...

கை குலுக்கும் பழக்கத்தின் வரலாறு

Image
கொரோனாவின் தீவிர பரம்பலை தொடர்ந்து பல உலக நாடுகள் கை குலுக்குவதை தவிர்த்து கொள்ளும்படி மக்களை அறிவுறுத்தியுள்ளன, சீன அரசாங்கம் கை குலுக்குவதை தவிர்க்கும் சமிஞ்சகைகள் அடங்கிய பதாதைகளை நாடு முழுவதும் காட்சிப்படுத்தியுள்ளது. நகரங்களில் கடமையில் ஈடுபடுத்தபட்டுள்ள ஆர்ட்டிபிஸல் இன்டலிஜெண்ட் ட்ரோன்களும் வானத்தில் வட்டமிட்டபடி கை குலுக்குவதை தவிர்க்கும் படி  குரல்வழி ஏச்சரிக்கை செய்கிறது.  95% கை குலுக்குவதன் மூலம் வைரஸ் பரவல் சாத்தியமாகிறது என்பதே  இதற்கு காரணம்.  கை குலுக்குவதற்கு பதிலாக தமிழரின் கை கூப்பி கும்பிடும் முறையை சொல்லி சிலர்  பெருமைபட்டுக்கொள்ள, ஒரு சாரார்  முன்னோர்களின் தீண்டாமையின் ஒரு அங்கம் தான் அது வேறு எந்த  காரணமும் இல்லை. எல்லாம் சாதிவெறி பிடிச்ச பயலுங்கனு திட்டிக்கொண்டு திரிகிறார்கள்.  இது எந்த அளவுக்கு உண்மையென்று தெரியவில்லை. ஆனால் கை கூப்பி வணங்கும் முறை தமிழர்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல, ஆசிய நாடுகளில் பலவற்றில் பழக்கத்தில் உள்ளது.  இதெல்லாம் ஒரு பக்கமிருக்க கை குலுக்கும் பழக்கத்தின் வரலாற்றை தேட...

கொரோனாவிற்கு எப்பொழுதுமருந்து கண்டுப்பிடிக்கபடும் ?

வைரஸை மருந்தின் மூலம் அழிக்க முடியாது என்கிறார்கள் அப்படியென்றால்  கொரோனாவிற்கு காரணமான கோவிட்-19 (COVID-19) வைரஸை எந்த மருந்தை கொண்டு குணப்படுத்தமுடியும்? என்ற ஐயம் உங்களுக்கும் தோன்றியிருக்கலாம். பொதுவாக வைரஸ் தனது மூலக்கூற்று கட்டமைப்பை மாற்றி அமைந்துக் கொள்ளக்கூடியது. உதாரணமாக வைரஸ் ஒன்றை நாம் அடையாளம் கண்டு அதனை அழிக்க ஒரு மருந்தை (என்டிபயொட்டிக்கை)  உட்கொள்ளும் போது முதலில் அது தாக்கப்பட்டாலும் பிறகு அம்மருந்தினை  அடையலாம் கண்டு தன்வடிவத்தை மாற்றி அமைத்து கொள்ளும். அடுத்த முறை நாம் அதே மருந்தை எடுத்து கொள்ளும் போது அதனால் குறிப்பிட்ட வைரஸை இனங்கண்டு அழிக்க முடியாமல் போய்விடும்.  ஆனால் நம் உடலில் இயற்கையாக அமைத்துள்ள நோய் எதிர்ப்பு சக்திக்கு காரணமான நிர்பீடன தொகுதிக்கு வைரஸ் உட்பட உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிர்களை இனங்கண்டு அழிக்கும் வல்லமையுண்டு. ஒரு தடவை தீங்கு விளைவிக்கும் கிருமிகளை அடையலாம் கண்டுக் கொண்டால் அந்த தகவலை பதிவு செய்து வைத்து கொண்டு அவை மீண்டும்  நம் உடலில் புகும் சந்தர்ப்பங்களில் இரத்தத்தில் உள்ள வெண்குருதி சிறு துணிக்கைகளை...