Posts

Showing posts with the label கவிதைகள்

ஓவியன்

வான்கோ தன் காதலிக்கு காதை அறுத்து கொடுக்கவில்லையாம், நிர்கதியான நிலையை அறிந்திருந்தும் கடனைத் திருப்பிக் கேட்ட விலைமாதுக்கு தான்  அறுத்துக் கொடுத்தாராம். அவர் தன்னை சுட்டுத் தற்கொலை செய்து கொள்ளவில்லையாம், யாரோ ஒரு சிறுவனை காப்பாற்றத்தான் அப்படிப் பொய் சொன்னாறாம். அவர் சித்தம் கலங்கியவர் கிடையாதாம், மனிதர்களை  கண்டுப்பயந்து தான் ஒதுங்கி நின்றாராம். நேற்றுக் கனவில் வந்தவர், இப்படி நெடு நேரம் பேசிக்கொண்டிருந்தார். “ஓவியம் உலகை அடக்கும்  உலகம் ஓவியத்தை அடக்கும்  ஓவியன் தன்னை அடக்கி  உலகை ஓவியத்துக்குள் ஒடுக்குவான்." என்ற ஆத்மாநாம் கவிதையை படித்துக் காட்டினேன். சிறு புன்னகை செய்தார். பின்பு சுவற்றில் ஒடுக்கியிருந்த நீலவானில் மாயமானார். 08-03-2021

சிறு சிறு தருணம்

மழை நாளில், சன்னலில் உடலை குறுக்கியப்படி தூறலை ரசிக்கும் பூனைக் குட்டி. யாமத்தில் தழுவிக் கிடக்கும் வெற்றுடல்கள். நாவலின் கடைசி அத்தியாயத்தை எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளன். முதல் குழந்தையை ஸ்பரிக்கும் ஆண். சிறுத் தொட்டியை கடலாக்கிய தங்க மீன். முலையின் மென்மை, குறியின் அழுத்தம், கண்டுணர்ந்த அவனும் அவளும். பிடித்த கதையின் கடைசி வரி, முற்று. முதல் காதல், உதட்டு முத்தம் அவள் வாசனை. மழலையின் இமைக்கா நொடிப் பார்வை, பின் தொடரும் குறுஞ்சிரிப்பு. ராஜாவின் இசை, உன் நினைவு, சிறு புன்னகை, வடியும் கண்ணீர் துளி. குறையொன்றும் இல்லை, நான் வாழ்ந்து விட்டேன். 08-01-2021

வடு

ஓர் இன்ப கவிதை புனைய வேண்டும். பொருத்தமான சொற்களை தேடிக்கொண்டிருந்தேன். உன் நினைவு அடுக்குகளால் நிரப்பப்பட்டிருக்கும்  அகப்பெருவெளியில் நான் எங்கனம் அவற்றை கண்டடைவேன். 07-28-2021

சுவடு

நித்தமும் உன் நினைவுகளை கடந்து தான் அவளுடன் காதலுறுகிறேன். போகத்தின் உச்சத்தில் திளைத்திருக்கும் சமயத்தில்  உன் பெயரைச் சொல்லி அவளை  விளித்திடுவேனோவென்று அஞ்சுகிறேன்!  நீ இடித்து நிர்மூலமாக்கிய குடிசையை அவள் கட்டிக்கொண்டிருக்கிறாள்.  விரைவில் அங்கு குடியேறிவிடுவோம். பிறகு உன் முகவரியை நான் நிரந்தரமாகத் தொலைத்து விடக்கூடும். 07-28-2021

மறந்து விட்டோம்

 அம்மு! கிறுக்கி!  செல்லக்குட்டி! பைத்தியக்காரி!  பொண்டாட்டி! விசரி! தங்கம்! கன்னு குட்டி! இப்பொழுது எல்லாம் உன் பெயரே நினைவில் வருவதில்லை. 26-07-2021

வாழ்

சீனாவில் வரலாறு காணாத வெள்ளம். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் தலைத்தூக்க ஆரம்பித்து விட்டார்கள். பிரான்சில் கொரோனாவின் டெல்டா திரிபு மீண்டும் பரவத்தொடங்கி விட்டதாம். இவைகளை பற்றிய எந்த பிரக்ஜையும் இல்லாமல் முலைபால் அருந்திக் கொண்டிருக்கிறது மழலை. 25-07-2021

ஓருடல்

நேற்று இருவரும் வார்த்தைகளால் ஒருவரை ஒருவர் கடுமையாகத்  தாக்கிக்கொண்டோம். சோர்ந்து, காயத்துடன் வெறுத்து ஒதுங்கிச் சென்றோம். அவ்வளவு தான், முடித்துக்கொள்ளலாம் என்று தீர்மானித்துக் கொண்டேன். பிறகு மறந்து விட்டோம். நான் உன்னை இப்பொழுது முத்தமிட்டுக் கொண்டிருக்கிறேன். 07-24-2021

பசி

அன்று முழு நாள் பட்டினி நீரை மண்டி விட்டு படுத்திருந்தோம். சாமத்தில் அப்பா வந்தார், கையிலிருந்த கால் கிலோ  மாவை அம்மாவிடம் நீட்டினார். அவள் விறகடுப்பில் புகைந்து கொண்டே ரொட்டிச் சுட்டாள். சம்பல் செய்யத் தேங்காயில்லை. வெங்காயம், புளி, மீந்து போயிருந்த இரண்டு காய்ந்த மிளகாய் வைத்து ஏதோ அம்மியில் மாயம் செய்தாள். அதற்கு பிறகு, நான் அது போன்ற ஒரு சுவையான உணவை எங்குமே சாப்பிட்டதில்லை. 23-07-2021

சபிக்கப்பட்டவன்

காதலை நான் போகிக்க நினைக்கும் போதெல்லாம் என்னை வன்புணர்ந்து தூக்கியெறிந்து விடுகிறது. சபிக்கப்பட்ட காதலின் தொடர்ச்சியாக...., உன் முன்னால் நான் உருக்குலைந்துக் கொண்டிருக்கிறேன். 22-07-2021

எனக்கென ஒரு கனவிருந்தது...

Image
எனக்கென ஒரு கனவிருந்தது.. எனக்கென்றே ஒரு காதல் இருந்தது.. எனக்கென்றே ஒரு வாழ்விருந்தது.. எனக்கென்றே எல்லாமும் இருந்தது.. அப்படித்தான் நம்பிக்கொண்டிருந்தேன்.. எல்லாமும் யார்கையிலோ போகும் வரை. அவ்வளவு இலகுவாய் எனக்கென்று எதையும் அபகரிக்கத் தெரிந்திருக்கவே இல்லை எனக்கு. அன்பே ! நீ கூட எனக்கென்று இல்லாமல் போன பிறகு தான் உலகம் அத்தனை கொடூரமாய் எனக்குத் தெரிந்தது. ஆனாலும் முட்பாதைகளில் வலிச் சுமந்து நடக்கும்போது என் கால்களுக்கு பலம் கிடைத்தது. இப்போதெல்லாம் எனக்காக என்று ஒரு வாழ்விருக்கிறது. எனக்காக என்று ஒரு புன்னகை இருக்கிறது. என்னிடம் மொத்தமாய் ஒரு காதல் இருக்கிறது. என் அளவுக்கு மிஞ்சியதாய் பேரன்பும் இருக்கிறது. ஆனாலும்.. எங்கோ ஒரு இடத்தில் அவற்றை கொட்டிவிடப்பயத்தில் அப்படியே மூட்டைச் சுமந்து பயணிக்கிறேன். இப்போதெல்லாம சுமைகள் வலிகள் என ஏதுமிருப்பதில்லை. எதையும் தேடி எனக்கென ஏங்காத போது எல்லாமும் நிறைந்திருக்கிறது என்னிடம். அன்பென்ற பூட்டுக்கொண்டு பூட்டிவைத்திருக்கிறேன் மொத்தமாய். நான் வாழ்ந்து விடுகிறேன் இப்படியே.! எனக்காக ஒரு அன்பை பார்த்து காத்திருக்க இப்போதெல்லாம் முடியவே ...
Image
கடிகாரத்தை பார்க்கப்  பிடிக்கவில்லை  நாட்காட்டியை வெறுக்க  ஆரம்பித்துவிட்டேன். வருடங்கள் சலிப்பை  ஏற்படுத்துகின்றன. காலம் சுழியமாக உறைந்திருக்கும்  இடத்தில் வாழப்பிடிக்கிறது. நான் ஒரு முட்டாள், அங்கு தான்  வாழ்ந்து கொண்டிருக்கிறேன். மனிதர்கள் தான் உலகத்தின்   இயல்பை மாற்றிவிட்டார்கள். 10-05-2020 நரேஷ்
நம்பிக்கை, வாக்குறுதிகள்,  அலங்கார வார்த்தைகள்.  இவையெல்லாம் நீ எனக்கு தந்தவை.  நீங்கி செல்லும் போது உன்னுடன் எடுத்துச்செல்ல மறந்துவிட்டாய்.    இந்த பெட்டி நிறைய அவற்றை தான் நிரப்பிவைத்திருக்கிறேன்.  வாங்கிக்கொள். வேறு யாருக்காவது கொடுக்க உனக்கு தேவைப்படலாம்.  உன் நினைவுகளை மட்டும் திருப்பி கேட்காதே! அவற்றை எனக்குள்ளேயே தொலைத்துவிட்டேன்.  கடைசியாக ஓர் உதவி.... நடைப்பிணம் என்பதை ஊரார்  அறிந்து கொள்ளும் முன்,  என் உயிரை மட்டும் திருப்பி  கொடுத்துவிடு!
நம் இறந்த காலத்தை எதிர்காலத்தில் சந்தித்தேன். அங்கே நீயும் நானும்  நாம் கற்பனை செய்தப்படியே வாழ்ந்து கொண்டிருந்தோம்.