சிறு சிறு தருணம்

மழை நாளில், சன்னலில் உடலை குறுக்கியப்படி தூறலை ரசிக்கும் பூனைக் குட்டி.

யாமத்தில் தழுவிக் கிடக்கும் வெற்றுடல்கள்.

நாவலின் கடைசி அத்தியாயத்தை
எழுதிக்கொண்டிருக்கும்
எழுத்தாளன்.

முதல் குழந்தையை
ஸ்பரிக்கும் ஆண்.

சிறுத் தொட்டியை கடலாக்கிய
தங்க மீன்.

முலையின் மென்மை, குறியின் அழுத்தம், கண்டுணர்ந்த அவனும் அவளும்.

பிடித்த கதையின் கடைசி வரி,
முற்று.

முதல் காதல், உதட்டு முத்தம்
அவள் வாசனை.

மழலையின் இமைக்கா நொடிப்
பார்வை, பின் தொடரும்
குறுஞ்சிரிப்பு.

ராஜாவின் இசை, உன் நினைவு,
சிறு புன்னகை, வடியும்
கண்ணீர் துளி.

குறையொன்றும் இல்லை,
நான் வாழ்ந்து விட்டேன்.

08-01-2021

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I