கொரோனாவிற்கு எப்பொழுதுமருந்து கண்டுப்பிடிக்கபடும் ?

வைரஸை மருந்தின் மூலம் அழிக்க முடியாது என்கிறார்கள் அப்படியென்றால்  கொரோனாவிற்கு காரணமான கோவிட்-19 (COVID-19) வைரஸை எந்த மருந்தை கொண்டு குணப்படுத்தமுடியும்? என்ற ஐயம் உங்களுக்கும் தோன்றியிருக்கலாம். பொதுவாக வைரஸ் தனது மூலக்கூற்று கட்டமைப்பை மாற்றி அமைந்துக் கொள்ளக்கூடியது. உதாரணமாக வைரஸ் ஒன்றை நாம் அடையாளம் கண்டு அதனை அழிக்க ஒரு மருந்தை (என்டிபயொட்டிக்கை)  உட்கொள்ளும் போது முதலில் அது தாக்கப்பட்டாலும் பிறகு அம்மருந்தினை  அடையலாம் கண்டு தன்வடிவத்தை மாற்றி அமைத்து கொள்ளும். அடுத்த முறை நாம் அதே மருந்தை எடுத்து கொள்ளும் போது அதனால் குறிப்பிட்ட வைரஸை இனங்கண்டு அழிக்க முடியாமல் போய்விடும். 

ஆனால் நம் உடலில் இயற்கையாக அமைத்துள்ள நோய் எதிர்ப்பு சக்திக்கு காரணமான நிர்பீடன தொகுதிக்கு வைரஸ் உட்பட உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிர்களை இனங்கண்டு அழிக்கும் வல்லமையுண்டு.
ஒரு தடவை தீங்கு விளைவிக்கும் கிருமிகளை அடையலாம் கண்டுக் கொண்டால் அந்த தகவலை பதிவு செய்து வைத்து கொண்டு அவை மீண்டும்  நம் உடலில் புகும் சந்தர்ப்பங்களில் இரத்தத்தில் உள்ள வெண்குருதி சிறு துணிக்கைகளை ஏவி அழித்தொழித்துவிடும். இந்த உயிரியல் யுத்தம் நிகழும் 
போதுதான் நம் உடல்வெப்பநிலை அதிகரித்து காய்ச்சல் உண்டாகிறது. அப்படியென்றால் மருத்துவர் தரும் மருந்துகளுக்கு தேவையேன்ன வென்று தோன்றலாம். அம்மருந்துகள் நம் உடலில் நோய் கிருமிகளுக்கு எதிராக யுத்தம் நடைபெறும் பொழுது பக்கபலமாக இருக்கும் அவ்வளவு தான். 

பொதுவாக வைரஸுக்கு மருந்தாக வெக்சின் (Vaccines) என்னும் தடுப்பு மருந்துகள் தான் பயன்படுத்தப்படுகிறது.

*வெக்சின் என்றால் என்ன?

நோய்க்கு காரணமான வைரஸை  குற்றுயிராக அதாவது வீரியத்தை குறைத்து முழுமையாக செயல்படாத வகையில் மாற்றியமைத்து உடலில் செலுத்தும் போது நம் உடல் அந்த வைரஸை அடையாளம் கண்டுக் கொண்டு அதனை எதிர்கொள்ள தயாராகிவிடும் பிறகு அந்த வைரஸ் நிஜமாகவே தாக்கும் தருணத்தில் நம் நோய் எதிர்ப்பு சக்தி இலகுவாக அடையாளம் கண்டு, அதனை அழித்துவிடும். 'ரூபெல்லா, மீசல்ஸ், மம்ப்ஸ்' போன்ற நோய்களுக்கு இம்முறையிலேயே தடுப்பு மருந்து உருவாக்கபட்டது.

*கொரோனாவிற்கு எப்பொழுது மருந்து கண்டுப்பிடிக்கபடும்?

இதுவரை நான்கு வகையான கொரோனா வைரஸுகள் கண்டுபிடிக்கபட்டுள்ளது அவையெல்லாம் மனிதரில் வேறும் சளியை மட்டும் தான் ஏற்படுத்தும். அதற்கு தடுப்பு மருந்து எதுவும் இல்லை. 

கொரோனாவிற்கு காரணமான கொவிட் 19 வைரஸை அடையாளம் கண்டுவிட்ட மருத்துவ ஆராச்சியாளர்கள் அதற்கு உண்டான தடுப்பு மருந்தையும் கண்டுப்பிடித்து விட்டார்கள். அதனை இப்பொழுது விலங்குகள் மீது பரிசோதனை செய்யவும் தொடங்கி விட்டார்கள். முதற்கட்டம் வெற்றியடைந்து விட்டால் இந்த வருட இறுதியில் மனிதர்கள் மீது பரிசோதித்து பார்ப்பார்கள். அதற்க்கு பிறகுதான் உற்பத்தியை ஆரம்பிக்க முடியும். ஒருவேளை எல்லாம் சரியாக நடந்தால் அடுத்த வருடத்தின் பாதியில் மருந்து நம் கைக்குகிட்டலாம். 

ஒவ்வொரு மருந்துக்கும் பக்கவிளைவுகள் உண்டு அதனால் பலதரப்பட்ட முறையான பரிசோதனைகளுக்கு பிறகுதான் பயன்பாட்டிற்குவரும். அப்படியே வந்தாலும் தடுப்பு மருந்து முதியவர்களுக்கு எந்த அளவுக்கு வேலை செய்யும் என்று சரியாக சொல்ல முடியாது அது அவரவர்  நோயெதிர்ப்பு சக்தியை பொறுத்தது.

இப்பொழுது நமக்கு இருக்கும் ஒரே வழி நோய்தோற்று ஏற்படாமல் நம்மை நாமே பாதுகாத்து கொள்ளவேண்டும். அதனால் முறையாக சுகாதார பழக்க வழக்கங்களை கடைபிடியுங்கள். விளையாட்டாக எடுத்து கொள்ளவேண்டாம். இது ஆரம்பம் மட்டுமே !

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I