உருமாற்றம்
உருமாற்றம் (The Metamorphosis) ஃப்ரன்ஸ் காஃப்கா (1883 - 1924) மொழிப்பெயர்ப்பு நாவல் "கனவுத்தன்மையை கொண்ட என் அகவாழ்க்கையைச் சித்தரிக்கும் உணர்வு பிற எல்லாவற்றையும் பின்னுக்கு தள்ளிவிட்டது." 1914 ஆம் ஆண்டு காஃப்கா எழுதிய நாட்குறிப்பிலிருந்து. *** இது ஒரு வித்தியாசமான நாவல்; ஒரு நாள் காலையில் படுக்கையிலிருந்து விழித்தெழும் க்ரகர் செம்சா (கதையின் நாயகன்) தான் ஒரு ராட்சத பூச்சியாக உருமாறியிருப்பதை கண்டுணர்ந்து மிகுந்த அதிர்ச்சிக்கும், குழப்பத்துக்கும் உள்ளாகின்றான். இந்த திடீர் மாற்றத்திற்கான காரணம் எதுவும் அவனுக்கு புலப்படவில்லை. ஒருவேளை கனவாகயிருக்க கூடும் அல்லது தற்காலிக மாற்றம் தான். நான் எழுந்து கொண்டால் பழைய நிலைக்கு என் உடல் மீண்டும் வந்து விடும். எனப்பலவாறு சிந்தனைகள் அலைபாய வயிற்று பகுதி கூரையை பார்க்க கட்டிலில் கிடந்தவன். உடலை திருப்பி எழுந்து கொள்ள முடியாமல் தடுமாறி கொண்டிருந்தான். புதிய பூச்சி உடல் அக்கணம் வரைக்கும் முழுதாக க்ரகர் செம்சாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கவில்லை. கடிகாரமுட்கள் சுழன்று நேரம் கடந...