நறுமுகை

(குறுங்கதை)

குளிர்காலத்தின் ரம்மியமான மாலைநேரம், வெளியில் சில்லென்ற வாடைக் காற்று வீசிக்கொண்டிருந்தது. 
விடுதியின் மேல் மாடி அறையின்
ஆளுயர கண்ணாடி ஜன்னல்களின் 
விலக்கப்பட்ட திரைச்சீலை வழியே 
அறையினுள் புகுந்த நிலவொளி போதுமான மட்டும் வெளிச்சத்தை தந்து கொண்டிருந்தபடியால் 
அங்கு மின்விளக்குகளுக்கு 
தேவையிருக்கவில்லை. மேசையில் பாதி முடிக்கப்பட்ட ஒயின் போத்தலும் கரைந்து கொண்டிருந்த ஓர் மெழுகுவர்த்தியும் மட்டும் அவர்களுக்குப் புரியாத மொழியில் ஏதோ பேசிக்கொண்டிருந்தன...

கட்டிலில் அவள் மேல் கிடந்து 
மார்பைத் தன் நெஞ்சால் அழுத்தி கொண்டிருந்தவனைத்  தள்ளிவிட்டாள். விழுந்த வேகத்தில் மீண்டும் எழுந்து அவள் கழுத்திற்கும் மார்பிற்கும் இடையில் தன் முகத்தை புதைத்து ஸ்பரிசிக்கத்  தொடங்கினான். மூச்சு திணறியபடி முழுதாய் எதிர்ப்பைக் காட்டாமல், அவனது முரட்டுத்தனத்தை விருப்பியவளாய் அதேநேரம் மேலும் கீழ்நோக்கி நகர ஒத்துழைக்க மறுத்தவளாகவும் இருந்தாள். 

அவள் கண்களை உற்றுப் பார்த்தான். "இப்ப என்ன விட போறியா இல்லையா? " என்று மிரட்டுவதைப்    போலிருந்தது. "மாட்டேன்" என  பார்வையாலேயே  பதில் சொன்னான். "விடுடா ! நீ இப்படியேல்லாம் 
தொல்லப்பண்ணுவனு தெரிச்சிருந்தா  இவ்வளவு தூரம் உன்கூட தனியா  
வர சம்மதிச்சிருக்கவே மாட்டேன் "  
என்றாள். "சரி அப்டின்னா ஒரு முத்தம் தா... விட்டுறேன். " என்றவனிடம்  
"ம்ம்ம்... சரி கிட்டவா" என்று இழுத்து  கன்னத்தில் முத்தமிட்டாள். 
"என்னடி! இது, கன்னத்துல குடுக்குற? இதெல்லாம்  முத்தத்திலேயே சேராது, 
உதட்டுல வேணும்.
அதுவும் நீயா விரும்பி தரணும், 
சும்மா ஒப்புக்கு வாய வச்சி எடுக்க கூடாது. " என்றவனை 
அவள் "படுத்துறானே" என முணங்கியப்படி பிறகு தன் சிவந்த உதடுகளால் அவன் உதட்டை கவ்வி மென் அழுத்தத்தில் முத்தமிட்டாள். 
முத்தமிடும் போது அவள் கண்களை மூடிக்கொண்டாள். முழுதாய் நம்பும் ஒருவரை முத்தமிடும் போதுதான் பெண்கள் கண்களை மூடிக்கொள்வார்கள். 
அந்த கணம் தன்னுள் ஏதோ ரசவாதம் நிகழ்வதை அவனால் உணர முடிந்தது.
வற்புறுத்தி வாங்குவதை விட விரும்பி தரும் முத்தத்தில் எதோ ஒரு சுவையும்  கூடியிருந்தது. "சரி இப்ப விடுடா" 
என்றாள். கடைசியாக ஒன்று என மீண்டும் அவள் உதட்டை கவ்வி 
நீண்ட முத்தமிட்டான். முதலில் 
வாங்கி கொண்டாள், சிறிது நேரத்தில் தன்நிலைக்கு வந்தவளாய் 
சுதாகரித்து கொண்டு அவனை தள்ளிவிட்டு, கட்டிலில் இருந்து 
எழுந்து எதிர்பக்கத்திற்கு ஓடிச் சென்று சுவருடன் சாய்ந்து ஓவியம் போல  உறைந்து கொண்டாள். 

மெதுவாக அருகில் சென்றான். காதோரமாய் மெல்லிய குரலில் "நீ இன்னைக்கு தப்பிக்கவே முடியாது" என்றான். "என்ன தொல்லப்பண்ண 
மாட்டேன்னு ப்ரோமிஸ் பண்ணு, இல்லனா விடியும் மட்டும் கட்டிலுக்கு வரமாட்டேன்" என்று உறுதியாக நகரமறுத்தாள். "ஒன்னும் பண்ணமாட்டேன் வா" என்றான். 
சில நொடி சம்பாஷணைக்குப்  
பிறகு, தன்னை கட்டில்வரை 
தூக்கிக் கொண்டு போகச் சொன்னாள். 
தொடாதே என்கிறாள்,
திடீரென தூக்கு என்கிறாள்.
இதை எப்படி அர்த்தப்படுத்திக்  கொள்வதென்று அவனுக்குப்  புரியவில்லை. நெருங்கி வா..., முத்தமிடாதே என்றால் என்ன நியாயம்? புதிரானவள் என்பது 
மட்டும் தெளிவாகப் புரிந்தது.
தூக்கிச் சென்று கட்டிலில் கிடத்தி விட்டு, மூச்சு வாங்கியப்படி அவள் மடியில் சாய்ந்தான்.
அவன் தலையை  வருடியபடியிருந்தாள்.  
"உன்கிட்ட போராடியே டயட் ஆகிட்டேன், கொஞ்சம் கூட உணர்ச்சியே இல்லாதவடி நீ, ஜடம்! "
என்றவனைக் குறும்பாகத் தன் 
குண்டுக் கண்களை உருட்டியப்படி ரசித்து கொண்டிருந்தாள். " நானே சும்மா இருக்க நினைச்சாலும் இந்த குண்டு முழி விட மாட்டேங்குதே...! " என்றான்.
மீண்டும் கண்ணாம்பூச்சி ஆட்டம்  துவங்கியது, அவளை 
இழுத்தணைத்து மெதுவாய் 
கழுத்துக்கு கீழிறங்கி மார்பில்
படர்ந்தபடி மேலாடையை 
களைய முயன்றவனை தடுத்து கொண்டிருந்தாள், போராட்டத்தில் மெதுவாக  களைத்து விட்டான். 
அவள் உடனே தன் இரு கைகளையும்  மார்பிற்குக் குறுக்காக வைத்து  மறைத்துக் கொண்டாள். "அது தான் பார்த்துட்டனே, பிறகு ஏன் மறைக்குற" என்று அவள் கைகளை பிடித்து விலக்கி இல்லை அதுவாக விலகியது, மார்பை முத்தமிட ஆரம்பிக்க, அவளால் அதற்கு மேல் உணர்வுகளை மறைக்க முடியவில்லை. தன்னிலையை இழக்கத் தொடங்கினாள். 
அடக்கிவைத்த ஆசைகள் எல்லாம் அத்துமீறத் தொடங்கின, இருவரும் சரசமாடினார்கள். அவளினுள் முழுமையாக கலக்க விரும்பினான். வேண்டாம் என்றாள்.
அவள் உதட்டிற்கு மிக அருகில் சென்று 
"ஏன் முடியாது" என்று கேட்க 
அவள் "நா யார் உனக்குனு  சொல்லிட்டு என்ன வேணும்னாலும் பண்ணிக்கோ" என்றாள். 

கிட்டதட்ட  அரைமணி நேரமாக 
இதே கேள்வியை திரும்ப,
திரும்ப கேட்டபடியிருந்தாள். 
அவனும் விடுவதாகயில்லை. 
அவளும் மடிவதாகயில்லை.
போராட்டம் தொடர்ந்து கொண்டிருந்தது. இந்த நாடகத்தை  பார்த்துக்கொண்டிருந்த நிலவு ஒரு வேளை சலிப்படைத்திருக் கூடும், வாய்ப்புகள் கிடைக்கும்
போதெல்லாம் மேக கூட்டத்தினுள் மறைந்து கொள்ளப்பார்த்தது. 
அவள் எதை பதிலாக எதிர் பார்க்கின்றாள் என்று இவனுக்குத்  தெரியும். 'நான் உன்னை காதலிக்கிறேன்' என்று கூறினால் போதும். இவ்வளவு கெஞ்சி கூத்தாடத்  தேவையில்லை. எந்த மறுப்பும் 
இன்றி தன்னை முழுமையாக 
தந்து விடுவாள். அந்த வார்த்தைகளுக்கு தான் காத்திருந்தாள். மாலையில் ஆரம்பித்து நடுச்சாமம் வரைக்கும் முயன்று கடைசியில் தோல்வியை ஒப்புக்கொண்டவனாய்,
 " உன் தலவாணிக்கு கீழ பாரு " என்றான். "முடியாது...! நீ திருட்டுப்பய எதுக்கோ பிளான் பண்ணுற" 
என்றாள். "நீ கேட்ட கேள்விக்கு பதில் கிடைக்கும், பிறகு உன் இஷ்டம்" 
என்றுச் சொல்லி விட்டு எதிர்பக்கம் 
திரும்பி படுத்துக் கொண்டான். 
அவள் தலையணையை தூக்கிவிட்டு பார்த்தாள். ஓர் பிங்க் நிற கடிதவுரை, கண்களில் மின்னல் வெட்ட கையிலெடுத்தாள். உள்ளே இரண்டாக மடிக்கப்பட்ட காகிதமொன்று  இருந்தது, பிரித்து படிக்க ஆரம்பித்தாள். அதில் 
"வில் யூ மேரி மீ ? "
என்று மட்டும் எழுதியிருந்தது. 
செல்லக் கோபத்தில் அவளை பார்க்காமல் எதிர்பக்கம் ஒருக்களித்து படுத்திருந்த அவனின் தோளில் கைவைத்து அழுத்தி பிடித்தாள். 
அவள் கண்கள் கலங்கியிருந்தன,
திரும்பியவன் அவளைப் பார்த்து 
 "என் கேள்விக்கு இன்னும் பதில் சொல்லலையே?" என்றான். 
அவன் மார்பில் சாய்ந்து 
அழ ஆரம்பித்தாள். அழுகைக்கு இடையில் முனங்களாக " ஐ லவ் யூ"
என்ற வார்த்தைகள் வெளிப்பட்டன
பதிலுக்கு " ஐ ஹேட் யூ " என்றான். 
" மீ  ட்டு " என்று பதிலுரைத்தாள். சிரிப்பும், அழுகையும், கண்ணீரும் ஒன்று சேர  "ஐ வில் கில் யூ!" என்றப்படி கை முஷ்டியால் 
அவன் நெஞ்சில் குத்த ஆரம்பித்தாள்.  
கடைசியில் இருவரும் குழந்தைகளாகவே மாறிப்போனார்கள். 

***


Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

நரகம்

அங்கு யாரும் புலப்படவில்லை

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I