வாசிப்பு

வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் அடிபட்டு அந்த அனுபவங்கள் என்னை பண்படுத்திவிட்டது என்று நினைத்து கொண்டிருந்தேன். புதிதாய் வேறு ஒரு சூழலில் நுழையும் போது அங்கு
எதிர்பாராத விதத்தில் வாழ்க்கை 
புரட்டி போட்டு மிதிக்க ஆரம்பிக்கும். 
" என்ன மயிறு வாழ்க்கைடா? " 
இதுவென்று வெறுத்துபோய் திக்கற்று நிற்கும் போதுதான் உணர்ந்தேன் மரணம் மட்டும் நீ ஓடிக்கொண்டேயிருக்க வேண்டும் 
நின்று புலம்பி கொண்டிருப்பதால் இங்கு ஒன்றும் மாறிவிட போவதில்லை என்பதை. 
அப்படிபட்ட கையறு நிலையில்தான் 
என்னை வழிநடத்தும் குருவாக புத்தகங்கள் அமைந்தன  

இலக்கிய வாசிப்பில் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்தேன் பிறகுதான் புரிந்தது வாழ்க்கையில் பல கேள்விகளுக்கு விடை தேடிக்கொண்டிருக்க கூடாது, 
அதன் போக்கில் நாம் நகர்ந்து விடவேண்டும் என்பதை. 
புத்தகம் என் உற்ற நண்பன் 
அவன் மட்டும் தான் என்னுடன் கடைசி மட்டும் வருவான். 
சோர்ந்து துவண்டு 
விழும் போதெல்லாம் கை 
கொடுத்து எழுப்பிவிடுகிறான். ஹாடோனிஸ்டாக வாழ கற்றுக் கொடுத்தான். இப்பொழுதெல்லாம் வாழ்க்கையை நேசிக்கவும் கொண்டாடவும் ஆரம்பித்து விட்டேன்.

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I