காதலிக்கு சொல்லக்கூடாத கதை
நான் பத்தாம் அல்லது பதினோராம் வகுப்பு படிக்கும் போது இந்து சமயப்பாடத்தில் இளையான்குடிமாற நாயனாரின் கதையொன்று இருந்தது. எனக்கு ரொம்ப பிடிக்கும். முதலில் கதையை சொல்லிடுறேன். இளையான்குடிமாறநாயனார் மிகத்தீவிரமான சிவபக்தர். எம்பெருமான் மீது மிகுந்த அன்புடையவர். பசியென்றுவரும் சிவனடியார்களுக்கு இல்லன்னு சொல்லாம வயிறார சாப்பாடு போட்டு அனுப்புவார். எந்த சூழ்நிலையிலும் தவறாமல் அப்பணியினை மேற்கொண்டு வருகிறார். கடவுளின் அருளால் அவருக்கு மேலும், மேலும் செல்வமும் வளமும் பெருகுது. இப்படியெல்லாம் சுமூகமாக போய்ட்டு இருக்கும் போது சிவபெருமான் அவரின் பக்தியை சோதிச்சு பார்க்க முடிவுபண்ணுறாரு. சிவனுக்கு இதுதான் வேலையே! தன்னுடைய தீவிர பக்தர்களுக்கு தாங்க முடியாத அளவுக்கு கஷ்டத்தை கொடுத்து டார்ச்சர் பண்ணுவாரு. இவர் கொடுக்குற கஷ்டத்தை தாங்க முடியாமல் அவர்கள் வேறு மதத்துக்கு மாறிப்போகாமல் இருந்தது பெரிய விஷயம். அந்த அளவுக்கு டார்ச்சர் லெவல் இருக்கும். ஆனால் இதையெல்லாம் காரணமாக சொல்லி நாயன்மார்கள் போகமாட்டாங்க. சிவன் மேல் தீராக்காதல் அவர்களுக்கு. (ஆனால் குடியானவர்கள் யாரும் அப்படி போகவும் முடி...