Scam1992: The Harshad Mehta Story (2020)

1992 ஆம் ஆண்டு இந்திய வரலாற்றில் நிகழ்ந்த பெரும் பணமோசடி வெளிச்சத்திற்கு வருகிறது. அதனை 'scam' என்ற ஆங்கிலப் பதத்தில் சொன்னால் இன்னும் பொருத்தமாகயிருக்கும். இந்த ஸ்கெமின் மதிப்பு கிட்டத்தட்ட நூறு பில்லியன் இந்திய ரூபாய்கள் ஆகும். ஹர்ஷத் மேத்தா என்ற பெயரை நம்மில் பலர் இந்த வெப்சீரிஸ் வெளியாகியிருக்கும் வரைக்கும் கேள்விப்பட்டிருக்கமாட்டோம். தொண்ணுறுகளில் மும்பை பங்குச் சந்தையின் முடிச்சூடா மன்னன். இத்தொடரை பார்த்து முடித்த பிறகு வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு இவரை மறக்காது. இந்தியாவில் வெளியான "Paatal Lok, Sacred Games" போன்ற சீரிஸ்களுக்கு பிறகு நான் மிகவும் ரசித்து பார்த்த தொடர் 'Scam 1992' பங்குச் சந்தை வியாபாரம் சார்ந்த கதைக்களம். அதில் இடம் பெற்ற மோசடியை பற்றியக் கதை. வணிகம் சார்ந்தது, சிக்கலான மோசடி இதை எல்லோருக்கும் புரியும் படியாக எடுத்துள்ளதுதான் தொடரின் சிறப்பே. யார் இந்த ஹர்ஷத் சாந்தி லால் மேத்தா? நிஜமாகவே அவர் கிரிமினலா? இல்லை, பலிக்கடாவாக்கப்பட்டவரா? அப்படி அவர் செய்த மோசடித்தான் என்ன என்பதை மிகச் சுருக்கமாக சொல்கிறேன். குஜராத்தை பூர்...