எங்கே உன் கடவுள் ?

நான் இந்து மதத்தை நேசிப்பவன், தமிழ் மொழியின் மீதும், கலாசாரத்தின் மீதும் மிகுந்த பற்றும் மரியாதையும் உடையவன். கவனிக்க, ஆனால் இவை எதன் மீதும் வெறித்தனமான ஈடுபாடு கொண்டவன் அல்ல., என் நம்பிக்கையும், மரபையும், பண்பாட்டையும் சுயவிமர்சனம் செய்து கொள்வதற்கான சுகந்திரத்தை இந்து மதம் எனக்கு அளித்தது. அதனால் அறிவையும் புரிதலையும் வளர்த்து கொள்ள முடிந்தது. எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு ஆனால் என் கடவுளுக்கு மதமில்லை. மொழி பற்றுண்டு இனவெறியில்லை. "யாதும் ஊரே யாவரும் கேளிர்" எல்லா ஊரும் என் ஊர், எல்லா மொழியும் என் மொழி. எல்லோரும் ஹோமோசெபியன் என்ற கொள்கையில் வாழ்பவன். விடலை பருவத்தில் திடீர் என உதிக்கும் ஞானத்தில் இந்து மதத்தில் உள்ள புராணங்களையும், நம்பிக்கைகளையும் கேலிக்கு உள்ளாக்கி விமர்சிப்பவர்களை பார்க்கும் போது பாவமாக இருக்கும். நானும் " பிக் பேங்க் தியரியை " , "டார்வினின் கூர்ப்பு கொள்கையையும்" , அறிந்து கொண்ட புதிதில் திமிறியபடி பாட்டியுடன் "எங்கே உன் கடவுள்? காட்டுனு" விதண்டாவாதம் செய்தவன் தான். அவள் என்னை பார்த்து புன்னக...